Home Tamil மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

329

நேற்று ஆரம்பமான 12 ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியினை மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து அதிரடி வெற்றியினை பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் போட்டி நொட்டிங்கம் நகரில் இன்று (31) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் அணிக்காக வழங்கினார்.

உலகக் கிண்ண முதல் போட்டியில் சில அரிய சாதனை அடைவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது அத்தியாயம் இங்கிலாந்து மற்றும்….

இப்போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் துடுப்பாட்ட வீரர் ஈவின் லூயிஸ், ஷன்னோன் கேப்ரியல் ஆகியோருக்கு உபாதை கருதி ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி – கிறிஸ் கெயில், சாய் ஹோப், டர்ரன் ப்ராவோ, சிம்ரோன் ஹெட்மேயர், நிகோலஸ் பூரான், அன்ரூ ரஸல், ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கார்லோஸ் ப்ரத்வைட், ஏஷ்லி நேர்ஸ், செல்டோன் கொல்ட்ரல், ஒசானே தோமஸ்

மறுமுனையில் சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணி மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஆஸிப் அலி, சொஹைப் மலிக் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கவில்லை.

பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், மொஹமட் ஹபீஸ், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹம்மட் ஆமீர்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக பாகிஸ்தான் அணியினர் தமது துடுப்பாட்டத்தை இமாம்-உல்-ஹக் மற்றும் பக்கார் சமான் ஆகியோருடன் ஆரம்பம் செய்தனர்.

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டேன் – மோர்கன்

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த….

துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இமாம்-உல்-ஹக் செல்டோன் கொல்ட்ரல் வீசிய பந்தினை விக்கெட் காப்பாளர் ஷாய் ஹோப்பிடம் பிடிகொடுத்து வெறும் 2 ஓட்டங்களுடன் அரங்கு நடந்தார்.

இமாம்-உல்-ஹக்கினை அடுத்து ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பக்கார் சமானும் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அன்ரூ ரஸலின் வேகத்திற்கு போல்ட் செய்யப்பட்ட பக்கார் சமான் 22 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தார்.

பக்கார் சமானை அடுத்து பாகிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமும் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

பின்னர் பாகிஸ்தானின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட், ஹாரிஸ் சொஹைல், இமாத் வஸீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகளின் வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாறி மிகவும் விரைவாக ஆட்டமிழந்தனர். இவர்களில் சர்பராஸ் அஹ்மட் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை (16) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் 12 ஆவது முறையாக இன்று (30) இங்கிலாந்தில்….

இவ்வாறாக தமது துடுப்பாட்ட  வீரர்களை தொடர்ந்து இழந்து தவித்த பாகிஸ்தான் அணிக்கு பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் கைகொடுக்கத் தவறினர்.

இதனால், 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 105 ஓட்டங்களை  மாத்திரமே தமது துடுப்பாட்ட இன்னிங்ஸில் பெற்றுக் கொண்டது.

இதேநேரம், பாகிஸ்தான் வெளிப்படுத்திய மோசமான துடுப்பாட்டம் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர்கள் பெற்றுக்கொண்ட  இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதியவும் காரணமாக இருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப் பந்துவீச்சாளர்களே அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். இதில் ஒசானே தோமஸ் 27 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 4 விக்கெட்டுகளை சுருட்ட, அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், அன்ரூ ரஸல் 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொல்ட்ரல் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம்….

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக மிகவும் சவால் குறைந்த 106 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, கிறிஸ் கெயில் அதிரடியான முறையில் அரைச்சதம் ஒன்று பெற்று உதவியிருந்தார்.

இந்த அரைச்சத உதவியோடு மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 13.4 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களுடன் அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 52ஆவது அரைச்சதத்துடன் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு உதவிய மற்றுமொரு வீரரான நிகோலஸ் பூரான் 19 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜொப்ரா ஆச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட டு பிளெசிஸ்

இங்கிலாந்து அணியுடன் விளையாடுகின்ற எந்தவொரு அணியாக இருந்தாலும், ஜொப்ரா….

