இம்முறை உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி பெற்று வருகின்ற தொடர் தோல்விகளின் எதிரொலியாக அந்த அணியின் கட்டமைப்பில் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தென்னாபிரிக்க அணித் தலைலவர் பாப் டு ப்ளெசிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேன் வில்லியம்சனின் சதத்தோடு நியூசிலாந்து அணிக்கு வெற்றி
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் …….
உலகக் கிண்ண கிரிக்கெட்டில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய (19) லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் சதமடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டம், பந்துவீச்சு என ஏமாற்றிய தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் இதே நியூசிலாந்திடம் தான் தென்னாபிரிக்கா தோற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, அவ்வணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. எனவே, எஞ்சிய 3 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றாலும் பயன் இருக்காது. ஒருவேளை பல முடிவுகள் சாதகமாக அமைந்து, ஓட்ட வீதத்தில் உயரிய நிலையில் இருந்தால் அதிஷ்டம் கிடைக்கலாம்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டு ப்ளெசிஸ்,
”எங்கள் ஓய்வறை வேதனையுடனும், காயத்துடனும் உள்ளது. எமது வீரர்கள் போராட்ட குணத்தையும், அவர்களது தனிப்பட்ட திறமைகளையும் இந்த உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்தவில்லை. அதேபோல, எப்போதும் நாங்கள் நிறைய தவறுகள் இழைக்கிறோம்.
இந்த உலகக் கிண்ணத்துடன் எமது அணியில் உள்ள முக்கியமான ஒருசில வீரர்கள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே, எமது அணியிலிருந்து மூன்று அல்லது நான்கு வீரர்களை விலகவுள்ளனர். அது இயல்பாகவே நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அதன்பிறகு தென்னாபிரிக்க கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களுக்கு தீர்மானங்களை எடுக்க முடியும்.
எனவே, தென்னாபிரிக்க அணியின் கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
பெரும்பாலும் இந்தப் போட்டித் தொடருக்குப் பிறகு ஆறு அல்லது ஏழு வீரர்களை இழக்க நேரிடும். இதை விட அதிகமாக நீங்கள் மாற்ற விரும்புகிறீர்களா, இல்லை, இதை விட அதிகமாக எதையும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவித்த ப்ளெசிஸ்,
”என்னைப் பொறுத்தவரை இது போன்ற விடயங்களை உட்கார்ந்து பேச வேண்டும். நாங்கள் ஒருசில இளம் வீரர்களை இனங்கண்டுள்ளோம். எனவே, எமக்கு சிறந்ததொரு எதிர்காலம் உண்டு. இம்முறை உலகக் கிண்ணத்திலும் இளம் வீரர்களுக்கு எனது ஆதரவை கொடுத்தேன். எனவே அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க
இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ……..
இதேநேரம், நியூசிலாந்துடனான தோல்வி குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இந்த தோல்வியானது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இது நியூசிலாந்துக்கு எதிராக நான்கு வருடங்களுக்கு முன் பெற்றுக்கொண்ட தோல்வியை உணர்த்துகிறது. அந்தப் போட்டியில் நாங்கள் சிறந்ததொரு கிரிக்கெட் விளையாட்டை விளையாடியிருந்தோம். ஆனால், இன்றைய போட்டியில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி திறமையினை வெளிக்காட்டினால் தான் வெற்றிபெற முடியும். ஆனால் அவ்வாறு திறமையினை வெளிக்காட்டாமல் விளையாடி வந்ததால் தான் நாங்கள் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் தோல்வியைத் தழுவினோம். ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் நாங்கள் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடியிருந்தோம். அதேபோல தான் எமது வீரர்கள் ஏனைய போட்டிகளிலும் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
எனினும், இந்தப் போட்டியில் ஒருசில பகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். நான் ஏற்கனவே சொன்னபடி இந்த ஆடுகளம் தட்டையானது கிடையாது. முதல் 15 ஓவர்களும் நியூசிலாந்தின் ஆக்லாந்து ஆடுகளத்தைப் போன்றதாக இருந்தது. எனவே, எமது பந்துவீச்சு சற்று நெருக்கடியைக் கொடுத்திருந்தது.
அதேபோல, இந்த ஓட்ட இலக்கை துரத்தியடிப்பது மிகவும் இலகுவானது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் 50 அல்லது 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுக்கும் போது அவர்கள் ஒரு விக்கெட்டைப் பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எனவே, 100 ஓட்டங்களைக் குவிக்க இன்னிங்ஸ் முழுவதும் நிலைத்து விளையாடுகின்ற ஒரு வீரர் எமக்கு தேவை” என தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, இந்தத் தொடரில் இந்தியாவுடன் தோல்வியை சந்திக்காத அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்ற நியூசிலாந்து அணிக்கு டு பிளெசிஸ் இதன்போது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்த தொடரில் விளையாடுகின்ற சிறந்த அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து அணி விளங்குகிறது என நான் நினைக்கிறேன். அவர்கள் இந்த தொடர் முழுவதும் விளையாடிய விதத்தைப் பார்த்தால் உங்களுக்கு அது நன்கு தெரியும். பொதுவாக ஐ.சி.சியின் போட்டித் தொடர்களை எடுத்துக்கொண்டால் வெற்றிகள் அடிப்படையில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் முன்னணி அணிகளாக இருக்கும். எனவே நியூசிலாந்து அணி எப்போதுமே பின்தங்கிய அணி என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தியது. ஆனால் இந்தப் போட்டித் தொடரில் நியூசிலாந்து பின்தங்கிய அணி அல்ல.
Photo Album : CWC19 – Sri Lanka participate in UNICEF’s ‘One Day For Children’ program
எனவே, நியூசிலாந்து அணியுடனான போட்டி முழுவதும் தென்னாபிரிக்கா முழு ஆதிக்கம் செலுத்தி இருந்தது. ஆனால் கேன் வில்லியம்சனின் புத்திசாலித்தனம் தான் நியூசிலாந்தை பதட்டமான வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.
கேன் வில்லியம்சன் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுதான் இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமாக இருந்தது. ஒரு வீரர் மாத்திரம் அணியில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததை இந்தப் போட்டி உணர்த்துகிறது என குறிப்பிட்டார்.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்காவின் மோசமான செயல்திறன் குறித்து கேட்டபோது, டு ப்ளெசிஸ் தனது அணி மற்ற அணிகளுக்கு இணையாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.
இதேவேளை, தென்னாபிரிக்கா அணி இன்னும் 3 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் (23), இலங்கை (28) மற்றும் அவுஸ்திரேலியா (06) ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<