சுகததாச அரங்கில் நடைபெற்ற மேல் மாகாண மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் நியுஸ்டீட் மகளிர் கல்லூரி (Newstead Girls College) மற்றும் புனித பேதுரு கல்லூரி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றன.
இந்த போட்டியின் 3 ஆவது மற்றும் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை (12) கம்பஹா திருச் சிலுவைக் கல்லூரியை (Holy Cross College) பின்தள்ளி நீர்கொழும்பு நியுஸ்டீட் மகளிர் கல்லூரி 125 புள்ளிகளை பெற்று பெண்கள் பிரிவில் சம்பியனானது. நெருக்கமான போட்டியை கொடுத்த திருச் சிலுவைக் கல்லூரி 120 புள்ளிகளை பெற்றது.
ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியாக புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரி போட்டி இருந்தது. 2019 மாபெரும் கிரிக்கெட் போட்டி போலன்றி புனித பேதுரு கல்லுரி தனது போட்டியாளரை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தள்ள முடிந்தது. இதன் மூலம் அந்தக் கல்லூரி 2019 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண ஆண்கள் சம்பியன் பட்டத்தை வென்றது.
உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கைக்குத் தோல்வி
நீளம் பாய்தல் போட்டியில் பாதுக்க ஸ்ரீ ஜயரத்ன மத்திய மஹா வித்தியாலயத்தின் W D சிசது இந்த ஆண்டின் சிறந்த வீரர் பட்டத்தை தட்டிச் சென்றார். சாதனை முறியடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர் 7.35 மீற்றர் தூரம் பாய்ந்ததன் மூலம் இந்த கௌரவத்தை பெற்றதோடு இது போட்டிச் சாதனையும் ஆகும்.
அதே போன்று பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக ராஜகிரிய, கேட்வே கல்லுரியின் சதீபா ஹென்டர்ஸன் கௌரவம் பெற்றார். அவரும் தனது நீளம் பாய்தல் போட்டியில் நடுவர்களின் அவதானத்தை வென்றார். அவர் புதிய போட்டிச் சாதனையுடன் 5.84 மீற்றர் தூரம் பாய்ந்து 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான சிறந்த திறமையை வெளிப்படுத்தியவராக பட்டம் வென்றார்.
மூன்று நாட்கள் முடிவில் எட்ட முடியாத 1059 புள்ளிகளை பெற்ற கொழும்பு 2019 ஆண்டின் வலய சம்பியன் பட்டத்தை வென்றது. மொத்தம் 553 புள்ளிகளை பெற்ற நீர்கொழும்பு 2 ஆவது இடத்தையும் 325 புள்ளிகளுடன் பிலியந்தலை 3 ஆவது இடத்தையும் பெற்றன.
இந்த ஆண்டு மாகாண மட்டப் போட்டி உயர் மட்டத்திலான போட்டிகளாக அமைந்ததோடு 53 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அதேபோன்று 3 போட்டிச் சாதனைகள் சமப்படுத்தப்பட்டன.
குழு நிலைப் போட்டிகளில் புனித பேதுரு கல்லூரி அதிக புள்ளிகளை வென்றதோடு, அந்தக் கல்லூரி மொத்தம் 49 புள்ளிகளுடன் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த புள்ளிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கம்பஹா, திருச் சிலுவைக் கல்லூரி பெண்கள் குழுநிலைப் போட்டிகளில் 27 புள்ளிகளுடன் வெற்றி பெற்றது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<