உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 14 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கின்றது.
உலகக் கிண்ண லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் போட்டி, நொட்டிங்ஹம் ட்ரென்ட் பிரிட்ஜ் நகரில் நேற்று (3) ஆரம்பமானது.
தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – மாலிங்க
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை (4) நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பில்…….
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்காக வழங்கியிருந்தார்.
இந்த உலகக் கிண்ணத்தொடரினை தென்னாபிரிக்க அணியுடனான வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டிருந்தது.
அந்தவகையில், தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் விளையாடிய லியம் பிளன்கெட்டிற்கு பதிலாக மார்க் வூட் இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்
மறுமுனையில் தமது உலகக் கிண்ணப் பயணத்தினை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வியுடன் ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் அணியில் சொஹைப் மலிக் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் இமாத் வஸீம் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஆகியோரின் இடத்தினை இப்போட்டியில் எடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், சொஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), ஆசிப் அலி, சதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹம்மட் ஆமீர்
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
ஆப்கானிஸ்தான் சுழலுக்கு பதில் கூறுமா இலங்கை?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து……
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த பக்கார் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் நல்ல தொடக்கத்தினை வழங்கினர். எனினும், இந்த நல்ல தொடக்கத்திற்கு இங்கிலாந்து அணியின் சுழல் வீரரான மொயின் அலி முற்றுப்புள்ளி வைத்தார். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த பக்கார் சமான் 40 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் பாகிஸ்தான் அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம்-உல்-ஹக் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்து 58 பந்துகளில் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை குவித்தார்.
இவர்கள் இருவரின் விக்கெட்டையும் அடுத்து பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்கு மொஹமட் ஹபீஸ், அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட், பாபர் அசாம் ஆகியோர் தாம் பெற்ற அரைச்சதங்களுடன் நங்கூரமிட்டனர்.
இவர்களில் மொஹமட் ஹபீஸ் ஒருநாள் போட்டிகளில் தனது 38ஆவது அரைச்சதத்துடன் 62 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் தனது 13ஆவது அரைச்சதத்தோடு 63 ஓட்டங்கள் பெற்றிருக்க, பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஒருநாள் போட்டிகளில் பெற்ற 11ஆவது அரைச்சதத்தோடு 55 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த போதிலும் இந்த மூன்று வீரர்களின் அரைச்சதங்கள் சவாலான ஓட்டங்களை பெற உதவியாக இருந்தது. அதன்படி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 348 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மார்க் வூட் 2 விக்கெட்டுக்களை தனது பெயரின் கீழ் கைப்பற்றியிருந்தார்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவாலான 349 ஓட்டங்களை அடைய இங்கிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோருடன் ஆரம்பித்தது.
தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன
கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள் மேற்கொண்ட தவறான துடுப்பாட்ட……
இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ஜேசன் ரோய் 8 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்ற, மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ் 32 ஓட்டங்களை பெற்றார்.
இதன் பின்னர் களம் வந்த இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஜொலிக்க தவறினர். இதில் மோர்கன் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற, பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டங்களை எடுத்தார்.
இப்படியாக தமது முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த இங்கிலாந்து அணி தமது வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தின் போது ஒரு கட்டத்தில் 118 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இங்கிலாந்து அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். இதேநேரம் இந்த இணைப்பாட்டத்திற்குள் ஜோ ரூட் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 15ஆவது சதத்தினையும் பதிவு செய்தார்.
பின்னர் 130 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் ஜோ ரூட்டின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. சதாப் கானின் சுழலில் வீழ்ந்த ஜோ ரூட் 104 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 107 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ஜோ ரூட்டினை அடுத்து ஜோஸ் பட்லரும் இங்கிலாந்து அணிக்காக சதம் பெற்றார். எனினும், ஜோஸ் பட்லரின் இந்த சதம் இங்கிலாந்து அணிக்கு போட்டியில் வெற்றியினை சுவைக்க உதவியாக இருக்கவில்லை. அதன்படி, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 8ஆவது சதத்தோடு வெறும் 76 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்
This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload. கிரிக்கெட் உலகக் கிண்ணத்……
மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வஹாப் ரியாஸ் தனது வேகம் மூலம் 3 விக்கெட்டுக்களை சாய்க்க, சதாப் கான் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஹபீஸ் பெற்றுக் கொண்டார்.
இப்போட்டி மூலம் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அணி தமது அடுத்த போட்டியில் இலங்கை அணியினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (7) பிரிஸ்டல் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.
இதேநேரம், உலகக் கிண்ணத் தொடரில் முதல் தோல்வியினை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷ் வீரர்களை எதிர்வரும் சனிக்கிழமை (8) கார்டிப் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Imam-ul-Haq | c Chris Woakes b Moeen Ali | 44 | 58 | 3 | 1 | 75.86 |
Fakhar Zaman | st Jos Buttler b Moeen Ali | 36 | 40 | 6 | 0 | 90.00 |
Babar Azam | c Chris Woakes b Moeen Ali | 63 | 66 | 4 | 1 | 95.45 |
Mohammad Hafeez | c Chris Woakes b Mark Wood | 84 | 62 | 8 | 2 | 135.48 |
Sarfaraz Ahmed | c & b Chris Woakes | 55 | 44 | 5 | 0 | 125.00 |
Asif Ali | c Jonny Bairstow b Mark Wood | 14 | 11 | 0 | 1 | 127.27 |
Shoaib Malik | c Eoin Morgan b Chris Woakes | 8 | 8 | 0 | 0 | 100.00 |
Wahab Riaz | c Joe Root b Chris Woakes | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Hasan Ali | not out | 10 | 5 | 0 | 1 | 200.00 |
Shadab Khan | not out | 10 | 4 | 2 | 0 | 250.00 |
Extras | 20 (b 1 , lb 8 , nb 0, w 11, pen 0) |
Total | 348/8 (50 Overs, RR: 6.96) |
Fall of Wickets | 1-82 (14.1) Fakhar Zaman, 2-111 (20.1) Imam-ul-Haq, 3-199 (32.5) Babar Azam, 4-279 (42.4) Mohammad Hafeez, 5-311 (46.1) Asif Ali, 6-319 (47.2) Sarfaraz Ahmed, 7-325 (47.5) Wahab Riaz, 8-337 (49.1) Shoaib Malik, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 8 | 1 | 71 | 3 | 8.88 | |
Jofra Archer | 10 | 0 | 79 | 0 | 7.90 | |
Moeen Ali | 10 | 0 | 50 | 3 | 5.00 | |
Mark Wood | 10 | 0 | 53 | 2 | 5.30 | |
Ben Stokes | 7 | 0 | 43 | 0 | 6.14 | |
Adil Rashid | 5 | 0 | 43 | 0 | 8.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | lbw b Shadab Khan | 8 | 7 | 2 | 0 | 114.29 |
Jonny Bairstow | c Sarfaraz Ahmed b Wahab Riaz | 32 | 31 | 4 | 1 | 103.23 |
Joe Root | c Mohammad Hafeez b Shadab Khan | 107 | 104 | 10 | 1 | 102.88 |
Eoin Morgan | b Mohammad Hafeez | 9 | 18 | 1 | 0 | 50.00 |
Ben Stokes | c Sarfaraz Ahmed b Shoaib Malik | 13 | 18 | 1 | 0 | 72.22 |
Jos Buttler | c Wahab Riaz b Mohammad Amir | 103 | 76 | 9 | 2 | 135.53 |
Moeen Ali | c Fakhar Zaman b Wahab Riaz | 19 | 20 | 1 | 0 | 95.00 |
Chris Woakes | c Sarfaraz Ahmed b Wahab Riaz | 21 | 14 | 1 | 1 | 150.00 |
Jofra Archer | c Wahab Riaz b Mohammad Amir | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Adil Rashid | not out | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Mark Wood | not out | 10 | 6 | 0 | 0 | 166.67 |
Extras | 8 (b 0 , lb 3 , nb 0, w 5, pen 0) |
Total | 334/9 (50 Overs, RR: 6.68) |
Fall of Wickets | 1-12 (2.1) Jason Roy, 2-60 (8.6) Jonny Bairstow, 3-86 (14.5) Eoin Morgan, 4-118 (21.2) Ben Stokes, 5-248 (38.5) Joe Root, 6-288 (44.3) Jos Buttler, 7-320 (47.5) Moeen Ali, 8-320 (47.6) Chris Woakes, 9-322 (48.4) Jofra Archer, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shadab Khan | 10 | 0 | 63 | 2 | 6.30 | |
Mohammad Amir | 10 | 0 | 67 | 2 | 6.70 | |
Wahab Riaz | 10 | 0 | 82 | 3 | 8.20 | |
Hasan Ali | 10 | 0 | 66 | 0 | 6.60 | |
Mohammad Hafeez | 7 | 0 | 43 | 1 | 6.14 | |
Shoaib Malik | 3 | 0 | 10 | 1 | 3.33 |
முடிவு – பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<