பாகிஸ்தானை எதிர்கொள்வதில் அச்சமடையும் விராத் கோஹ்லி

1479
Getty

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண லீக் போட்டியானது தனக்கு கொஞ்சம் அச்சத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, தமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டார்.

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண மோதலும் மழையினால் இரத்து

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ………..

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், 15ஆவது நாளான நேற்று (13) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நொட்டிங்ஹம்மில் நடைபெறவிருந்த லீக் ஆட்டம் மழையின் காரணமாக நாணய சுழற்சியின்றியே கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கோஹ்லி அளித்த பேட்டியில்,  

”இந்தப் போட்டி முழுமையாக கைவிடப்பட்டது நல்ல முடிவுதான். இதுவரை எல்லா போட்டிகளையும் வென்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்குவது தவறு கிடையாது. ஆகவே, நாங்களும் ஒரு புள்ளியை எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள போட்டி குறித்து கோஹ்லி பதிலளிக்கையில்,

பாகிஸ்தானுடனான போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மைதானத்துக்குச் சென்று எமது ஆட்டத்தை சரியான முறையில் செய்யக் காத்திருக்கிறோம். எனவே, போட்டிக்காக களமிறங்கிவிட்டால் அங்கு அமைதியும், நிம்மதியும் இருக்கும் என நம்புகிறேன். ஆனால் வெளியில் இருக்கும் சூழல், பாகிஸ்தான் போட்டியை பொறுத்தவரை கொஞ்சம் அச்சமூட்டுவதாக உள்ளது.

அத்துடன், இந்த ஆட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு சூழல் நிலவுவதால், முதல்முறையாக உலகக் கிண்ணத்தில் விளையாடும் வீரர்களுக்கு நெருக்கடி உருவாகலாம். ஆனால், களத்திற்கு வந்து விட்டால் எல்லாமே அமைதியாகி விடும். எனவே, எமது திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முனைவோம். அது ஒரு மிகப்பெரிய போட்டி. அதில் பங்கேற்பது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

எனவே, அந்தப் போட்டியில் எமது வீரர்கள் சிறப்பாக திறமையை வெளிப்படுத்துவார்கள். ஷிகர் தவான் இன்னும் 2 வாரங்களுக்கு வெளியில் (ஓய்வில்) இருப்பார். எனினும், இந்தப் போட்டித் தொடரின் பிற்பகுதி ஆட்டங்களிலும், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் களமிறங்கும் போது அணியில் இடம்பெறுவார் என்று நம்புகிறேன். உண்மையில் அவர் விளையாடுகின்ற உத்வேகத்துடன் இருக்கிறார்” என அவர் கூறினார்.

பொதுவான அணித் தலைவர்கள் அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பிருந்தால் அல்லது அரையிறுதி சாத்தியமானால் அல்லது அரையிறுதிக்குள் நுழைந்தால் என்ற கேள்விக் குறியுடன் தமது பதிலை முன்வைப்பார்கள்.

ஆனால், இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, தமது அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் பிற்பகுதி ஆட்டங்களிலும், அரையிறுதிப் போட்டியிலும் காயத்துள்ளான ஷிகர் தவான் விளையாடுவார் என திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – இந்திய A அணிகளுக்கிடையிலான போட்டி

இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு …………

இதேவேளை, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் போட்டியின் பிறகு அளித்த பேட்டியில், ”சூரிய வெளிச்சத்தைப் பார்த்து நான்கு நாட்கள் ஆகிறது. எனவே, இது எங்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாகப்படவில்லை.

அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக கிடைக்கும் சில நாட்கள் ஓய்வு, புத்துணர்ச்சியுடன் தயாராகுவதற்கு நல்ல வாய்ப்பாகும். அடுத்த லீக்கில் தென்னாபிரிக்காவை (19) எதிர்கொள்கிறோம். தென்னாபிரிக்கா சிறந்த அணி. நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் கூடுதல் சவால் அளித்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். சவாலை சந்திக்க தயாராக இருப்போம்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மென்செஸ்டரில் நடைபெறவுளள் போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என தெரிகிறது. போட்டி நடைபெறும் தினத்தன்று காலை முதல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<