இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

6125
Getty Images

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில்…

கடந்த செவ்வாய்க்கிழமை (16) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரியிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இவ்வாறு செய்தி ஒன்றினை வெளியிட்டியிருந்தது.

“(இந்திய கிரிக்கெட் அணியின்) தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிஸ்டன், மஹேல ஜயவர்தன, டொம் மூடி மற்றும் விரேந்திர ஷேவாக் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கலாம்.” 

இந்த செய்தியின் அடிப்படையிலேயே மஹேல ஜயவர்தன இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக்கள் இருப்பது தெரியவருகின்றது

.பி.எல். போட்டிகளின் மூலம் தனக்கு பயிற்சியாளருக்கான ஆற்றல் உள்ளது என்பதை நிரூபித்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, தான் .பி.எல். போட்டிகளில் பயிற்சியாளராக செயற்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வெல்ல உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

சம்பியன் அணியை கௌரவிக்கும் இங்கிலாந்து

கடந்த வாரம் நிறைவுற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற…

இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஒருவர் குறைந்தது மூன்று வருடங்கள் .பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது அணியின் பயிற்சியாளராக வரக்கூடிய நபருக்கு இருக்க வேண்டிய கட்டாய தகைமைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மஹேல இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் போது அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதேநேரம், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இரண்டு வருடங்கள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் அல்லது மூன்று வருடங்கள் அங்கத்துவ நாடு ஒன்றினையோ அல்லது A அணி ஒன்றினையோ பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது தலைமை பயிற்சியாளராக வர விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டிய வேறு தகுதிகளாக குறிப்பிட்டிருக்கின்றது.

அதேவேளை, குறித்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் என்பவற்றிலும் ஆடியிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது – முன்னாள் நடுவர்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் முக்கிய தருணத்தில் நடுவர்கள்…

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கேரி கிஸ்டன் இந்திய அணி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் தலைமைப் பயிற்சியாளராக காணப்பட்டிருந்தார். கேரி கிஸ்டன் தற்போது .பி.எல். அணிகளில் ஒன்றான றோயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டொம் மூடி மற்றும் விரேந்திர ஷேவாக் ஆகியோர் 2017ஆம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராவி சாஸ்திரி தெரிவு செய்யப்பட்ட போது தலைமை பயிற்சியாளருக்கான ஏனைய விண்ணப்பதாரர்களாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தற்போது தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் ஆளுகையில் காணப்படும் இந்திய கிரிக்கெட் அணியில் துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சேய் பங்காரும், பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணும், களத்தடுப்பு பயிற்சியாளராக ஆர். சிறிதரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தமது அணியின் பயிற்சியாளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை 30 என தெரிவித்துள்ளது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<