ஆப்கானிஸ்தான் அணியில் உலகின் முன்னணி வீரர்கள் விளையாடியிருந்தாலும், தமது வேகப் பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் அந்த அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற முடிந்ததாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08), டவுண்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜேம்ஸ் நீஷம், லொக்கி பெர்குஸன் ஆகிய இருவரும் பந்துவீச்சிலும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்திலும் கைகொடுக்க நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இதன்படி, தொடர்ந்து 3 லீக் ஆட்டங்களில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து அணி, புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்துக்கு ஹெட்ரிக் வெற்றி
This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload. உலகக் கிண்ண கிரிக்கெட்…….
இந்த வெற்றியின் பின், நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில்,
”இது ஒரு சிறந்த வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் அணியில் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் விளையாடியிருந்தனர். அதேபோன்று அவர்கள் சிறந்த ஆரம்பத்தையும் பெற்றுக் கொண்டனர், ஆனால் நாங்கள் எங்கள் திட்டங்களுடன் விளையாடினோம். உண்மையில் எமது வேகப் பந்துவீச்சாளர்கள் மீண்டும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என கூறினார்.
இதேநேரம், லொக்கி பெர்குஸன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோரது பந்துவீச்சு குறித்து வில்லியம்சன் கருத்து வெளியிடுகையில்,
”லொக்கி பெர்குஸன் ஒரு வேகப் பந்துவீச்சாளர் ஆவார், அவரது பாத்திரம் விரைவாக பந்து வீசுவதே ஆகும், அவரிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு அதிக ஊக்கமளிப்பு வழங்கத் தேவையில்லை, அவரது இடதுகை, வலதுகை பந்துவீச்சு திறமை காரணமாக ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஜேம்ஸ் நீஷமும் சிறப்பாக செயற்பட்டார். ஆடுகளத்தில் உள்ள வேகம் மற்றும் மாற்றங்களுக்கு அவர் நன்றாக பந்துவீசியிருந்தார். அதேபோன்று, தானும் அணிக்காக எனது வேலையை சிறப்பாக செய்து முடித்தேன்” என்றார்.
நாங்கள் இப்போது தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ளோம், நீங்கள் விளையாடுகிற ஒவ்வொரு விளையாட்டையும் வெல்வது மிகவும் சிறந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் நாங்கள் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளோம். அதற்கு முன்னர் எமக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<