Home Tamil கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்த இலங்கை A அணி

கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்த இலங்கை A அணி

2371

நிரேஷன் திக்வெல்லவின் அபார சதத்தின் உதவியோடு இந்திய A அணியுடனான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை A அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-2 என சமநிலையில் முடித்துக் கொண்டது.

இந்தியாவின் ஹுப்லி, நெஹ்ரு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய A அணியின் விக்கெட்டுகளை முக்கிய இடைவெளிகளில் வீழ்த்துவதற்கு இலங்கை A அணியினரால் முடிந்தது.

தொடர்ச்சியாக சோபித்து வரும் ருதுராஜ் கெய்க்வார்ட் சிறப்பாக செயற்பட்டபோதும் இந்திய அணியின் வேறு எந்த வீரரும் அரைச்சதம் ஒன்றைக் கூட பெறவில்லை.

>>மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – இந்திய A அணிகளுக்கிடையிலான போட்டி

73 பந்துகளுக்கு முகங்கொடுத்த கெய்க்வார்ட் 8 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார். இந்தத் உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற அவர் 2 சதங்கள் 2 அரைச்சதங்களோடு மொத்தம் 470 ஓட்டங்களைக் குவித்தார்.

எனினும் இந்திய A அணி 50 ஓவர்கள் முடிவில் 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இலங்கை அணி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் அகில தனஞ்சய 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அணித்தலைவர் அஷான் பிரியன்ஜன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த இலங்கை A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் சங்கீத் குரே 165 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இதில் திக்வெல்ல 93 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்சஸ்களுடன் 111 ஓட்டங்களைப் பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அதேபோன்று சங்கீத் குரே 61 ஓட்டங்களை பெற்றார்.

மத்திய வரிசையில் ஷெஹான் ஜயசூரிய (45*) மற்றும் அஷான் பிரியன்ஜன் (33*) சிறப்பாக துடுப்பாடி இலங்கை A அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.     

இதன் மூலம் இலங்கை அணி 47.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 260 ஓட்டங்களை எட்டியது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை A அணி உத்தியோகபூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றபோது ஒருநாள் தொடரை சமன் செய்து கௌரவத்துடன் நாடு திரும்பவுள்ளது. ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

Result


Sri Lanka A Team
260/3 (47.4)

India A Team
259/10 (50)

Batsmen R B 4s 6s SR
Ruturaj Gaikwad lbw b Shehan Jayasuriya 74 73 8 0 101.37
Prashant Chopra b Chamika Karunaratne 12 16 3 0 75.00
Anmolpreet Singh c Lakshan Sandakan b Ishan Jayaratne 29 33 2 1 87.88
Ricky Bhui c Ashan Priyanjan b Lakshan Sandakan 38 48 3 1 79.17
Deepak Hooda c Ashan Priyanjan b Akila Dananjaya 37 44 2 1 84.09
Ishan Kishan c Ashan Priyanjan b Akila Dananjaya 20 35 1 0 57.14
Washington Sundar c Sangeeth Cooray b Ashan Priyanjan 15 26 0 0 57.69
Shreyas Gopal b Akila Dananjaya 7 12 0 0 58.33
Mayank Markande run out (Lakshan Sandakan) 23 12 0 2 191.67
Tushar Deshpande not out 0 0 0 0 0.00
Sandeep Warrier b Ashan Priyanjan 0 1 0 0 0.00


Extras 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 259/10 (50 Overs, RR: 5.18)
Fall of Wickets 1-25 (4.5) Prashant Chopra, 2-84 (15.2) Anmolpreet Singh, 3-144 (26.6) Ruturaj Gaikwad, 4-171 (31.6) Ricky Bhui, 5-211 (40.6) Deepak Hooda, 6-215 (42.1) Ishan Kishan, 7-231 (46.5) Shreyas Gopal, 8-246 (49.2) Washington Sundar, 9-259 (49.5) Mayank Markande, 10-259 (49.6) Sandeep Warrier,

Bowling O M R W Econ
Chamika Karunaratne 5 0 19 1 3.80
Lahiru Kumara 6 0 33 0 5.50
Dasun Shanaka 1 0 7 0 7.00
Ishan Jayaratne 5 0 35 1 7.00
Akila Dananjaya 10 0 51 3 5.10
Lakshan Sandakan 10 0 52 1 5.20
Shehan Jayasuriya 10 0 39 1 3.90
Ashan Priyanjan 3 0 23 2 7.67


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella st Ishan Kishan b Shreyas Gopal 111 93 12 3 119.35
Sangeeth Cooray st Ishan Kishan b Shreyas Gopal 61 74 7 0 82.43
Bhanuka Rajapaksa lbw b Shreyas Gopal 7 13 1 0 53.85
Shehan Jayasuriya not out 45 55 1 1 81.82
Ashan Priyanjan not out 33 51 3 0 64.71


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 260/3 (47.4 Overs, RR: 5.45)
Fall of Wickets 1-165 (26.3) Niroshan Dickwella, 2-176 (28.6) Sangeeth Cooray, 3-185 (30.5) Bhanuka Rajapaksa,

Bowling O M R W Econ
Washington Sundar 10 0 47 0 4.70
Sandeep Warrier 4 0 32 0 8.00
Deepak Hooda 8 0 34 0 4.25
Tushar Deshpande 3.4 0 34 0 10.00
Mayank Markande 10 0 55 0 5.50
Shreyas Gopal 10 0 49 3 4.90
Prashant Chopra 2 0 9 0 4.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<