ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களுடன் சாதனை படைத்த சகீப்

183
Image Courtesy - Getty

தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்ற உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் சகலதுறையிலும் பிராகசித்த பங்களாதேஷ் வீரர் சகீப் அல் ஹசன், புதிய உலக சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சகீப் அல் ஹசன், துடுப்பாட்டத்தில் 75 ஓட்டங்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

தனது 199ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி 43ஆவது ஒருநாள் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த சகீப், 250 விக்கெட்டுக்களையும், 5 ஆயிரத்து 792 ஓட்டங்களைக் குவித்து குறைந்த போட்டிகளில் 250 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதல் வீரராகவும், 5 ஆயிரம் ஓட்டங்களுடன் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 5ஆவது வீரராகவும் அவர் புதிய சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியில் எய்டன் மார்கம்மின் விக்கெட்டை சகீப் அல் ஹசன் வீழ்த்திய போது இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

குறித்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர்களான அப்துல் ரசாக் 258 போட்டிகளிலும், சஹீட் அப்ரிடி 273 போட்டிகளிலும், தென்னாபிரிக்காவின் ஜெக் கலீஸ் 296 போட்டிகளிலும், இலங்கையின் சனத் ஜயசூரியா 304 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த நான்கு வீரர்களும் 250 விக்கெட்டுக்களுடன் 5 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

வீரர் விக்கெட்டுக்கள் ஓட்டங்கள்
அப்துல் ரசாக் 269 5,080
சஹீட் அப்ரிடி 395 8,064
சனத் ஜயசூரியா 323 13,430
ஜெக் ஜயசூரியா 273 11,579

 

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

100ஆவது போட்டி

இந்தப் போட்டியில் களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர்;, தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 2ஆவது சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார். இதற்குமுன் நிக்கி போஜே, 113 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இணைப்பாட்டம்

பங்களாதேஷ் அணிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகீப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஜோடி, 3ஆம் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்களைக் குவித்தனர். இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் எந்தவொரு விக்கெடடுக்கும் பங்களாதேஷ் அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த ஜோடியாக இடம்பிடித்தனர். இதற்குமுன், 2015இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மஹ்மதுல்லாஹ், முஸ்பிகுர் ரஹீம் ஜோடி 5ஆவது விக்கெட்டுக்காக 141 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.

அதிகபட்ச ஓட்டம்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 330 ஓட்டங்களைக் குவித்து ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது. இதற்குமுன் 2015இல் பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணி 329 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியை இழந்தது அதிர்ஷ்டம் – மஷ்ரபி மொர்தசா

தென்னாபிரிக்காவுடனான லீக் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாணய சுழற்சி அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது போல தமது…

இரண்டாவது தடவை

உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் பங்களாதேஷ் அணி, 2ஆவது தடவையாக தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியிருந்தது. இதற்குமுன் 2007இல் கயானாவில் நடைபெற்ற சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாhபிரிக்க அணியை வீழ்த்தியிருந்தது. .இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 184 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

12ஆவது வெற்றி

உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட 12ஆவது வெற்றியாக இது பதிவாகியது. இதற்குமுன் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை 2 தடவைகளும், இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் பெர்மூடா ஆகிய அணிகளை தலா ஒரு தடவையும் பங்களாதேஷ் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<