இலங்கை அணிக்கு எதிராக இன்று (27) நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்து, உலகக் கிண்ணத்துக்கு நம்பிக்கையுடன் செல்கின்றது. அதேநேரம், இலங்கை அணி தங்களுடைய இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
சௌதெம்டன் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
‘அழுத்தத்தை கையாள்வதே முக்கியம்’: அஞ்செலோ மெதிவ்ஸ்
எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் அழுத்தமான சூழலை கடந்து….
இன்றைய போட்டியில், உபாதைக்குள்ளாகிய அவிஷ்க பெர்னாண்டோ அணிக்கு திரும்பியிருந்த போதிலும், அவர் துடுப்பெடுத்தாடவில்லை. அதேநேரம், இசுரு உதான மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதுடன், அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், நெதன் குல்டர் நைல் மற்றும் ஜேசன் பெஹெரன்டொர்ப் ஆகியோர் களமிறங்கவில்லை.
இந்தப் போட்டியை பொருத்தவரையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. லஹிரு திரிமான்ன சிறப்பாக ஆடிய நிலையில், கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கடந்திருந்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். திமுத் வெளியேறிய போதிலும் தனது அனுபவத்திற்கேற்ப துடுப்பாட்டத்தை திரிமான்ன வழிநடத்தினார்.
ஆனால், திரிமான்ன களத்தில் நிற்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் இருந்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறியதுடன், ஆஸி. அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் முன்வந்து விக்கெட்டுகளை கைப்பற்ற தொடங்கினர். ஆரம்ப விக்கெட்டினை கேன் ரிச்சட்சன் கைப்பற்றிய போதிலும், அடுத்த ஐந்து விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்கள் கைவசப்படுத்தியிருந்தனர்.
இலங்கை அணியின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் அடித்தளத்தை இட்டுக்கொண்ட போதிலும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு தங்களை அழைத்துச் செல்ல தவறியிருந்தனர். குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் முறையே பகுதிநேர பந்து வீச்சாளர்களான கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, குசல் மெண்டிஸ் மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் எடம் சம்பாவின் பந்து வீச்சில் விக்கெட்டினை பறிகொடுத்தனர்.
அதேநேரம், பொறுமையாக துடுப்பாடி, அரைச்சதம் கடந்த லஹிரு திரிமான்ன 56 ஓட்டங்களை அணியின் சார்பாக அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, பின்வரிசையில் களமிறங்கிய தனன்ஜய டி சில்வா தனக்கு வழங்கப்பட்ட 7வது இடத்தில் களமிறங்கி 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில், இன்றைய தினம் 8 பந்துவீச்சாளர்களை அந்த அணி பயன்படுத்தியிருந்தது. இதில், சம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க ஏனைய பந்து வீச்சாளர்களில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் மாத்திரம் விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், சற்று இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப விக்கெட் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும், ஷோன் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் நிதான இணைப்பாட்டத்தை பெற்றனர். முதல் விக்கெட்டுக்காக ஆட்டமிழந்த ஆரோன் பின்ச், நுவன் பிரதீப்பின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்திருந்தார். இந்த ஆட்டமிழப்பை இலங்கை அணி, DRS முறையில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தங்களது துடுப்பாட்டத்தின் மூலம் மார்ஷ் மற்றும் கவாஜா ஜோடி இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருவரும், இரண்டாவது விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்த நிலையில், இலங்கை அணி சார்பாக பந்து வீசுவதற்கு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான தனன்ஜய டி சில்வா அழைக்கப்பட்டார். கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்த இவர், ஆஸி. அணியின் இரண்டாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை தகர்த்தார். நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஷோன் மார்ஷ் 34 ஓட்டங்களுடன் மிலிந்த சிறிவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய அணி தங்களுடைய இரண்டாவது விக்கெட்டினை இழந்த போதும், அடுத்து வருகைத்தந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் கிளேன் மெக்ஸ்வேல் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகப்படுத்தினார். இவருடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிய கவாஜா அரைச்சதம் கடந்தார். இலங்கை அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்க, பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான மிலிந்த சிறிவர்தன அழைக்கப்பட, அவர் தன்னுடைய முதல் ஓவரில் மெக்ஸ்வேலை (36) வெளியேற்றினார்.