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமீர் சாய்த்திருந்த போதிலும், அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளினால் உபயோகம் எதுவும் பெறப்பட்டிருக்கவில்லை.

போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஒசானே தோமஸ் தெரிவாகியிருந்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் பாகிஸ்தான் அணி, தமது அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியினை வரும் திங்கட்கிழமை (03) இதே நொட்டிங்கம் மைதானத்தில் வைத்து சந்திக்கின்றது.

இதேநேரம், அதிரடி வெற்றி ஒன்றோடு தமது உலகக் கிண்ண பயணத்தினை ஆரம்பித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினர் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (06) அவுஸ்திரேலிய அணியினை எதிர்கொள்கின்றனர். இந்த போட்டியும் இதே நொட்டிங்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

Result

West Indies
108/3 (13.4)

Pakistan
105/10 (21.4)

Batsmen R B 4s 6s SR
Imam-ul-Haq c Shai Hope b Sheldon Cottrell, 2 11 0 0 18.18
Fakhar Zaman b Andre Russell 22 16 2 1 137.50
Babar Azam c Shai Hope b Oshane Thomas 22 33 2 0 66.67
Haris Sohail c Shai Hope b Andre Russell 8 11 1 0 72.73
Sarfaraz Ahmed c Shai Hope b Jason Holder 8 12 1 0 66.67
Mohammad Hafeez c Sheldon Cottrell, b Oshane Thomas 16 24 2 0 66.67
Imad Wasim c Chris Gayle b Jason Holder 1 3 0 0 33.33
Shadab Khan lbw b Oshane Thomas 0 1 0 0 0.00
Hasan Ali c Sheldon Cottrell, b Jason Holder 1 4 0 0 25.00
Wahab Riaz b Oshane Thomas 18 11 1 2 163.64
Mohammad Amir not out 3 6 0 0 50.00


Extras 4 (b 0 , lb 0 , nb 2, w 2, pen 0)
Total 105/10 (21.4 Overs, RR: 4.85)
Fall of Wickets 1-17 (2.6) Imam-ul-Haq, 2-35 (5.5) Fakhar Zaman, 3-45 (9.4) Haris Sohail, 4-62 (13.1) Babar Azam, 5-75 (16.1) Sarfaraz Ahmed, 6-77 (16.6) Imad Wasim, 7-78 (17.3) Shadab Khan, 8-81 (18.3) Hasan Ali, 9-83 (19.3) Mohammad Hafeez, 10-105 (21.4) Wahab Riaz,

Bowling O M R W Econ
Sheldon Cottrell, 4 0 18 1 4.50
Jason Holder 5 0 42 3 8.40
Andre Russell 3 1 4 2 1.33
Carlos Brathwaite 4 0 14 0 3.50
Oshane Thomas 5.4 0 27 4 5.00


Batsmen R B 4s 6s SR
Chris Gayle c Shadab Khan b Mohammad Amir 50 34 6 3 147.06
Shai Hope c Mohammad Hafeez b Mohammad Amir 11 17 1 0 64.71
Darren Bravo, c Babar Azam b Mohammad Amir 0 4 0 0 0.00
Nicholas Pooran not out 34 19 4 2 178.95
Shimron Hetmyer not out 7 8 0 0 87.50


Extras 6 (b 0 , lb 3 , nb 0, w 3, pen 0)
Total 108/3 (13.4 Overs, RR: 7.9)
Fall of Wickets 1-36 (4.3) Shai Hope, 2-46 (6.2) Darren Bravo,, 3-77 (10.5) Chris Gayle,

Bowling O M R W Econ
Mohammad Amir 6 0 26 3 4.33
Hasan Ali 4 0 39 0 9.75
Wahab Riaz 3.4 1 40 0 11.76



முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி  

 >>மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<