தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான போட்டி அட்டவணை இன்று (28) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இருதரப்பு தொடருக்கான தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் குழாமும் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியானது அடுத்த மாத (ஜூன்) இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் போன்ற இரு தொடர்களில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது.
“நாட்டு மக்கள் எமக்கு பக்கபலமாக உள்ளனர்”- குசல் மெண்டிஸ்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த ஒருநாள் தொடரானது முக்கோண ஒருநாள் தொடராக பெயரிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த அணியான ‘யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா’ அணியின் பங்குபற்றுதலுடன் இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியுடன் சேர்ந்து முக்கோண ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
ஒரு அணி இன்னொரு அணியுடன் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது. மொத்தமாக ஒரு அணி ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
தென்னாபிரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்திருந்த டி20 செலேஞ் லீக் தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கு இலங்கை வளர்ந்துவரும் அணியுடனான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டொனி டி சொர்ஸி தலைமையில் 16 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் அடங்கிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி குழாம்.
டொனி டி சொர்ஸி (அணித்தலைவர்), ஜெனீமென் மாலன், ரெய்னார்ட் வென் டொன்டர், மெத்யூ பிரீட்ஸ்கி, வென்டில் மெக்வீட், சினிதெம்பா கியூஸிலி, சிபொனிலோ மக்ஹன்யா, எதன் பொஸ்ச், தெஸீபங் டிதோலே, டிலாடி பொகாகோ, நன்ட்ரீ பேர்கர், கைல் சிம்மன்டொஸ், லுதோ சிபம்லா, பிஜோர்ன் போர்டியுன், ஜெசன் ஸ்மித், டைய்யான் கலீம்
தொடர் அட்டவணை
முக்கோண ஒருநாள் தொடர்
- 29 ஜூன் – முதலாவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் இலங்கை வளர்ந்துவரும் அணி – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
- 30 ஜூன் – இரண்டாவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
- 1 ஜூலை – மூன்றாவது ஒருநாள் போட்டி
இலங்கை வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
- 4 ஜூலை – நான்காவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – டுக்ஸ் ஓவல் – பிரிடோரியா
- 5 ஜூலை – ஐந்தாவது ஒருநாள் போட்டி
இலங்கை வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – டுக்ஸ் ஓவல் – பிரிடோரியா
- 6 ஜூலை – ஆறாவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் இலங்கை வளர்ந்துவரும் அணி – டுக்ஸ் ஓவல் – பிரிடோரியா
- 9 ஜூலை – ஏழாவது ஒருநாள் போட்டி
இலங்கை வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
- 10 ஜூலை – எட்டாவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் இலங்கை வளர்ந்துவரும் அணி – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க
- 11 ஜூலை – ஒன்பதாவது ஒருநாள் போட்டி
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி எதிர் யுனிவெர்சிட்டி ஸ்போட்ஸ் சௌத் ஆபிரிக்கா – க்ரோயின்க்லூப் – பிரிடோரியா
- 14 ஜூலை – இறுதி ஒருநாள் போட்டி
புள்ளிப்பட்டியில் முதலிடம் எதிர் இரண்டாமிடம் – டுக்ஸ் ஓவல் – பிரிடோரியா
நான்கு நாள் டெஸ்ட் தொடர்
- 18 – 21 ஜூலை – முதலாவது டெஸ்ட் போட்டி – சென்வீஸ் பார்க் – பொட்சிப்ட்ரூம்
- 25 – 28 ஜூலை – இரண்டாவது டெஸ்ட் போட்டி – டுக்ஸ் ஓவல் – பிரிடோரியா
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<