உலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய் வீடாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் (International Association of Athletics) புதிய பெயரும், குறியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கடந்த 8ஆம் திகதி மொனாக்கோவில் இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் 271ஆவது விசேட பொதுக்கூட்டத்தின் போது இந்த பெயரும், இலச்சினையும் வெளியிடப்பட்டது.
தேசிய விளையாட்டு விழா மரதனில் வேலு கிருஷாந்தினிக்கு இரண்டாமிடம்
தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன்…
இதன்படி, மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய பெயர் உலக மெய்வல்லுனர்– World Athletics என பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் புதியதொரு பரிணாமத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக மெய்வல்லுனர் சம்மேளனம் இந்தப் பெயரை மெய்வல்லுனர் விளையாட்டின் உத்தியோகபூர்வ பெயராக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியும் அண்மையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த பெயர் மாற்றத்துடன் விளையாட்டு உலகில் மெய்வல்லுனர் விளையாட்டு முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த புதிய முயற்சியின் ஊடாக உலகில் உள்ள பல கோடி மக்கள் மிகவும் விரும்புகின்ற மெய்வல்லுனர் விளையாட்டை உலகம் பூராகவும் வியாபிக்கச் செய்ய முடியும் என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்ட பெயர் மற்றும் சின்னம் தொடர்பில் அதன் தலைவர் செபெஸ்டியன் கோ கருத்து வெளியிடுகையில்,
“எமது இந்தப் புதிய பெயர் மற்றும் சின்னம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்துக்கு மத்தியில் மெய்வல்லுனர் விளையாட்டை கொண்டு செல்ல முடியும் என நான் நம்புகிறேன். நாங்கள் புதியதொரு குறியீட்டை வெளியிட்டுள்ளோம். டிஜிட்டல் ஊடகத்திலிருந்து சாதாரண வாழ்க்கையை இதன்மூலம் தொடர்புபடுத்த முடியும். அத்துடன் விளையாட்டின் தன்மையை இது மாற்றும். அதேநேரம், உலகின் முழு கவனமும் மெய்வல்லுனர் வீரர்கள் பக்கம் திரும்பும்” என தெரிவித்தார்.
மக்காவு – இலங்கை மோதல் ரத்து
இலங்கை மற்றும் மக்காவு அணிகளுக்கு இடையில் நாளை…..
இதேநேரம், சர்வசதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜோன் ரித்ஜன் கருத்து வெளியிடுகையில், ”சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் (IAAF) என்ற பெயர் சுமார் 100 வருடங்கள் பழைமையானது. ஆனால், மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இந்தப் பெயரை கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
மேலும், இந்தப் புதிய அடையாளமானது போட்டி நிகழ்ச்சிகளின் போது தனியாகவும், பங்குதாரர்களாகவும் செயற்படுகின்ற ஒரு சின்னமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
இந்தப் புதிய குறியீடானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கட்டாரின் டோஹா நகரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வைத்து உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IAAF unveils new name and logo. pic.twitter.com/Fz4lNjhutW
— IAAF (@iaaforg) 9 June 2019
இதேவேளை, இந்த குறியீடானது 3 பிரிவுகளைக் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது.
W என்ற எழுத்தின் ஊடாக (World) உலகம் என்ற சொல் உணர்த்தி நிற்கின்றது. அது மெய்வல்லுனர் வீரரொருவரின் வெற்றியையும் உணர்த்துகின்றது. A என்ற எழுத்தின் ஊடாக மெய்வல்லுனர் விளையாட்டு (Athletics) என்ற சொற் பதத்தை உணர்த்துகிறது. இதன்மூலம் மெய்வல்லுனர் வீரர் ஒருவருக்கு முன்னால் உள்ள சவால்களை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு எழுத்துக்களின் மேல் உள்ள குறியீடு அனைத்து மெய்வல்லுனர் வீரர்களும் ஒன்றாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றது.
இங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை?
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக்….
இதேநேரம், இந்த குறியீட்டின் மேல் பகுதியில் உள்ள வளைவு, சுவட்டு மைதானத்தையும் தாண்டி விளையாட்டுக்காக செய்கின்ற தியாகத்தை உணர்த்துகின்றன. இதில் உள்ள வரைபுகள் மெய்வல்லுனர் விளையாட்டின் பலத்தை உணர்த்தி நிற்கின்றது. அத்துடன், மெய்வல்லுனர் விளையாட்டின் முக்கிய அம்சமாக இருக்கின்ற ஓட்டம், பாய்தல், எறிதல் மற்றும் வேகநடை போன்ற விளையாட்டுகளை சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் மெய்வல்லுனர் விளையாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் ஓர் அங்கமாக இந்தப் புதிய பெயரும், குறியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன. உலகின் ஐந்து முன்னணி குறியீட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த குறியீட்டை வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு கிடைக்கப் பெற்ற ஆலோசனைகளை விசேட குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், குறியீட்டை வெளியிட்டு வைப்பதற்கு முன் உறுப்பு நாடுகள், அனுசரணையாளர்கள் மற்றும் மெய்வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<