இலங்கை கால்பந்து அணியின் பலம், பலவீனங்கள் பற்றிக் கூறும் பகீர் அலி

402

மக்காவு அணிக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் முதல் கட்டப் போட்டியில் இலங்கை கால்பந்து அணியின் ஆட்டம் பற்றி பயிற்சியாளர் நிசாம் பகீர் அலி கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கை அணி 1-0 என தோல்வியுற்ற மக்காவு அணிக்கு எதிராக முதலாம் கட்டப் போட்டியில் அணியின் செயற்பாடு பற்றி கேட்டபோது, வாய்ப்புகளைத் தவறவிட்டது இலங்கைக்கு பெரும் இழப்பாக இருந்ததென பகீர் அலி கூறினார்.

மக்காவு – இலங்கை மோதல் ரத்து

இலங்கை மற்றும் மக்காவு அணிகளுக்கு இடையில் நாளை……

அணியினர் நன்றாக ஆடினார். பல சந்தர்ப்பங்களை தவறவிட்டது மற்றும் பின்களத்தில் செய்த சில தவறுகள் போட்டியை இழக்கக் காரணமானது. ஆனால், ஒட்டுமொத்தத்தில் அணியினர் சிறந்தமுறையில் ஆடினர். எம்மால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து கோல்களை பெற முடியுமாக இருந்தது. இதுவும் ஓர் அம்சமாகும். இது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அணியினர் நன்றாக ஆடினாலும் அவர்களுக்கு (எதிரணி) ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதனை கோலாக மாற்றலாம்.

நாம் தவறுகளை பகுப்பாய்வு செய்திருக்கிறோம் நாம் அதற்காக தயாராகி இருக்கிறோம், அது பற்றி பயிற்சி பெறுவோம், நாம் சிறந்த ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்க்கிறோம். எமது வீரர்கள் அடுத்த போட்டியில் வெல்ல முயற்சிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.   

லாவோசுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கடைசி பத்து நிமிடங்கள் வரை இலங்கை அணி முறையே 1-0 மற்றும் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. எனினும், முதல் போட்டியில் 2-1 என தோற்றதோடு இரண்டாவது போட்டியை 2-2 என சமநிலையில் முடிந்தது. கடைசி நிமிடங்களில் இலங்கை அணியினர் பின்தங்கிய நிலையில் பகீர் அலி தனது திட்டத்தை வகுத்திருந்தார். அது பற்றி மக்காவு போட்டியில் அவதானம் செலுத்தப்பட்டது அதனாலேயே அவர் புதிய வீரர்களை அனுப்பும் எதிரணியினரின் வழியை பின்பற்றவில்லை.  

உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இறுதி குழாம் அறிவிப்பு

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்…….

மக்காவு போட்டியில் அவதானம் செலுத்துவதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. எனவே, போட்டிக்காக நான் முன்கூட்டியே திட்டமிட்டேன். அடுத்த அணியினர் ஐந்து, ஆறு வீரர்களை மாற்று வீரர்களாக பயன்படுத்தும்போது நான் அதனைச் செய்யவில்லை. தேவையான மாற்றங்களை மாத்திரமே செய்வது என்ற எனது திட்டத்தில் இருந்தேன். எனவே, புதிய வீரர்கள் வரும்போது கடைசி நிமிடங்களில் அனைத்து அழுத்தங்களும் வரும். பின்னர் பின்களத்திலும் சில இடைவெளிகள் ஏற்படும் என்றார்.    

போட்டியின் கடைசி நேரத்தில் பின்களம் கோல்களை விட்டுக்கொடுப்பது, உடல் சோர்வினால் ஏற்படுவதில்லை என்று குறிப்பிடும் பயிற்சியாளர் போட்டியில் அவதானத்தை இழப்பதே அதற்கு காரணம் என்கிறார்.

அது உடல் நிலையுடன் தொடர்புபட்டதல்ல. அவர்கள் 100 வீத உடல் தகைமை உடையவர்கள். அது போட்டியின் போது அவதானத்தை இழப்பதாகும். லாவோசுடனான இரண்டாவது போட்டியில் பெனால்டி ஒன்றாக இருந்தது. பெனால்டி இல்லாதபோது பெனால்டியாக வழங்கப்பட்டது. அதனை அவர்கள் கோலாக்கினார்கள். ஜூட் சுமன் எதிரணி வீரருடன் உடல் ரீதியில் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை. நாம் 10 வீரர்களாக குறைக்கப்பட்ட பின் இரண்டாவது கோல் போடப்பட்டது.   

கால்பந்து உலகை வியக்க வைக்கவுள்ள 2022 உலகக் கிண்ணம்

எமது பின்கள வீரர்கள் போதுமாக சிந்திக்காமல் இருப்பதே நாம் முகம்கொடுக்கும் பிரச்சினை. நாம் அதனை சரிசெய்ய செயற்படுகிறோம். அவர்கள் பந்தை மாத்திரமே பார்க்கிறார்கள், தம்மை நோக்கி வரும் வீரர்களை பார்ப்பதில்லை. குறித்த போட்டி பற்றி ஆராய்ந்தோம். 4 பின்கள வீரர்கள் ஒரு நிலைக்கு செல்கிறார்கள், வலது பக்கம் திறந்தே இருந்தது. கடந்த ஒருசில நாட்களாக இது குறித்து வீரர்களுடன் பேசினோம் என்று பகீர் அலி கூறினார்.  

போட்டி மேலதிக நேரத்திற்கு சென்றால் கூட எல்லா வழியிலும் தமது அணியினர் மன வலிமையுடன் இருப்பதாக பகீர் அலி உறுதியாக உள்ளார்.

அதேபோன்று, அணியின் பின்கள வீரர்கள் அனைவரும் மிகவும் சிறந்த தெரிவுகளாகவே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பின்கள வீரர்கள் அனுபவம் மற்றும் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் நல்ல கழகங்களுக்காக ஆடுகின்றனர். ஷரித்த பற்றி நாம் குறிப்பிடுவதென்றால் அவர் கொழும்பு கால்பந்து கழகத்திற்காக ஆடுகிறார். பியுஸ்லஸ், நியு யங்ஸுக்காகவும் ஜூட் சுமன் ரினௌன் கழகத்திற்காகவும், இடது பக்க பின்கள வீரர் ஹர்ஷ, விமானப்படைக்காகவும் ஆடுகின்றனர். எனவே, நிலைமையை சமாளிக்க தெரிந்த போதுமான முதிர்ச்சி பெற்ற வீரர்களாக இவர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.  

லாவோஸ் மற்றும் மக்காவு அணிகளுக்கு எதிராக கோல்களை விட்டுக்கொடுப்பதில் தொடர்பாடல் இடைவெளி காரணம் என்று ஆதாரம் உள்ளது. இது பற்றி மேலும் விளக்கிய தலைமை பயிற்சியாளர், தமது இரு மத்திய பின்கள வீரர்களின் அமைதியான பண்பு குறித்து சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு! ; யார் இந்த மார்வின் ஹெமில்டன்?

கட்டாரில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக்….

உதாரணத்திற்கு ஜூட் சுமன் மிக அமைதியானவர், அவர் இளம் வீரர், போட்டியின்போது பேசுவதற்கு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். டக்சன் பியுஸ்லஸும் கூட அதிகம் பேசுவதில்லை. எனவே, முட்டுக்கட்டை ஒன்று உள்ளது. எதிகாலத்தில் இது சரியாகும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.         

முன்களத்தின் ஆட்டம் பற்றி அவர் அனுகூலமான நிலைப்பாட்டை பெற்றிருக்கிறார். எனினும் அனுபவம் பெறும்போது அவர்கள் சிறப்பாக செயற்பாடுவார்கள் என்றார்.

”மக்காவு அணிக்கு எதிரான போட்டியில் எமது முன்கள வீரர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. (மொஹமட்) ஆகிப் மற்றும் திலிப் (பீரிஸ்) ஆகியோருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவர்கள் இளம் வீரர்களாக உள்ளனர். இவர்களிடம் இடைவெளிகள் உள்ளன. ஒரு போட்டியில் அவர்கள் சிறந்த கோல் ஒன்றை புகுத்துகின்றனர், இரண்டாவது போட்டியில் இலகுவான கோல் வாய்ப்பை தவறவிடுகின்றனர். அவர்கள் கடினமான கோலை புகுத்துகிறார்கள், இலகுவான கோலை தவறவிடுகின்றனர். பெரும்பாலான வீரர்கள் 18, 19 வயதுடையவர்களாக உள்ளனர். நேரம் வரும்போது முதிர்ச்சியைப் பெறுவார்கள். முதிர்ச்சி வரும்போது அவர்கள் கோல்கள் பெறுவார்கள்.”

லாவோசுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர்களின் நடத்தை முக்கிய பேசுபொருளாக உள்ளது. மொஹமட் ஆகிப் முரண்பாடு காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் வீரர்களின் அணுகுமுறைகளை பாதுகாக்கும் வகையில் பயிற்சியாளர் கருத்து வெளியிட்டார்.

மெஸ்ஸியின் பெனால்டி மூலம் தோல்வியை தவிர்த்த ஆர்ஜன்டீனா

கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரில் மீண்டும்…….

”அவர் ஜெர்சியை வீசியதன் காரணமாகவே முதல் மஞ்சள் அட்டை பெற்றார் (தனது கோலுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டது). இந்த வீரர்கள் மிக இளம் வீரர்கள். அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், அதனை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய போட்டி. ஒரு கோலை பெறும்போது இது நடக்கிறது. போட்டியின் புதிய விதிகள் பற்றி நாம் தற்போது அவர்களை அறிவூட்டுகிறோம்.   

போட்டியின்போது தவறான பெனால்டி வழங்கப்படும்போதுo எவராயினும் அதற்கு எதிர்வினையாற்றுவார்கள், நானும் எதிர்வினையாற்றுகிறேன். மக்காவுவுக்கு எதிரான போட்டியை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். எந்த வீரரும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்று பகீர் அலி குறிப்பிட்டார்.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<