ஐ.சி.சிக்கு நெருக்கடியை கொடுத்துள்ள சீரற்ற காலநிலை

2732

இங்கிலாந்தில் திடீர் மழையால் உலகக் கிண்ணப் போட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் அதில் பங்கேற்றுள்ள அணிகள் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் ஒவ்வொரு லீக் ஆட்டத்துக்கும் மேலதிக நாளொன்றை ஒதுக்காமை குறித்து வெளியான சர்ச்சை தொடர்பில் .சி.சி தமது தரப்பின் விளக்கத்தை அறிவித்துள்ளது.

சேஷார்ட்டின் உலகக் கிண்ண கனவை சிதைத்ததா ஆப்கானிஸ்தான்?

தனது உடற்தகுதி சிறப்பாக இருக்கும் பட்சத்திலும், நிர்வாகம் தன்னை உலகக்…

இங்கிலாந்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகியது. இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. 3 லீக் ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவை (.சி.சி.) நடாத்தும் மிகவும் முக்கியமான தொடரொன்று மழையால் பாதிக்கப்படுவது வீரர்களையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில் கடந்த 7ஆம் திகதி பாகிஸ்தான்இலங்கை அணிகள் பிரிஸ்டல் மைதானத்தில் மோத வேண்டிய போட்டி நாணய சுழற்சியின்றியே மழையால் கைவிடப்பட்டது.

தென்னாபிரிக்காமேற்கிந்திய தீவுள் அணிகள் சவுத்ஹெம்ப்டனில் மோதிய போட்டி 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேற்று (11) மோதவிருந்த போட்டியும் கடும் மழை காரணமாக நாணய சுழற்சியின்றியே கைவிடப்பட்டது.

எனவே, இவ்வாறு மழையால் போட்டிகள் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்படுகிறது. ஆனால், நம்பிக்கையோடு உள்ள அணிகளுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் லீக் சுற்று முடிவில் சில அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் இதே நிலை நீடித்தால் என்ன செய்வார்கள்? என்ற குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தின் துரதிஷ்ட பதிவுக்குள்ளான இலங்கை அணி

பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த இலங்கை மற்றும்…

இதுஇவ்வாறிருக்க, இம்முறை உலகக் கிண்ணத்தில் லீக் ஆட்டத்திற்காக மேலதிக நாளொன்றை வழங்காமை குறித்து பல அணிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

அதிலும் குறிப்பாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (11) நடைபெறவிருந்த போட்டியானது கடும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த முடிவு இலங்கை அணிக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்திருந்தாலும், இலங்கை அணியை வீழ்த்துவதற்கு காத்திருந்த பங்களாதேஷ் அணிக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்த நிலையில் இலங்கை அணியுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரோட்ஸ் அதிருப்தியினை வெளியிட்டிருந்தார்.

அவர் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், இது .சி.சியினால் நடத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராகும். ஏன் இம்முறை போட்டித் தொடரில் ஒரு மேலதிக நாளை .சி.சி வழங்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், இம்முறை உலகக் கிண்ண போட்டித் தொடரானது முன்னைய காலங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. மிகவும் நீண்டதொரு போட்டித் தொடர் இதுவாகும். எனவே, போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கு மற்றையவர்கள் சொல்வதைப் போல மேலதிக நாளெனான்றை ஒதுக்குவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்காக இன்னும் செலவழிக்க வேண்டிவரும். அதேபோல வீரர்களுக்கும் மிகவும் ஷ்டமாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும், லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்வது தொடர்பில் வீரர்கள், போட்டி ஏற்பாட்டுக் குழு மற்றும் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல, போட்டியொன்றில் நாணய சுழற்சியைப் போடுவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டால் அந்தப் போட்டிக்காக வாங்கிய டிக்கெட்டுகளின் பணத்தை .சி.சி மீண்டும் திருப்பிக் கொடுக்கும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இனிவரும் போட்டிகள் சவாலாக இருக்கும்: திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக அடுத்தடுத்து போட்டிகள்…

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் .சி.சியின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில், இம்முறை உலகக் கிண்ணத் தொடர் சற்று வித்தியாசமானதாகும். அதனால் அனைத்து லீக் ஆட்டங்களுக்கும் மேலதிக நாளொன்றை வழங்குவதென்பது நடைமுறை சாத்தியமல்ல. அதேபோல, அவ்வாறு மேலதிக நாளில் மறுபடியும் மழை பெய்தால் இன்னும் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இறுதியில் இந்தப் போட்டித் தொடரை எம்மால் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போய்விடும்” என அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, தற்போதுள்ள போட்டி அட்டவணைக்கு புறம்பாக எம்மால் மேலதிக நாளொன்றை ஒதுக்கி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்தால் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஏனெனில் இங்கிலாந்து பூராகவும் போட்டிகள் நடைபெறுவதால் அதை ஒளிபரப்புச் செய்யும் நிறுவனங்களுக்கும், அங்குள்ள அதிகாரிகளுக்கும் மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டிவரும். எனவே, உலகக் கிண்ணத்தில் மேலதிக நாளொன்றை வழங்குவதென்பது எமக்கு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இங்கிலாந்தில் உள்ள வானிலையை பொறுத்தவரை உலகக் கிண்ணத் தொடர் முழுவதுமே மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை (13) நொட்டிங்ஹம்மில் நடைபெறவுள்ள போட்டியும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதுடன், பெரும்பாலும் டி-20 போட்டியாக அது இடம்பெறலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<