Home Tamil இலங்கையின் அரையிறுதி கனவை கடினமாக்கிய தென்னாபிரிக்கா

இலங்கையின் அரையிறுதி கனவை கடினமாக்கிய தென்னாபிரிக்கா

1369

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று (28) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இலங்கை அணியின் அரையிறுதி கனவை கடினமாக்கியுள்ளது.

இலங்கை அணி நிரணயித்திருந்த 204 என்ற வெற்றியிலக்கை நோக்கிய தென்னாபிரிக்க அணி, பெப் டு ப்ளெசிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோரின் 175 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்துடன் இலகுவாக வெற்றியை தம்வசப்படுத்தியது.

ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து அணியை வீழ்த்தி…

இன்றைய போட்டியை பொருத்தவரை இலங்கை அணியில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.  சின்னம்மை (Chicken Pox) நோய்க்கு முக்கொடுத்துள்ள நுவன் பிரதீப்புக்கு பதிலாக சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணியில், கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் இருந்து இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. உபாதைக்குள்ளாகியுள்ள டேவிட் மில்லருக்கு பதிலாக ஜேபி டுமினி அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், லுங்கி என்கிடிக்கு பதிலாக டுவைன் ப்ரிட்டோரியர்ஸ் அணியில் இணைக்கப்பட்டார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, சுரங்க லக்மால்

தென்னாபிரிக்க அணி 

குயின்டன் டி கொக், ஹசிம் அம்லா, எய்டன் மர்க்ரம், பெப் டு ப்ளெசிஸ், ஜேபி டுமினி, ரஸ்ஸி வென் டெர் டுஸன், எண்டிலே பெஹ்லுக்வாயோ, க்ரிஸ் மொரிஸ், ககிஸோரபாடா, டுவைன் ப்ரிட்டோரியர்ஸ், இம்ரான் தாஹீர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி எதிர்பாராத ஆரம்பத்தை பெற்றிருந்தது. குறிப்பாக ககிஸோ ரபாடா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்து ஏமாற்றமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

அரையிறுதியை தக்கவைக்கும் இலக்குடன் களமிறங்கவுள்ள இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக…

ஆனாலும், மீண்டும் அணியின் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்பிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா இரண்டாவது விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். முதல் 10 ஓவர்களுக்கு முன்னர் 60 ஓட்டங்களை இலங்கை அணி கடந்த போதும், துரதிஷ்டவசமாக அவிஷ்க பெர்னாண்டோ தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

அவிஷ்க பெர்னாண்டோவின் ஆட்டமிழப்பின் பின்னர், இலங்கை அணி முற்றுமுழுதாக தடுமாற தொடங்கியது. தென்னாபிரிக்க அணியின் டுவைன் ப்ரிட்டோரியர்ஸ் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க, குசல் பெரேரா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இலங்கை அணியின் ஓட்டவேகம் குறைக்கப்பட்டதுடன், தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கம் அதிகரித்தது. தொடர்ந்து வருகைதந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றத்துக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மெதிவ்ஸ் 11 ஓட்டங்கள் மற்றும் குசல் மெண்டிஸ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தனன்ஜய டி சில்வா 24 ஓட்டங்களை பெற்றவேளை, துரதிஷ்டசவமாக ஜேபி டுமினியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Photo Album: Sri Lanka vs South Africa | ICC Cricket World Cup 2019 – Match 35

இவ்வாறு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள், பொறுப்பற்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தய நிலையில், பின்வரிசை வீரர்களும் ஏமாற்றமளித்து அடுத்தடுத்து அரங்கு திரும்பினர். இதில் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், க்ரிஸ் மொரிஸ்  மற்றும் டுவைன் ப்ரிட்டோரியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இலங்கை அணி நிர்ணயித்திருந்த இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றதுடன், பெப் டு ப்ளெசிஸ் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோரின் நிதான இணைப்பாட்டத்தின் உதவியுடன் 37.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை இலகுவாக அடைந்திருந்தது.

போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க முனைந்த போதிலும், குயிண்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் சற்று வேகமாக இணைப்பாட்டத்தை பகிர தொடங்கினர். இவர்களின் இணைப்பாட்டத்தை மாலிங்க தனது வேகத்தால், 31 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஆனால் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த பெப் டு ப்ளெசிஸ் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். கடந்த போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறிய ஹஷிம் அம்லா இந்த உலகக் கிண்ணத்தில் தன்னுடைய முதல் அரைச்சதத்தை கடக்க, பெப் டு ப்ளெசிஸ் மறுமுனையில் தனது அரைச்சதத்தை பதிவுசெய்தார்.



அரைச்சதத்தின் பின்னர் இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சற்று வேகமாக ஓட்டங்களை குவித்ததில், தென்னாபிரிக்க அணி 37.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றியை பதிவுசெய்தது. இதில், பெப் டு ப்ளெசிஸ் 92 ஓட்டங்களையும், ஹஷிம் அம்லா 80 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பினை இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணி, இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணியின் அரையிறுதிக்கான வாய்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டுள்ளது.

இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்து நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதுடன், இங்கிலாந்து அணி தங்களுடைய 2 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
203/10 (49.3)

South Africa
206/1 (37.2)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c Faf du Plessis b Kagiso Rabada 0 1 0 0 0.00
Kusal Perera b Dwaine Pretorius 30 34 4 0 88.24
Avishka Fernando c Faf du Plessis b Dwaine Pretorius 30 29 4 0 103.45
Kusal Mendis c Chris Morris b Dwaine Pretorius 23 51 2 0 45.10
Angelo Mathews b Chris Morris 11 29 1 0 37.93
Dhananjaya de Silva b JP Duminy 24 41 2 0 58.54
Jeevan Mendis c Dwaine Pretorius b Chris Morris 18 46 1 1 39.13
Thisara Perera c Kagiso Rabada b Andile Phehlukwayo 21 25 0 0 84.00
Isuru Udana c & b Kagiso Rabada 17 32 1 0 53.12
Suranga Lakmal not out 5 6 0 0 83.33
Lasith Malinga c Faf du Plessis b Chris Morris 4 2 1 0 200.00


Extras 20 (b 4 , lb 3 , nb 0, w 13, pen 0)
Total 203/10 (49.3 Overs, RR: 4.1)
Fall of Wickets 1-0 (0.1) Dimuth Karunaratne, 2-67 (9.5) Avishka Fernando, 3-72 (11.3) Kusal Perera, 4-100 (21.5) Angelo Mathews, 5-111 (27.1) Kusal Mendis, 6-135 (36.1) Dhananjaya de Silva, 7-163 (39.5) Jeevan Mendis, 8-184 (45.3) Thisara Perera, 9-197 (48.3) Isuru Udana, 10-203 (49.3) Lasith Malinga,

Bowling O M R W Econ
Kagiso Rabada 10 2 35 2 3.50
Chris Morris 9.3 0 46 3 4.95
Dwaine Pretorius 10 2 25 3 2.50
Andile Phehlukwayo 8 0 38 1 4.75
Imran Tahir 10 0 36 0 3.60
JP Duminy 2 0 15 1 7.50


Batsmen R B 4s 6s SR
Quinton de Kock b Lasith Malinga 15 16 3 0 93.75
Hashim Amla not out 80 105 5 0 76.19
Faf du Plessis not out 96 103 9 1 93.20


Extras 15 (b 0 , lb 1 , nb 0, w 14, pen 0)
Total 206/1 (37.2 Overs, RR: 5.52)
Fall of Wickets 1-31 (4.5) Quinton de Kock,

Bowling O M R W Econ
Lasith Malinga 10 1 47 1 4.70
Dhananjaya de Silva 4 0 18 0 4.50
Suranga Lakmal 6 0 47 0 7.83
Thisara Perera 5.2 1 28 0 5.38
Jeevan Mendis 7 0 36 0 5.14
Isuru Udana 5 0 29 0 5.80



முடிவு – தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி