கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் எட்டாவது மோதலாக இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருக்கின்றது.
உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இப்போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (5) பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகியது.
ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி
உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய….
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் அணிக்காக வழங்கினார்.
தமது உலகக் கிண்ணப் பயணத்தினை இலங்கை அணியுடனான வெற்றியுடன் ஆரம்பித்த நியூசிலாந்து அணி, இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
நியூசிலாந்து அணி – மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரொஸ் டெய்லர், டொம் லேதம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹோமே, மிச்செல் சேன்ட்னர், மேட் ஹென்றி, லொக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட்
மறுமுனையில் தென்னாபிரிக்க அணியுடனான வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரினை ஆரம்பம் செய்த மஷ்ரபி மொர்தஸா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மாலிங்க
உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக….
பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், சகீப் அல் ஹஸன், முஸ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மஹ்மதுல்லாஹ், மொசாதீக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், மெஹிதி ஹஸன், மஷ்ரபி மொர்தஸா (அணித்தலைவர்), முஸ்தபிசுர் ரஹ்மான்
பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்த போதிலும் அதனை பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கார் ஆகியோர் சரியான முறையில் கொண்டு செல்ல தவறினர்.
பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக செளம்யா சர்க்கார் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த விக்கெட்டாக தமிம் இக்பால் 24 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது சதத்துடன் வலுச்சேர்த்தார். எனினும், சகீப் அல் ஹஸனின் விக்கெட் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கொலின் டி கிரான்ஹோமேவின் வேகத்திற்கு இரையானது. மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்ட சகீப் அல் ஹஸன் ஆட்டமிழக்கும் போது 7 பெளண்டரிகள் அடங்கலாக ஒருநாள் போட்டிகளில் தனது 44ஆவது அரைச்சதத்தை பதிவு செய்து 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
சகீப் அல் ஹஸனின் விக்கெட்டினை அடுத்து பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இதேநேரம், பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை வீரர்களில் மொஹமட் சயீபுத்தின் (29) மற்றும் மொஹமட் மிதுன் (26) ஆகியோர் மாத்திரமே இருபது ஓட்டங்களை கடந்திருந்தனர்.
தொடர்ந்து 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி, 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் வெற்றியினை பாராட்டும் கிரிக்கெட் பிரபலங்கள்
ஆப்கானிஸ்தான் அணியினை த்ரில்லரான முறையில்……
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக மெட் ஹென்ரி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு, ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார். அதோடு, ட்ரென்ட் போல்ட் இப்போட்டி மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தான் கைப்பற்றிய 150ஆவது விக்கெட்டினையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 245 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய நியூசிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோர் எதிர்பார்த்த அளவு ஜொலிக்க தவறி ஆட்டமிழந்தனர். கப்டில் அதிரடியான ஆட்டத்தை காண்பித்து வெறும் 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெற்றதோடு, மன்ரோவும் 24 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
எனினும், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் மூன்றாம் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டம் (105) ஒன்றை உருவாக்கினர். இந்த இணைப்பாட்டத்தினால் நியூசிலாந்து அணி போட்டியில் வெற்றியினை நோக்கி இலகுவாக நகர்ந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டாக அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களோடு மெஹிதி ஹஸனின் சுழலில் வீழ்ந்தார்.
தொடர்ந்து புதிய வீரராக வந்த டொம் லேதமும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கேன் வில்லியம்சனுடன் முன்னதாக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிய ரொஸ் டெய்லரின் விக்கெட்டும் அவர் அரைச்சதம் பெற்ற நிலையில் பறிபோனது. ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 48ஆவது அரைச்சதத்தை பதிவு செய்த ரொஸ் டெய்லர், 91 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றிருந்ததார்.
டெய்லரின் விக்கெட்டின் பின்னர் நியூசிலாந்து அணியினர் சிறிது தடுமாற்றத்தை காட்டிய போதிலும் போட்டியில் தோல்வியுறும் நிலைக்கு சென்றிருக்கவில்லை.
அதன்படி, 47.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 248 ஓட்டங்களை பெற்று போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தனது துடுப்பாட்டம் மூலம் சிறிய பங்களிப்பினை வழங்கிய ஜேம்ஸ் நீஷம் 25 ஓட்டங்களை பெற்றுத்தந்ததோடு, மிச்செல் சேன்ட்னர் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கையின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்களே காரணம் ஹத்துருசிங்க
ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற விறுவிறுப்பான…..
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக மெஹிதி ஹஸன், சகீப் அல் ஹஸன், மொசாதிக் ஹொசைன் மற்றும் மொஹமட் சயீபுத்தின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றிக்காக முயற்சி செய்திருந்த போதிலும் அது பலன் தரவில்லை.
போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான ரொஸ் டெய்லர் தெரிவாகியிருந்தார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்திருக்கும் நியூசிலாந்து அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (08) டோன்டவுன் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி: தொடரை வென்றது பாக். இளையோர்
இதேநேரம் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் தோல்வியினை சந்தித்துள்ள பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணி விளையாடும் அதேநாளில் தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியை கார்டிப் நகர மைதானத்தில் வைத்து சந்திக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tamim Iqbal | c Trent Boult b Lockie Ferguson | 24 | 38 | 3 | 0 | 63.16 |
Soumya Sarkar | b Matt Henry | 25 | 25 | 3 | 0 | 100.00 |
Shakib Al Hasan (vc) | c Tom Latham b Colin de Grandhomme | 64 | 68 | 7 | 0 | 94.12 |
Mushfiqur Rahim | run out (Tom Latham) | 19 | 35 | 2 | 0 | 54.29 |
Mohammad Mithun | c Colin de Grandhomme b Matt Henry | 26 | 33 | 3 | 0 | 78.79 |
Mahmudullah | c Kane Williamson b Mitchell Santner | 20 | 41 | 0 | 0 | 48.78 |
Mosaddek Hossain | c Martin Guptill b Trent Boult | 11 | 22 | 0 | 0 | 50.00 |
Mohammad Saifuddin | b Matt Henry | 29 | 23 | 3 | 1 | 126.09 |
Mehidy Hasan Miraz | c Tom Latham b Trent Boult | 7 | 9 | 0 | 0 | 77.78 |
Mashrafe Mortaza | c Trent Boult b Matt Henry | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Mustafizur Rahman | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 18 (b 1 , lb 8 , nb 0, w 9, pen 0) |
Total | 244/10 (49.2 Overs, RR: 4.95) |
Fall of Wickets | 1-45 (8.3) Soumya Sarkar, 2-60 (13.2) Tamim Iqbal, 3-110 (23.5) Mushfiqur Rahim, 4-151 (30.2) Shakib Al Hasan (vc), 5-179 (37.1) Mohammad Mithun, 6-197 (42.3) Mahmudullah, 7-224 (46.2) Mosaddek Hossain, 8-235 (48.2) Mehidy Hasan Miraz, 9-244 (49.1) Mashrafe Mortaza, 10-244 (49.2) Mohammad Saifuddin, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Matt Henry | 9.2 | 0 | 47 | 4 | 5.11 | |
Trent Boult | 10 | 0 | 44 | 2 | 4.40 | |
Lockie Ferguson | 10 | 0 | 40 | 1 | 4.00 | |
Colin de Grandhomme | 8 | 0 | 39 | 1 | 4.88 | |
Jimmy Neesham | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Mitchell Santner | 10 | 1 | 41 | 1 | 4.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | c Tamim Iqbal b Shakib Al Hasan (vc) | 25 | 14 | 3 | 1 | 178.57 |
Colin Munro | c Mehidy Hasan Miraz b Shakib Al Hasan (vc) | 24 | 34 | 3 | 1 | 70.59 |
Kane Williamson | c Mosaddek Hossain b Mehidy Hasan Miraz | 40 | 72 | 1 | 0 | 55.56 |
Ross Taylor | c Mushfiqur Rahim b Mosaddek Hossain | 82 | 91 | 9 | 0 | 90.11 |
Tom Latham | c Mohammad Saifuddin b Mehidy Hasan Miraz | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Jimmy Neesham | c Soumya Sarkar b Mosaddek Hossain | 25 | 33 | 2 | 1 | 75.76 |
Colin de Grandhomme | c Mushfiqur Rahim b Mohammad Saifuddin | 15 | 13 | 2 | 0 | 115.38 |
Mitchell Santner | not out | 17 | 12 | 2 | 0 | 141.67 |
Matt Henry | b Mohammad Saifuddin | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Lockie Ferguson | not out | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Extras | 10 (b 0 , lb 0 , nb 1, w 9, pen 0) |
Total | 248/8 (47.1 Overs, RR: 5.26) |
Did not bat | Trent Boult, |
Fall of Wickets | 1-35 (5.1) Martin Guptill, 2-55 (9.6) Colin Munro, 3-160 (31.1) Kane Williamson, 4-162 (31.6) Tom Latham, 5-191 (38.3) Ross Taylor, 6-218 (42.5) Colin de Grandhomme, 7-218 (43.3) Jimmy Neesham, 8-238 (46.3) Matt Henry, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mashrafe Mortaza | 5 | 0 | 32 | 0 | 6.40 | |
Mehidy Hasan Miraz | 10 | 0 | 47 | 2 | 4.70 | |
Mustafizur Rahman | 7.1 | 0 | 48 | 0 | 6.76 | |
Shakib Al Hasan (vc) | 10 | 0 | 47 | 2 | 4.70 | |
Mohammad Saifuddin | 7 | 0 | 41 | 2 | 5.86 | |
Mosaddek Hossain | 8 | 0 | 33 | 2 | 4.12 |
முடிவு – நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<