Home Tamil இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி

இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி

981

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று (09) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்துவரும் அணியை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி அபார வெற்றியீட்டியது. 

தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி சார்பாக ருபின் ஹேர்மன் துடுப்பாட்டத்திலும், பேயர்ஸ் ஸ்வேன்போல் பந்துவீச்சிலும் அசத்தியிருந்தனர். 

இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு கெதிராக….

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

இன்று (09) நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

பிரிட்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 16 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க (08) பேயர்ஸ் ஸ்வேன்போலின் பந்துவீச்சில், LBW முறையில் ஆட்டமிழந்தார். 

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் (08), அணித் தலைவர் சரித் அசலங்க (09), சம்மு அஷான் (10), அஷேன் பண்டார (01) ஆகியோர் பேயர்ஸ் ஸ்வேன்போலின் வேகப்பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, ஆரம்பத்திலேயே 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி 46 ஓட்டங்களுடன் டிலானனோ போட்கீசரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் அரைச்சதம் பெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். 

பின்னர் ஜோடி சேர்ந்த லஹிரு மதுஷங்க மற்றும் ரமேஷ்  மெண்டிஸ் ஆகியோர் எதிரணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 7ஆவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, லஹிரு மதுஷங்க 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை எடுத்தது. 

இதேநேரம் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணியின் பந்துவீச்சில் பேயர்ஸ் ஸ்வேன்போல் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பின்னர் 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி துடுப்பாடக் களமிறங்கியது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லெசிகோ செனொக்வானே மற்றும் கபிலோ செகுகுனே ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, செனொக்வானே 20 ஓட்டங்களுடனும், கபிலோ செகுகுனே 49 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து வந்த அணித் தலைவர் நீல் பிரேண்ட் 17 ஓட்டங்களுடனும், இஸ்மாயீல் கபில்டின் 11 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிலானனோ போட்கீசர் (24 ஓட்டங்கள்) ரன்-அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.

இப்படியான ஒரு நிலையில், ருபின் ஹேர்மனுடன் 7ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பேயர்ஸ் ஸ்வேன்போல் நிதானமாக துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

இறுதியில் ருபின் ஹேர்மன் பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்தது. 

இதன்படி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, 47 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது. இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ, ரமேஷ்  மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

“குசல் மெண்டிஸ் திறமையான துடுப்பாட்ட வீரர்” – டி மெல்

உலகக் கிண்ணத்தில் விளையாடிய இலங்கை….

இது இவ்வாறிருக்க, இலங்கை வளர்ந்துவரும் மற்றும் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 8ஆவது லீக் போட்டி நாளை (10) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
237/8 (50)

University Sports South Africa XI
238/8 (47)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Beyers Swanepoel 8 11 1 0 72.73
Sandun Weerakkody c S Mallie b Delano Potgieter 46 53 9 0 86.79
Kamindu Mendis c & b Beyers Swanepoel 8 8 1 0 100.00
Charith Asalanka lbw b Beyers Swanepoel 9 14 2 0 64.29
Sammu Ashan c Rubin Hermann b Beyers Swanepoel 10 17 1 0 58.82
Ashen Bandara c Neil Brand b Beyers Swanepoel 1 4 0 0 25.00
Ramesh Mendis not out 97 111 8 3 87.39
Lahiru Madushanka lbw b Neil Brand 32 57 1 0 56.14
Amila Aponso c Isma-eel Gafieldien b Ruan de Swardt 9 14 0 0 64.29
Asitha Fernando not out 10 11 1 0 90.91


Extras 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 237/8 (50 Overs, RR: 4.74)
Fall of Wickets 1-16 (2.3) Pathum Nissanka, 2-24 (4.1) Kamindu Mendis, 3-46 (8.2) Charith Asalanka, 4-64 (12.6) Sammu Ashan, 5-70 (14.3) Ashen Bandara, 6-87 (20.4) Sandun Weerakkody, 7-152 (37.6) Lahiru Madushanka, 8-177 (44.4) Amila Aponso,

Bowling O M R W Econ
Beyers Swanepoel 10 1 36 5 3.60
Gideon Peters 10 0 78 0 7.80
Ruan de Swardt 10 2 51 1 5.10
Delano Potgieter 7 0 29 1 4.14
Siya Simetu 9 2 29 0 3.22
Neil Brand 4 0 11 1 2.75


Batsmen R B 4s 6s SR
Lesego Senokwane lbw b Amila Aponso 20 50 2 0 40.00
Kabelo Sekhukhune c Charith Asalanka b Ramesh Mendis 49 55 9 0 89.09
Neil Brand c Sammu Ashan b Kamindu Mendis 17 18 2 0 94.44
Isma-eel Gafieldien c Sandun Weerakkody b Kamindu Mendis 11 22 1 0 50.00
Delano Potgieter run out (Sandun Weerakkody) 24 18 4 1 133.33
Ruan de Swardt lbw b Ramesh Mendis 12 15 2 0 80.00
Rubin Hermann b Asitha Fernando 70 65 5 4 107.69
Beyers Swanepoel b Asitha Fernando 20 35 3 0 57.14
K Leokaoke not out 5 6 0 0 83.33
Siya Simetu not out 0 0 0 0 0.00


Extras 10 (b 0 , lb 4 , nb 2, w 4, pen 0)
Total 238/8 (47 Overs, RR: 5.06)
Fall of Wickets 1-70 (15.6) Lesego Senokwane, 2-78 (18.1) Kabelo Sekhukhune, 3-100 (23.1) Neil Brand, 4-107 (25.1) Isma-eel Gafieldien, 5-124 (28.3) Ruan de Swardt, 6-138 (30.3) Delano Potgieter, 7-197 (42.6) Beyers Swanepoel, 8-237 (46.6) Rubin Hermann,

Bowling O M R W Econ
Asitha Fernando 9 1 37 2 4.11
Dilshan Madushanka 3 0 34 0 11.33
Amila Aponso 9 0 40 1 4.44
Ramesh Mendis 10 3 31 2 3.10
Kamindu Mendis 8 0 65 2 8.12
Charith Asalanka 5 0 14 0 2.80
Sammu Ashan 3 0 13 0 4.33



முடிவு-தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<