அவிஷ்கவிடம் விஷேடமாக ஏதோ உள்ளது: மஹேல ஜயவர்தன

4516

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்த போதும், இலங்கை அணி நேற்று (1) தமது 8ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 23 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்து மீண்டும் ஒரு சிறந்த போட்டியை வழங்கியிருந்தது. 

அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் …….

கன்னி சதம் பெற்ற இளம் வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் பந்துவீசிய அஞ்செலோ மெதிவ்ஸ், லசித் மாலிங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இப்போட்டியில் இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.  

இந்நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு சமூக வலைத்தளமான டுட்விட்டரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் பெற்ற 21 வயதேயான அவிஷ்க பெர்னாண்டோ, உலகக் கிண்ணப் போட்டிகளில் சதம் பெற்ற மூன்றாவது இளம் துடுப்பாட்ட வீரராக மாறினார். அவிஷ்க, இளம் வயதில் பெற்றுக்கொண்ட இந்த சதத்திற்கு இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான VVS. லக்ஷ்மன் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.




இதேவேளை அவிஷ்க பெர்னாண்டோ இலங்கை அணி, மிகக் குறைந்த வயதில் உலகக் கிண்ணத் தொடரில் சதம் பெற்ற இலங்கை அணி வீரராகவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் லக்ஷ்மன், மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் வெற்றி இலக்கினை எட்டுவதற்கு முயற்சி செய்த விதம் குறித்தும் பாராட்டியிருந்தார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்காக நிக்கோலஸ் பூரன் சதம் ஒன்றுடனும், பெபியன் ஆலன் அதிரடி அரைச்சதம் ஒன்றுடனும் போராட்டம் காண்பித்திருந்தனர். எனினும் அவர்கள் இருவரினது துடுப்பாட்டமும் வீணாகியிருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜயவர்தனவும் அவிஷ்க பெர்னாண்டோவின் சதத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு, பெர்னாண்டோவிடம் விஷேடமான ஏதோ ஒன்று உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை முன்னாள் சகலதுறை வீரரும் இப்போதைய தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவருமான ரசல் அர்னோல்ட் இப்போட்டி பற்றி கருத்து தெரிவித்திருந்த போது அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் ஆறுதல் தருகின்றது எனக் கூறியிருந்தார். அதோடு அர்னோல்ட் லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது பந்துவீச்சு பெறுதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்

கடைசியாக 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே ஒருநாள் போட்டிகளில் பந்துவீசிய அஞ்செலோ மெதிவ்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பந்துவீசி இலங்கை அணிக்கு சதம் ஒன்று விளாசி நெருக்கடியாக இருந்த நிகோலஸ் பூரனின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். மறுமுனையில் லசித்  மாலிங்க, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

Photos : Sri Lanka vs West Indies | ICC Cricket World Cup 2019 – Match 39

Caption – இலங்கைமேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டியின் புகைப்பட தொகுப்பு 

மேற்கிந்திய தீவுகளின் தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவரான இயன் பிசோப் மேற்கிந்திய தீவுகள்இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் சதங்கள் பெற்றுக் கொண்ட இளம் வீரர்களான அவிஷ்க பெர்னாந்து, நிகோலஸ் பூரன் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இலங்கை அணியினை வெற்றிப் பாதையில் வழிநடாத்திய இருந்த இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரத்னவும் அவிஷ்க பெர்னாண்டோவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் மூலமே இலங்கை அணியினை ஒருநாள் போட்டிகளில் வழிநடாத்தும் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட திமுத் கருணாரத்ன, இக்கட்டான நேரங்களில் தனது தலைமைத்துவ ஆற்றல் மூலம் சிறந்த முடிவுகளை எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

அரைச்சதம் மூலம் உலகக்கிண்ண சாதனையை சமன் செய்த விராட் கோஹ்லி

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) …….

அதன்படி, முன்னதாக இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக த்ரில்லர் வெற்றிகளை பெற திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவமும் காரணமாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும், இலங்கை அணியின் வெற்றிக்கு முன்னாள் வீரர்களான தம்மிக்க பிரசாத், திலான் சமரவீர ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இலங்கை அணி, அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தமது கடைசி லீக் போட்டியில் இந்திய அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (6) ஹெடிங்லே மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க  <<