இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்து அதிருப்தியடையும் சங்கக்கார

6089

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு மைதானங்களிலும் மாறுபட்ட ஆடுகளங்கள் அமைக்கப்படுவது தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், தலைவருமான குமார் சங்கக்கார தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   

ஐ.சி.சி. இன் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்ட இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி), கடந்த ……

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அமைக்கப்பட்டு வரும் ஆடுகளங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமின்றி, போட்டிகள் மழை மற்றும் மைதான ஈரத்தன்மையால் பாதிக்கப்பட்டு வருவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

இவ்வாறான நிலையில் குமார் சங்கக்கார டைம்ஸ் ஒஃப் இந்தியா ஊடகத்துக்கு எழுத்தியுள்ள சிறப்புக் கட்டுரை ஒன்றில் உலகக் கிண்ணத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஆடுகளங்கள் தொடர்பில் தனது கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறும் இவ்வாறான மிகப்பெரிய தொடர் ஒன்றில் சீரானதும் நடுநிலையானதுமான ஆடுகளங்களை வழங்குவது மிக முக்கியமாகும். ஆனால், சில ஆடுகளங்கள் வேறுபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த பக்கம் மாற்றப்பட வேண்டும். இதன் காரணமாக சில அணிகள் தங்களுடைய அதிருப்திகளை முணுமுணுத்துவருவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ………….

குறிப்பாக, இந்த உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்கள் தொடர்பில், அணி முகாமைத்துவம் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தது. ஏனைய அணிகளுக்கு வழங்கப்படும் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகவும், இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்கள் புற்கள் நிறைந்த பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரும், அணி முகாமையாளருமான அசந்த டி மெல், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் முன்வைத்திருந்தார். அத்துடன், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் தொடர்பில் தனது ஏமாற்றத்தை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் நிலையில், மைதானங்கள் இலங்கையைப் போன்று முழுமையாக மூடப்படாமை தொடர்பிலும், இங்கிலாந்து மைதானங்கள் வடிகாலமைப்பு சிறப்பாக இருந்தாலும் போட்டிகள் மைதான ஈரத்தன்மையால் கைவிடப்படுவது தொடர்பிலும் தனது அதிருப்தியை குமார் சங்கக்கார வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வீரர்களுக்கு மஹேல கூறும் அறிவுறை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் ………..

சீரற்ற காலநிலையின் போது மைதானங்களை இலங்கையைப் போன்று முழுமையாக மூடுவது இலகுவான விடயமல்ல. அதற்கு அதிகமான மனிதவளம் தேவைப்படுகிறது. இருப்பினும், இவ்வாறான தொடரின் போது, சீரற்ற காலநிலையிலிருந்து கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு இதுபோன்ற விடயங்களை செய்ய வேண்டும். அதேநேரம், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த வடிகாலமைப்பு இருந்தாலும், ஒரு சில மைதானங்களில் நடைபெறவுள்ள போட்டிகள் ஈரத்தன்மையால் கைவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரிஸ்டோலில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை நின்றுவிட்ட பின்னரும், ஈரத்தன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் சௌதெம்டனில் நடைபெற்ற போட்டி பலத்த மழையின் பின்னரும் நடைபெற்றிருந்தது. இதன்படி, இங்கிலாந்தில் வேறுபட்ட வடிகாலமைப்புகள் கொண்ட மைதானங்கள் இருப்பதையும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<