இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் லீட்ஸ் – ஹெடிங்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 44 ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மாவின் சாதனை சதத்தின் உதவியுடன் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி அஞ்செலோ மெதிவ்ஸின் சதம் மற்றும் லஹிரு திரிமான்னவின் நிதானமான அரைச்சதம் என்பற்றின் ஊடாக 265 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. குறித்த வெற்றியிலக்கினை நோக்கிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியிலக்கை அடைந்தது.
Photos: Sri Lanka vs India | ICC Cricket World Cup 2019 – Match 44
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டத்தை பொருத்தவரை சற்று சறுக்கலுடன் ஆரம்பித்திருந்தது. குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஓட்டங்களை பெற முயற்சித்த போதிலும், இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரிட் பும்ரா இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற்றத்துக்குள்ளாக்கினார்.
முதல் இரண்டு ஓவர்களிலும் எதிரணிக்கு ஓட்டங்களை வழங்காமல் திமுத் கருணாரத்னவின் விக்கெட்டினை வீழ்த்திய பும்ரா, தொடர்ச்சியாக குசல் பெரேராவின் விக்கெட்டினை வீழ்த்தி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்பினார்.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, லஹிரு திரிமான்னே, இசுரு உதான, லசித் மாலிங்க, கசுன் ராஜித
இந்திய அணி
ரோஹித் சர்மா, கே.எல்.ராஹுல், விராட் கோஹ்லி (தலைவர்), ரிஷப் பண்ட், மகேந்திரசிங் டோனி, டினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, குல்டீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா
தொடர்ந்து வருகைதந்த இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ, ஓட்டங்களை பெற ஆரம்பிக்க, மறுமுனையில் வருகைதந்த குசல் மெண்டிஸ் ஜடேஜாவின் பந்தில் விக்கெட்டினை பறிகொடுக்க, அவிஷ்க பெர்னாண்டோவும் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட் வீழ்த்தப்பட இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு தங்களுடைய முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களையும் இழந்தது.
IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்
உலகளாவிய ரீதியில் நடைபெறும் சர்வதேச லீக் போட்டிகளில்…..
இவ்வாறு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, அனுபவ துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறப்பானதும், நிதானமானதுமான இணைப்பாட்டத்தை பகிர அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலுசேர்ந்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 124 ஓட்டங்களை பகிர்ந்தனர். துரதிஷ்டவசமாக அரைச்சதம் கடந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்த லஹிரு திரிமான்ன, குல்தீப் யாதவின் சுழலில் ஆட்டமிழந்தார்.
எனினும், தொடர்ச்சியாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தை பதிவுசெய்ததுடன், இந்த சதம் இந்திய அணிக்கு எதிராக அவர் பெற்ற அவரது மூன்றாவது சதமாகவும் மாறியது. ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வரை மெதிவ்ஸ் போராடி 113 ஓட்டங்களையும், கடைசி நேரத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய தனன்ஜய டி சில்வா 29 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணியை பொருத்தவரை பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும் ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், இலங்கை அணி நிர்ணயித்திருந்த வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோரின் சிறப்பான சதங்களின் ஊடாக 43.3 ஓவர்கள் நிறைவில் எவ்வித மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்காக 180 ஓட்டங்களை பகிர்ந்திருந்த ராஹுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி, இந்தப் போட்டியிலும் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது சத இணைப்பாட்டத்தை பெற்றக்கொண்டனர். அதுமாத்திரமின்றி ரோஹித் சர்மா சதம், மறுமுனையில் ராஹுல் அரைச்சதம் கடக்க இந்திய அணி சார்பாக உலகக் கிண்ணத்தில் ஆரம்ப விக்கெட்டுக்காக அதிகூடிய இணைப்பாட்ட (189) சாதனையை இவர்கள் பகிர்ந்தனர்.
இதில் துரதிஷ்டவசமாக 103 ஓட்டங்களை பெற்றிருந்த ரோஹித் சர்மா, கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் அஞ்செலொ மெதிவ்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறு இந்த உலகக் கிண்ணத்தில் 5 ஆவது சதத்தை கடந்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிகூடிய சதம் விளாசிய சங்கக்காரவின் (4 சதங்கள் 2015 ஆம் ஆண்டு) சாதனையை முறியடித்ததுடன், உலகக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய சதங்கள் பெற்ற சச்சினின் (6 சதங்கள்) சாதனையையும் சமப்படுத்தினார்.
