Home Tamil சகலதுறை ஆட்டத்தினால் இந்திய A அணியை வீழ்த்திய இலங்கை A

சகலதுறை ஆட்டத்தினால் இந்திய A அணியை வீழ்த்திய இலங்கை A

3039

இந்திய A அணியுடனான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை A அணி தொடர் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் தொடர் தோல்வி நெருக்கடியுடனேயே இன்று (10) இலங்கை அணி களமிறங்கியது. எனினும் இலங்கை ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என தொடர்ந்து பின்தங்கியுள்ளது.

இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா

இலங்கை A அணி போராடி பெற்ற வெற்றி இலக்கை இந்திய A அணி….

பெல்கவும், யூனியன் ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணிக்கு ஆரம்ப வீரர் பிரஷான்ட் சொப்ரா அபார சதம் பெற்றார்.

எனினும் அதிரடியாக பந்துவீசிய சாமிக்கர கருணாரத்ன இந்திய அணியின் ஆரம்ப வரிசை வீரர்களை முக்கிய இடைவெளிகளில் சாய்த்ததன் மூலம் அந்த அணியின் ஓட்ட வேகத்தை குறைக்க முடிந்தது.

சொப்ரா 3ஆவது விக்கெட்டுக்கு தீபக் ஹூடாவுன் இணைந்து 109 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். 125 பந்துகளுக்கு முகம்கொடுத்த சொப்ரா 129 ஓட்டங்களை பெற்றதோடு ஹூடா 53 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய A அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளையும் சாய்ப்பதற்கு கருணாரத்னவினால் முடிந்தது. இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.

சாமிக்கர கருணாரத்ன தனது 10 ஓவர்களுக்கும் 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவ்ராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான…..

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு நிரோசன் திக்வெல்ல மற்றும் சங்கீத் குரே சிறந்த ஆரம்பத்தை பெற்றிக்கொடுத்தனர். சங்கீத் குரே 103 பந்துகளில் 88 ஓட்டங்களையும் திக்வெல்ல 58 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் சதம் பெற்ற செஹான் ஜனசூரிய மீண்டும் ஒருமுறை சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றி வரை அழைத்துச் சென்றார்.

போட்டியின் 40 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் வெற்றி இலக்கு 46 ஓவர்களில் 266 ஆக மாற்றப்பட்டது. எனினும் இலங்கை அணி 43.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலக்கை எட்டியது. ஜயசூரிய ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றார்.  

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை A அணி ஏற்கனவே இந்திய A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில் அந்த அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka A Team
265/4 (43.4)

India A Team
291/8 (50)

Batsmen R B 4s 6s SR
Ishan Kishan c Shehan Jayasuriya b Chamika Karunaratne 25 32 3 0 78.12
Prashant Chopra c Sangeeth Cooray b Chamika Karunaratne 129 125 17 0 103.20
Ricky Bhui c Niroshan Dickwella b Chamika Karunaratne 2 13 0 0 15.38
Deepak Hooda c Kamindu Mendis b Chamika Karunaratne 53 64 3 0 82.81
Shivam Dube c Sadeera Samarawickrama b Chamika Karunaratne 28 36 1 0 77.78
Anmolpreet Singh c Ishan Jayaratne b Lahiru Kumara 4 7 0 0 57.14
Washington Sundar b Ishan Jayaratne 26 18 1 2 144.44
Shreyas Gopal run out (Sangeeth Cooray) 3 3 0 0 100.00
Mayank Markande not out 2 2 0 0 100.00


Extras 19 (b 0 , lb 9 , nb 0, w 10, pen 0)
Total 291/8 (50 Overs, RR: 5.82)
Fall of Wickets 1-72 (13.2) Ishan Kishan, 2-94 (17.6) Ricky Bhui, 3-246 (43.3) Deepak Hooda, 4-252 (45.1) Anmolpreet Singh, 5-265 (46.6) Shivam Dube, 6-271 (48.2) Shreyas Gopal, 7-291 (49.6) Washington Sundar,

Bowling O M R W Econ
Ishan Jayaratne 10 0 70 1 7.00
Lahiru Kumara 10 0 61 1 6.10
Dasun Shanaka 2 0 17 0 8.50
Chamika Karunaratne 10 0 36 5 3.60
Shehan Jayasuriya 1 0 7 0 7.00
Kamindu Mendis 7 0 41 0 5.86
Lakshan Sandakan 10 0 50 0 5.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Ishan Kishan b Shivam Dube 62 58 10 0 106.90
Sangeeth Cooray c Prashant Chopra b Sandeep Warrier 88 103 10 0 85.44
Sadeera Samarawickrama b Shivam Dube 5 14 0 0 35.71
Shehan Jayasuriya not out 65 67 2 2 97.01
Ashan Priyanjan b Shreyas Gopal 0 1 0 0 0.00
Dasun Shanaka not out 36 22 1 3 163.64


Extras 9 (b 0 , lb 0 , nb 3, w 6, pen 0)
Total 265/4 (43.4 Overs, RR: 6.07)
Fall of Wickets 1-82 (16.6) Niroshan Dickwella, 2-93 (20.3) Sadeera Samarawickrama, 3-202 (36.4) Sangeeth Cooray, 4-204 (37.4) Ashan Priyanjan,

Bowling O M R W Econ
Ishan Porel 6 2 22 0 3.67
Sandeep Warrier 7 0 74 1 10.57
Washington Sundar 7 0 33 0 4.71
Shivam Dube 6.4 0 26 2 4.06
Deepak Hooda 8 0 37 0 4.62
Mayank Markande 4 0 27 0 6.75
Shreyas Gopal 5 0 46 1 9.20



முடிவு – இலங்கை A அணி 6 விக்கெட்டுக்களால் (டக்வெத் லூயிஸ் முறையில்) வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<