கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த ஆட்டம் இன்று (4) லீட்ஸ் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார்.
19 வயதின்கீழ் வீரர்களுக்கான மாகாண ஒருநாள் தொடர் இம்மாதம் ஆரம்பம்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 19 வயதின்….
இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரேயொரு வெற்றியுடன் காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்று வாய்ப்பினை இழந்திருப்பதால் இரண்டு வெற்றிகளுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரை நிறைவு செய்யும் நோக்குடன் களமிறங்கியது. இதேவேளை, இப்போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எவின் லூயிஸ் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் சுனில் அம்பிரிஸ் மற்றும் ஷன்னோன் கேப்ரியல் ஆகியோருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி
கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், சாய் ஹோப், சிம்ரோன் ஹெட்மேயர், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வைட், பேபியன் ஆலன், செல்டோன் கொல்ட்ரல், ஒசானே தோமஸ், கேமர் ரோச்
இதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இதுவரையில் வெற்றிகள் எதனையும் பதிவு செய்யாத ஆப்கானிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்று உலகக் கிண்ணத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்தது. இப்போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தவகையில் குல்படின் நயீப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஹமிட் ஹஸன் மற்றும் ஹஸ்மத்துல்லா சஹிதி ஆகியோருக்கு பதிலாக தவ்லத் சத்ரான் மற்றும் சயேத் சிர்ஷாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி
றஹ்மத் ஷாஹ், குல்படின் நயீப் (அணித்தலைவர்), அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, சமியுல்லா சின்வாரி, நஜிபுல்லா சத்ரான், இக்ராம் அலி கில், ரஷீத் கான், தவ்லத் சத்ரான், சயேத் சிர்ஷாத், முஜிபுர் ரஹ்மான்
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த கிறிஸ் கெயில் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எவின் லூயிஸ் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட 5ஆவது அரைச்சதத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வலுச்சேர்த்தார். பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய எவின் லூயிஸ் 78 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தொடர்ந்து ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அரைச்சதங்கள் பெற்று வலுச்சேர்த்தனர். அதில், ஷாய் ஹோப் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற மூன்றாவது அரைச்சதத்துடன் 92 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றார். மேலும் இது ஷாய் ஹோப்பிற்கு 13ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் அமைந்தது. அதேவேளை நிகோலஸ் பூரன் அவரின் 2ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 43 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இங்கிலாந்து எல்லா கோணங்களிலும் சிறப்பாக ஆடியது: வில்லியம்சன்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்….
இவர்களோடு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஷிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்கள் பெற்று உதவினர்.
இந்த துடுப்பாட்ட உதவியோடு மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 34 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்திருந்தார். இதேநேரம் ஷிம்ரோன் ஹெட்மேயர் 39 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக தவ்லாத் சத்ரான் 2 விக்கெட்டுக்களையும் சயேத் சிர்ஷாத், மொஹமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 312 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 288 ஓட்டங்கள் மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஒருநாள் போட்டிகளில் கன்னி அரைச்சதம் பெற்ற இக்ராம் அலி கில் 93 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், றஹ்மத் ஷாஹ் அவரின் 15ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 78 பந்துகளில் 10 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்தோடு, அஸ்கர் ஆப்கான் 32 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்று போராட்டம் காண்பித்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக, கார்லோஸ் ப்ராத்வைட் 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், கேமர் ரோச் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப் அவரின் சிறந்த துடுப்பாட்டத்திற்காக தெரிவாகியிருந்தார்.
அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார் ராயுடு
இந்திய கிரிக்கெட் அணியின் மத்தியவரிசை…
இப்போட்டியில் கிடைத்த தோல்வியுடன் ஆப்கானிஸ்தான் அணி துரதிஷ்டவசமாக இந்த உலகக் கிண்ணத் தொடரை வெற்றிகள் எதனையும் பதிவு செய்யாத நிலையில் முடித்துக் கொள்கின்றது.
அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியோடு இரண்டு வெற்றிகள் பெற்று 5 புள்ளிகளுடன் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரை முடித்துக் கொள்கின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chris Gayle | c Ikram Alikhil b Dawlat Zadran | 7 | 18 | 1 | 0 | 38.89 |
Evin Lewis | c Mohammad Nabi b Rashid Khan | 58 | 78 | 6 | 2 | 74.36 |
Shai Hope | c Rashid Khan b Mohammad Nabi | 77 | 92 | 6 | 2 | 83.70 |
Shimron Hetmyer | c Noor Ali Zadran b Dawlat Zadran | 39 | 31 | 3 | 2 | 125.81 |
Nicholas Pooran | run out () | 58 | 43 | 6 | 1 | 134.88 |
Jason Holder | c Dawlat Zadran b Sayed Shirzad | 45 | 34 | 1 | 4 | 132.35 |
Carlos Brathwaite | not out | 14 | 5 | 2 | 1 | 280.00 |
Fabian Allen | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 13 (b 0 , lb 4 , nb 0, w 9, pen 0) |
Total | 311/6 (50 Overs, RR: 6.22) |
Fall of Wickets | 1-21 (5.3) Chris Gayle, 2-109 (24.5) Evin Lewis, 3-174 (34.5) Shimron Hetmyer, 4-192 (37.4) Shai Hope, 5-297 (49.1) Nicholas Pooran, 6-297 (49.2) Jason Holder, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mujeeb ur Rahman | 10 | 0 | 52 | 0 | 5.20 | |
Dawlat Zadran | 9 | 1 | 73 | 2 | 8.11 | |
Sayed Shirzad | 8 | 0 | 56 | 1 | 7.00 | |
Gulbadin Naib | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Mohammad Nabi | 10 | 0 | 56 | 1 | 5.60 | |
Rashid Khan | 10 | 0 | 52 | 1 | 5.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Gulbadin Naib | c Evin Lewis b Kemar Roach | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Rahmat Shah | c Chris Gayle b Carlos Brathwaite | 62 | 78 | 10 | 0 | 79.49 |
Ikram Alikhil | lbw b Chris Gayle | 86 | 93 | 8 | 0 | 92.47 |
Najibullah Zadran | run out () | 31 | 38 | 1 | 1 | 81.58 |
Asghar Afghan | c Jason Holder b Carlos Brathwaite | 40 | 32 | 4 | 1 | 125.00 |
Mohammad Nabi | c Fabian Allen b Kemar Roach | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Samiullah Shinwari | c Shimron Hetmyer b Kemar Roach | 6 | 9 | 0 | 0 | 66.67 |
Rashid Khan | c Jason Holder b Carlos Brathwaite | 9 | 16 | 0 | 1 | 56.25 |
Dawlat Zadran | c Sheldon Cottrell, b Carlos Brathwaite | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sayed Shirzad | c Fabian Allen b Oshane Thomas | 25 | 17 | 2 | 2 | 147.06 |
Mujeeb ur Rahman | not out | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Extras | 14 (b 0 , lb 2 , nb 2, w 10, pen 0) |
Total | 288/10 (50 Overs, RR: 5.76) |
Fall of Wickets | 1-5 (1.3) Gulbadin Naib, 2-138 (26.2) Rahmat Shah, 3-189 (35.3) Ikram Alikhil, 4-194 (35.5) Najibullah Zadran, 5-201 (37.4) Mohammad Nabi, 6-227 (41.4) Samiullah Shinwari, 7-244 (44.2) Asghar Afghan, 8-255 (44.6) Dawlat Zadran, 9-260 (46.3) Rashid Khan, 10-288 (49.6) Mujeeb ur Rahman, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sheldon Cottrell, | 7 | 0 | 43 | 0 | 6.14 | |
Kemar Roach | 10 | 2 | 37 | 3 | 3.70 | |
Oshane Thomas | 7 | 0 | 43 | 1 | 6.14 | |
Jason Holder | 8 | 0 | 46 | 0 | 5.75 | |
Fabian Allen | 3 | 0 | 26 | 0 | 8.67 | |
Carlos Brathwaite | 9 | 0 | 64 | 4 | 7.11 | |
Chris Gayle | 6 | 0 | 28 | 1 | 4.67 |
முடிவு – மேற்கிந்திய அணி 23 ஓட்டங்களால் வெற்றி