உலகக் கிண்ணத்தில் வேகப் பந்துவீச்சில் கலக்கவுள்ள நட்சத்திரங்கள்

218
Image Courtesy -Getty Images

இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு ஓட்டங்களைக் குவிப்பார்களோ அதேபோன்று வேகப் பந்துவீச்சாளர்களின் பாகமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. உலகின் அதிசிறந்த ஒருசில வேகப் பந்துவீச்சாளார்கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், உலகக் கிண்ணத்தில் வேகப் பந்துவீச்சில் மிரட்டுவதற்கு காத்திருக்கின்ற முக்கிய சில வீரர்கள் தொடர்பில் இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் சுழலில் மிரட்டக் காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்

கிரிக்கெட் உலகின் அடுத்த வல்லரசு யார் என்பதை தீர்மானிக்கும்…..

ககிசோ ரபாடா (தென்னாபிரிக்கா)

துடுப்பாட்ட வீரர்களின் கால்களை நோக்கி வீசப்படும் பாரம்பரிய யோக்கர் பந்துகளை வீசுவதில் முன்னிலை வீரராக ககிசோ ரபாடா இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 66
விக்கெட்டுக்கள் – 106
சராசரி – 4.98


ஜொப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)

உலகம் பூராகவும் நடைபெற்று வருகின்ற டி-20 தொடர்களில் அண்மைக்காலமாக விளையாடி வருகின்ற மேற்கிந்திய தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜொப்ரா ஆர்ச்சர், தனது துல்லியமான வேகப் பந்துவீச்சினால் அனைவரது கவனத்தையும் பெற்ற முக்கிய வீரர் ஆவார்.

உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் இறுதி நேரத்தில் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட ஆர்ச்சர், இம்முறை உலகக் கிண்ணத்தில் அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் முக்கிய துரும்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 3
விக்கெட்டுக்கள் –3
சராசரி – 4.90


மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

இன்சுவிங் பந்துகளை வீசுவதில் உலகின் முன்னிலை வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற மிட்செல் ஸ்டார்க், 2 ஆவது தடவையாகவும் அவுஸ்திரேலிய அணிக்காக உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் வேகப் பந்துவீசசில் மிரட்டிய ஸ்டார்க், 22 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஸ்டார்க், இம்முறை உலகக் கிண்ணத்தில் இன்சுவிங் யோக்கர் பந்துகளை வீசி எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 75
விக்கெட்டுக்கள் – 145
சராசரி – 4.95

உலகக் கிண்ணத்தில் கலக்க காத்திருக்கும் சகலதுறை வீரர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண….


கிமார் ரோச் (மேற்கிந்திய தீவுகள்)

இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிற்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிமார் ரோச் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது ஸ்விங் மற்றும் துல்லியமான முறையில் வீசும் இன்சுவிங் யோக்கர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். அத்துடன், இறுதி ஓவர்களில் இவரது பந்துவீச்சு எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பமனமாக இருக்கும். எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் கிமார் ரோச் மேற்கிந்திய தீவுகள் அணியின் துரும்புச் சீட்டாக இருப்பார்.

போட்டிகள் – 85
விக்கெட்டுக்கள் – 117
சராசரி – 5.07


புவனேஷ்வர் குமார் (இந்தியா)

கைகளின் ஆள்காட்டி விரல், நடுவில் பந்தை வைத்து மெதுவாக வீசுகின்ற திறமையைக் கொண்ட இந்தியாவின் புவனேஷ்வர் குமார் இம்முறை உலகக் கிண்ணத்தில் வேகப் பந்துவீச்சில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகின்ற அவருக்கு இம்முறை ஐ.பி.எல் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. எனினும், இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்துகள் வேகமாக மேலெழும் என்பதால் புவனேஷ்வரின் யோக்கர்கள் எதிரணி வீரர்களுக்கு தலையிடியையும், பதற்றத்தையும் கொடுக்கும்.

போட்டிகள் – 105
விக்கெட்டுக்கள் – 118
சராசரி – 5.01


டொம் கரண் (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக டொம் கரண் விளங்குகின்றார். பல்வேறு வகையான யோக்கர் பந்துகளை வீசுவதில் திறமை கொண்ட கரணுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரகாசிப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போட்டிகள் – 17
விக்கெட்டுக்கள் – 27
சராசரி – 6.33


லசித் மாலிங்க (இலங்கை)

இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகின்ற பந்துவீச்சாளர்களில் ஒருவராக லசித் மாலிங்கவை குறிப்பிடலாம். அனுபவமிக்க ஒரு வீரராக இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு வேகம் குறைந்த யோக்கர் (slow yoker) பந்துகளை வீசி நெருக்கடியைக் கொடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. அதிலும் கடைசி ஓவர்களில் எதிரணியை பதற்றத்துக்கு ஆளாக்குகின்ற யுக்தியும் அவரிடம் உண்டு.  யோக்கர் பந்துகளை வீசுவதில் உலகின் முதல்நிலை வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மாலிங்க, தனது அனுபவத்தையும், நுட்பத்தையும் பயன்படுத்தி தேவையான நேரங்களில் தமது அணிக்கு விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 218
விக்கெட்டுக்கள் – 322
சராசரி – 5.33

அடித்தாடும் துடுப்பாட்டம் வெற்றிக்கு வழியல்ல – லஹிரு திரிமான்ன

ஒருநாள் போட்டிகளில் அடித்தாடுவதன் மூலம்……


ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)

மாலிங்கவைப் போல மிதவேக யோக்கர் பந்துகளை வீசுவதில் முதல்நிலை வீரராக அண்மைக்காலமாக வலம்வந்து கொண்டிருக்கின்ற பும்ரா, இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், இந்திய அணியின் துரும்புச்சீட்டாகவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் – 49
விக்கெட்டுக்கள் – 85
சராசரி – 4.51

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<