எவ்வாறாயினும், அடுத்து களம் நுழைந்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் (32) வேகமான ஓட்டக்குவிப்புடனும், உஸ்மான் கவாஜாவின் நிதானமானதும், அனுபவபூர்வமான 89 ஓட்டங்களின் உதவியுடனும் அவுஸ்திரேலிய அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன் மூலம் தங்களுடைய இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, முழுமையான நம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தை நோக்கியுள்ளதுடன், இலங்கை அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது. முக்கியமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் போதுமான அளவு ஓட்டங்களை குவிக்க தவறியதன் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. எனினும், இந்தப் போட்டியில் திரிமான்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
SLC இன் அழைப்பை மறுத்த மஹேலவுக்கு மெதிவ்ஸின் வேண்டுகோள்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும்….
இதேவேளை, இன்று வெற்றியை தக்கவைத்துள்ள அவுஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்வரும் முதலாம் திகதி சந்திக்கவுள்ளதுடன், அதே தினத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | b Nathan Lyon | 56 | 69 | 7 | 0 | 81.16 |
Dimuth Karunaratne | c Alex Carey b Jhye Richardson | 16 | 36 | 1 | 0 | 44.44 |
Kusal Perera | lbw b Glenn Maxwell | 12 | 19 | 1 | 0 | 63.16 |
Kusal Mendis | c Nathan Lyon b Adam Zampa | 24 | 33 | 2 | 0 | 72.73 |
Angelo Mathews | c & b Steve Smith | 17 | 21 | 2 | 0 | 80.95 |
Jeevan Mendis | lbw b Adam Zampa | 21 | 36 | 1 | 0 | 58.33 |
Dhananjaya de Silva | b Mitchell Starc | 43 | 41 | 4 | 0 | 104.88 |
Thisara Perera | c Glenn Maxwell b Pat Cummins | 27 | 33 | 1 | 0 | 81.82 |
Suranga Lakmal | not out | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Milinda Siriwardana | not out | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Extras | 12 (b 0 , lb 5 , nb 0, w 7, pen 0) |
Total | 239/8 (50 Overs, RR: 4.78) |
Fall of Wickets | 1-44 (9.5) Dimuth Karunaratne, 2-72 (16.2) Kusal Perera, 3-110 (24.6) Lahiru Thirimanne, 4-117 (27.1) Kusal Mendis, 5-147 (33.4) Angelo Mathews, 6-161 (37.5) Jeevan Mendis, 7-225 (47.1) Thisara Perera, 8-230 (48.4) Dhananjaya de Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 9 | 0 | 38 | 2 | 4.22 | |
Pat Cummins | 8 | 0 | 23 | 1 | 2.88 | |
Jhye Richardson | 6 | 0 | 52 | 1 | 8.67 | |
Glenn Maxwell | 5 | 0 | 14 | 0 | 2.80 | |
Marcus Stoinis | 3 | 0 | 11 | 0 | 3.67 | |
Adam Zampa | 9 | 0 | 39 | 2 | 4.33 | |
Nathan Lyon | 8 | 0 | 48 | 1 | 6.00 | |
Steve Smith | 2 | 0 | 9 | 1 | 4.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Aaron Finch | lbw b Nuwan Pradeep | 11 | 16 | 2 | 0 | 68.75 |
Usman Khawaja | st Kusal Perera b Jeffery Vandersay | 89 | 105 | 3 | 0 | 84.76 |
Shaun Marsh | c Milinda Siriwardana b Dhananjaya de Silva | 34 | 46 | 3 | 0 | 73.91 |
Glenn Maxwell | c Dhananjaya de Silva b Milinda Siriwardana | 36 | 36 | 4 | 0 | 100.00 |
Marcus Stoinis | c Angelo Perera b Jeffery Vandersay | 32 | 30 | 1 | 1 | 106.67 |
Alex Carey | not out | 18 | 26 | 2 | 0 | 69.23 |
Pat Cummins | not out | 9 | 11 | 0 | 0 | 81.82 |
Extras | 12 (b 0 , lb 2 , nb 1, w 9, pen 0) |
Total | 241/5 (44.5 Overs, RR: 5.38) |
Fall of Wickets | 1-16 (3.6) Aaron Finch, 2-96 (19.3) Shaun Marsh, 3-161 (29.6) Glenn Maxwell, 4-203 (36.4) Marcus Stoinis, 5-218 (40.2) Usman Khawaja, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 6 | 0 | 26 | 0 | 4.33 | |
Nuwan Pradeep | 6 | 1 | 28 | 1 | 4.67 | |
Jeevan Mendis | 10 | 0 | 54 | 0 | 5.40 | |
Thisara Perera | 5 | 0 | 35 | 0 | 7.00 | |
Dhananjaya de Silva | 5 | 0 | 17 | 1 | 3.40 | |
Jeffery Vandersay | 7.5 | 0 | 51 | 2 | 6.80 | |
Milinda Siriwardana | 5 | 0 | 28 | 1 | 5.60 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<