நியூசிலாந்தை வீழ்த்த முடியும் – திமுத் நம்பிக்கை

1344

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், அணி வீரர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான உத்வேகத்தை வழங்கியுள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றை பொருத்தவரையில், 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி, மிகவும் இக்கட்டான நிலையில், இம்முறை விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இலங்கை உள்ளதுடன், இறுதியாக நடைபெற்ற பலமான தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 0-5 என இழந்திருந்தது.

இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 2015ம்

எனினும், 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை அணிக்கு வென்றுக்கொடுத்த அர்ஜுன ரணதுங்க மற்றும் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் வழங்கிய ஆலோசனைகள் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக திமுத் கூறியுள்ளார்.

அத்துடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருந்தமை, தலைவர் என்ற ரீதியில் அவருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

“குமார் சங்கக்கார அணி வீரர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். குறித்த ஆலோசனைகள் அணிக்கு மிக உதவியாக இருந்தது. காரணம், கடந்த உலகக் கிண்ணத்தில் சங்கக்கார விளையாடியிருந்ததுடன், அதில் அவர் சிறப்பாக பிரகாசித்திருந்தார். இதனால், அவர் மனரீதியாக மட்டுமன்றி எவ்வாறு உலகக் கிண்ணத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்ற விடயங்கள் எமது அணிக்கு மேலும் உதவியாக இருந்தது”

அத்துடன், அர்ஜுன ரணதுங்கவும் அணி வீரர்களிடம் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார். அணி என்ற ரீதியில் முன்னாள் வீரர்கள் இவ்வாறு அவர்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது குறித்த விடயங்கள் எமக்கு உத்வேகத்தை அளிக்கும். அதேநேரம் மஹேல ஜயவர்தனவும் இங்கு (இங்கிலாந்து) வருகைதந்துள்ளார். எனவே, அவரும் விரைவில் எமக்கு அவருடைய ஆலோசனையை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

நீண்ட நாட்களுக்கு அணி வீரர்களுடன் இணைந்து விளையாடாமல், மீண்டும் அணிக்கு திரும்பி வீரர்கள் தொடர்பில் அறிந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். குறிப்பாக நான் 4 வருடங்களுக்கு பின்னர் அணியுடன் இணைந்துள்ளேன். எனக்கு இது மிகவும் கடினமான விடயம். ஆனால், தங்களுக்கு என ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சி எப்பொழுதும் இருக்க வேண்டும். இவ்வாறு, வாய்ப்பு கிடைத்திருக்கும் புதிய வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து, தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

Photos: CWC19 – Sri Lanka training session ahead of New Zealand match

ThePapare.com | ThePapare | 31/05/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an

அதேநேரம், கடந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் சிலர் உள்ளனர். அணி சிறப்பாக செயற்படுவதற்கு அவர்களின் பங்களிப்பு முக்கியம். இவ்வாறான வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கு மேலும் பலம்”

இலங்கை அணியை பொருத்தவரையில் அனுபவம் வாய்ந்த 6 வீரர்கள் உள்ளனர். இவர்களில் லசித் மாலிங்க உட்பட குறித்த 6 வீரர்களும் 80 இற்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவ்வாறு அணியில் அனுபவம் இருந்தாலும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகிய அனுபவம் அற்ற வீரர்களும் அணியில் உள்ளனர்.

“வீரர்களை பொருத்தவரை அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டியில் மாத்திரம் விளையாடியவர்கள் அல்ல. அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், அவர்கள் இலங்கை அணிக்காக பிரகாசிக்க தவறியுள்ளனர்” என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார். அத்துடன், தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவா? அல்லது 3 ஆவது துடுப்பாட்ட வீரராகவா? களமிறங்குவது என்பது தொடர்பில் இதுவரை முடியுசெய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

“உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கு, தேர்வுக்குழு கடந்த காலங்களில் புதிய வாய்ப்புகளை வழங்கியிருந்தது. இப்போது நாம் புத்துணர்ச்சியுடன் கூடிய அணியொன்றை உருவாக்கியுள்ளோம். அத்துடன், இரண்டு சிறந்த பயிற்சிப் போட்டிகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளோம். இப்போது நாம் உலகக் கிண்ணத்துக்கு தயாராகியுள்ளதாக நான் நினைக்றேன்”

நியூசிலாந்த அணி கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்ததுடன், இறுதியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 3-0 என கைப்பற்றியிருந்தது. ஆனால், கார்டிப் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் இலங்கை அணி அச்சமற்ற அணியாக களமிறங்கவுள்ளதாக கருணாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.

“நாம் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் சிறப்பாக செயற்பட்டால், நியூசிலாந்து அணியை எம்மால் நிச்சயமாக வெற்றிக்கொள்ள முடியும். நாளைய போட்டி 50/50  என்ற சதவீதத்தை கொண்ட போட்டி. குறிப்பாக நியூசிலாந்து அணி, பயிற்சிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது. அதனால், என்ன நடக்கப்போகின்றது என்பதை யாராலும் கணிக்க முடியாது.

குறிப்பிட்ட நாளில் நாம் சிறப்பாக செயற்பட்டால், எம்மால் வெற்றிபெற முடியும். அதற்காக நாம் எதிரணியுடன் கடுமையாக போட்டியிட வேண்டும்” என்றார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண போட்டி நாளை (01) கார்டிப்பில் உள்ள ஷோபியா கார்டன் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க