கோல்டர் நைலினால் ஆபத்தலிருந்து தப்பினோம்: மிட்செல் ஸ்டார்க்

182
Getty Image

மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சு மற்றும் நெதன் கோல்டர் நைலின் அதிரடி ஆட்டத்தின் உதவியினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (06) நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 15 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து ஜேசன் ஹோல்டர் கவலை

அவுஸ்திரேலிய வீரர் நெதன் கோல்டர் நைலின் ………

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான நெதன் கோல்டர் நைல் துடுப்பாட்டத்தில் 92 ஓட்டங்களை எடுத்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் செல்ல, பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் அரங்கில் தனது 6ஆவது ஐந்து விக்கெட் பிரதியையும், உலகக் கிண்ணத்தில் 2ஆவது ஐந்து விக்கெட் பிரதியையும் அவர் பதிவு செய்தார்.

அத்துடன், ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளைக் கைபற்றிய முதலாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மிட்செல் ஸ்டார்க் அளித்த பேட்டியில்,

”இந்த வெற்றியானது திருப்தியைக் கொடுத்துள்ளது. ஏனெனில் நாங்கள் இன்று அற்புதமான முறையில் கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் ஓரளவு சிறப்பாக விளையாடியிருந்தோம் என நம்புகிறேன். அதேபோல, 3 துறைகளிலும் நிறைய நல்ல விடயங்களை எங்களால் செய்ய முடிந்தது. அத்துடன், கோல்டர் நைல் விளையாடி விதம் பாராட்டத்தக்கது.

மேலும், எதிரணிக்கு சவாலான ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயிக்க முடிந்தமை எமக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்திருந்தது. எனவே இந்தப் போட்டியில் நிறைய சாதகமான விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.

ஸ்மித், கோல்டர்-நைல் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் ……

அதுமாத்திரமின்றி, நாங்கள் சிறந்ததொரு பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருந்தோம். எனவே இறுதி ஓவர்களில் அவர்கள் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்பது எமக்குத் தெரியும். எனவே, அனைத்து பந்துவீச்சாளர்களும் தமது பொறுப்பை சரிவரச் செய்து முடித்தார்கள் என தெரிவித்தார்.

இதேநேரம், கடந்த சில வாரங்களாக நடைபெற்ற போட்டிகளிலும், இன்றைய போட்டியிலும் அணிக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே இந்த ஒத்துழைப்பை அடுத்துவரும் போட்டிகளிலும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். உண்மையில் இந்த வெற்றியானது எமது அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கிய அறிகுறியாக இருக்கும். அதேபோல, நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதேபோல, இவ்வாறான மிகப் பெரிய போட்டித் தொடர்களில் ஒரு அணியாக எமது பங்களிப்பினை வழங்கினால் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அது மிகவும் சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. எனினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக் கேரியின் இணைப்பாட்டம் மற்றும் சகலதுறை வீரராக 8ஆம் இலக்கத்தில் களமிறங்கி 92 ஓட்டங்களைக் குவித்த நெதன் கோல்டர் நைலின் அதிரடி ஆட்டம் என்பவற்றால் அவ்வணி 288 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் …..

எனவே, தனது சக வேகப் பந்துவீச்சாளர் கோல்டர் நைலின் துடுப்பாட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்டார்க் பதிலளிக்கையில்,

கோல்டர் நைல் பந்துகளை எதிர்கொள்வதில் சிறந்த துடுப்பாட்ட வீரராக உள்ளார். அத்துடன், இந்தப் போட்டியில் அவர் சில அற்புதமான துடுப்பாட்ட பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தார். உண்மையில் அவருடைய 92 ஓட்டங்கள் இல்லாவிட்டால் எமக்கு பந்துவீச்சில் நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என குறிப்பிட்டார்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் 3ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாம் பந்தில் கிறிஸ் கெய்லுக்கு நடுவர் கிறிஸ் கபானி எல்.பி.டபுள்யூ கொடுத்தார். உடனே கெய்ல் அதனை மீள்பரிசீலனை செய்து ஆட்டமிழப்பில் இருந்து தப்பினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மீண்டும் ஸ்டார்க் எல்.பி.டபிள்யூ கேட்க, நடுவர் ஆட்டமிழப்பு கொடுத்தார். மீண்டும், கெய்ல் மீள்பரிசீலனை செய்து தப்பித்தார். பின்னர் கிறிஸ் கெய்ல், 5ஆவது ஓவரில் மீள்பரிசீலனை செய்தும் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், 5ஆவது ஓவரில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்த பந்துக்கு முந்தைய பந்தை ஸ்டார்க் வீசிய போது சுமார் 4 அங்குலம் வரை அவர் காலை எல்லைக் கோட்டுக்கு வெளியே வைத்துள்ளார். ஆனால், குறித்த பந்துக்கு நடுவர் நோ போல் கொடுக்கவில்லை. ஒருவேளை, அந்த பந்துக்கு நோ போல் கொடுத்திருந்தால், கெய்ல் ஆட்டமிழந்த பந்து ப்ரீஹிட் ஆக இருந்திருக்கும்.

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் மொஹமட் சேஷார்ட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ……

இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வினவியபோது,

”அந்த நேரத்தில் நான் நோ போல் வீசியதை அறிந்திருக்கவில்லை. நான் வழக்கமாக எல்லைக் கோட்டுக்கு நெருக்கமாகத் தான் காலை வைப்பேன். ஆனால், கடந்த சில வாரங்களாக அவ்வாறு பந்துவீசுவதை தவிர்ப்பதற்கு பயிற்சிகள் செய்தேன். உண்மையில் நான் வீசிய பந்து எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றிருந்தது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து தான் நான் அதை தெரிந்து கொண்டேன்” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<