19 வயதின்கீழ் வீரர்களுக்கான மாகாண ஒருநாள் தொடர் இம்மாதம் ஆரம்பம்

766

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 19 வயதின் கீழ்ப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் இடையே 50 ஓவர்கள் கொண்ட சுபர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடரை (Under 19 Super Provincial 50 over Tournament) நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. 

அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார் ராயுடு

இந்திய கிரிக்கெட் அணியின் மத்தியவரிசை…

இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையின் பிரதான 4 அணிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கண்டி, காலி, தம்புள்ளை மற்றும் கொழும்பு என நான்கு அணிகள் பங்கெடுக்கவுள்ளன. 

இந்த கிரிக்கெட் தொடரின் போட்டிகள் யாவும் இந்த மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்திலும், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இளம் வீரர்களின் திறமையினை இனங்காண ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் இந்த கிரிக்கெட் தொடரில் நாடுபூராகவும் இருந்து 60 வீரர்கள் வரையில் பங்கெடுக்கவுள்ளனர். அதோடு இந்த கிரிக்கெட் தொடரில் திறமையினை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் சாதிக்கும் ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. 

இங்கிலாந்து சுப்பர் லீக் தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின்…

”இந்த தொடர், இந்த நாட்டிலுள்ள திறமையாளர்களை அடையாளம் காண உதவும். இந்த தொடரில் ஜொலிக்கும் வீரர்களுக்கு இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளில் பிரகாசிக்கவும் வாய்ப்பு கிட்டவுள்ளது. அதன் மூலம் இங்கிருக்கும் வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தை அடைந்து கொள்ள ஒருவழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.” என இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இந்த கிரிக்கெட் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். 

இந்த கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் யாவும் தொடரின் முதற்சுற்றில் மூன்று குழுநிலை போட்டிகளில் ஆடவுள்ளதோடு, குழுநிலை போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் நிரல்படுத்தலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும். 

நியூசிலாந்து வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லும் இங்கிலாந்து அணி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

இதேவேளை, இந்த கிரிக்கெட் தொடரில் மூன்றாவது இடத்தினை பெறும் அணியினை தெரிவு செய்யும் போட்டியும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இடம்பெறவுள்ளது. 

இந்த தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, இரண்டாம் இடம் பெறும் அணி என்பவற்றுக்கு பணப்பரிசு வழங்கப்படவிருக்கின்றது. அதோடு, ஒவ்வொரு போட்டியினதும் ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த துடுப்பாட்டவீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கும் பணப்பரிசு வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் அட்டவணை

ஜூலை 16 

  • கொழும்பு எதிர் தம்புள்ளை – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • கண்டி எதிர் காலி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ஜூலை 18 

  • கொழும்பு எதிர் கண்டி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • காலி எதிர் தம்புள்ளை – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ஜூலை 20

  • கொழும்பு எதிர் காலி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • கண்டி எதிர் தம்புள்ளை – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ஜூலை 22

  • மூன்றாம் இடத்திற்கான போட்டி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் 

ஜூலை 23 

  • இறுதிப் போட்டி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்

இந்த கிரிக்கெட் தொடர் பற்றிய மேலதிக விபரங்கள், புகைப்படத் தொகுப்பு, போட்டி அறிக்கைகள் மற்றும் இன்னும் பல சுவாரசியமான விடயங்களை பெற்றுக் கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<