ரோஹித் சர்மாவின் ஆட்டமிழப்பின் பின்னர், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கே.எல்.ராஹுல் உலகக் கிண்ணத்தில் தன்னுடைய முதல் சதத்தையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் சதம் பெற்ற மூன்றாவது சந்தர்ப்பமாக இவர்களது சதம் பதிவானது. இதற்கு முன்னர், இலங்கை அணியின் திலகரட்ன டில்ஷான் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இரண்டு முறை சதங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
“உலகக் கிண்ணம் சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது” – அவிஷ்க
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் இளம்….
இவ்வாறு, சதங்கள் மற்றும் சாதனைகளுடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ராஹுல் மற்றும் விராட் கோஹ்லியின் இரண்டாவது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நெருங்கிய போதும், மாலிங்க இறுதி நேரத்தில் ராஹுலின் விக்கெட்டினை வீழ்த்தி உலகக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் வசீம் அக்ரமை பின்தள்ளி (55) மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாட வருகைதந்த ரிஷப் பண்ட், இசுரு உதானவின் பந்துவீச்சில் வந்தவேகத்தில் ஆட்டமிழந்தாலும், இந்திய அணி விராட் கோஹ்லியின் துடுப்பாட்டத்துடன் இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி, தங்களுடைய இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 15 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்தால், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | c MS Dhoni b Jasprit Bumrah | 10 | 17 | 2 | 0 | 58.82 |
Kusal Perera | c MS Dhoni b Jasprit Bumrah | 18 | 14 | 3 | 0 | 128.57 |
Avishka Fernando | c MS Dhoni b Hardik Pandya | 20 | 21 | 4 | 0 | 95.24 |
Kusal Mendis | st MS Dhoni b Ravindra Jadeja | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Angelo Mathews | c Rohit Sharma b Jasprit Bumrah | 113 | 128 | 10 | 2 | 88.28 |
Lahiru Thirimanne | c Ravindra Jadeja b Kuldeep Yadav | 53 | 68 | 4 | 0 | 77.94 |
Dhananjaya de Silva | not out | 29 | 36 | 1 | 0 | 80.56 |
Thisara Perera | c Hardik Pandya b Bhuvneshwar Kumar | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Isuru Udana | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 15 (b 4 , lb 2 , nb 1, w 8, pen 0) |
Total | 264/7 (50 Overs, RR: 5.28) |
Fall of Wickets | 1-17 (3.4) Dimuth Karunaratne, 2-40 (7.1) Kusal Perera, 3-53 (10.4) Kusal Mendis, 4-55 (11.4) Avishka Fernando, 5-179 (37.5) Lahiru Thirimanne, 6-253 (48.2) Angelo Mathews, 7-260 (49.2) Thisara Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 10 | 0 | 73 | 1 | 7.30 | |
Jasprit Bumrah | 10 | 2 | 37 | 3 | 3.70 | |
Hardik Pandya | 10 | 0 | 50 | 1 | 5.00 | |
Ravindra Jadeja | 10 | 0 | 40 | 1 | 4.00 | |
Kuldeep Yadav | 10 | 0 | 58 | 1 | 5.80 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
KL Rahul | c Kusal Perera b Lasith Malinga | 111 | 118 | 11 | 1 | 94.07 |
Rohit Sharma | c Angelo Mathews b Kasun Rajitha | 103 | 94 | 14 | 2 | 109.57 |
Virat Kohli | not out | 34 | 41 | 3 | 0 | 82.93 |
Rishab Pant | lbw b Isuru Udana | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Hardik Pandya | not out | 7 | 4 | 1 | 0 | 175.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0) |
Total | 265/3 (43.3 Overs, RR: 6.09) |
Fall of Wickets | 1-189 (30.1) Rohit Sharma, 2-244 (40.6) KL Rahul, 3-253 (41.6) Rishab Pant, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Malinga | 10 | 1 | 82 | 1 | 8.20 | |
Kasun Rajitha | 8 | 0 | 47 | 1 | 5.88 | |
Isuru Udana | 9.3 | 0 | 50 | 1 | 5.38 | |
Thisara Perera | 10 | 0 | 34 | 0 | 3.40 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 51 | 0 | 8.50 |