IPL இல் பிரகாசித்த பலர் இலங்கை ஏ அணியுடனான இந்திய அணியில்

329
Iplt20.com

இலங்கை ஏ அணியை எதிர்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியின் குழாமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (15) வெளியிட்டுள்ளது. இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் பிரகாசித்த பல வீரர்களுக்கு குறித்த குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இலங்கை கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தியோகபூர்வற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. குறித்த இருதரப்பு தொடரானது இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் ஜூன் 15ஆம் திகதி வரை இந்தியாவின் இரு பிரதேசங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான இலங்கை அணியின் இரு குழாம்களும் கடந்த புதன்கிழமை (08) வெளியிடப்பட்டிருந்தது.  

இலங்கை ஏ அணியின் பயிற்றுவிப்பாளராக ரோய் டயஸ் நியமனம்

இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் பிரதான…………

உத்தியோகபூர்வற்ற டெஸ்ட் குழாம்

வெளியிடப்பட்ட குழாமின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக 58 தர போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதுடைய குஜராத் அணி வீரரான பிரியங் பஞ்சால் செயற்படவுள்ளார். அணியின் விக்கெட் காப்பாளராக 25 வயதுடைய ஆந்திரா அணி வீரரான சிறிகார் பரத் செயற்படவுள்ளார்.  

இந்த வருடம் (2019) நடைபெற்ற .பி.எல் தொடரில் விளையாடிய அணிகளில் ஐந்து அணிகளிலிருந்து எட்டு வீரர்கள் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து மூன்று வீரர்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து இரண்டு வீரர்களும், சன்ரைஸஸ் ஹைதராபாத், ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகளிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் வீதம் இந்திய ஏ அணியின் குழுாமில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை வருகிறது பாகிஸ்தான் இளையோர் அணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ……….

அதிட்யா சர்வேட், ரிங்கு சிங் மற்றும் சன்டீப் வாரியர் ஆகியோர் முதல் தடவையாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். விக்கெட் காப்பாளர் உள்ளடங்களாக ஏழு துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சகலதுறை வீரர்களை உள்ளடக்கியதாக குறித்த குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

14 பேர் அடங்கிய டெஸ்ட் குழாம்

பிரியங் பஞ்சால் (அணித்தலைவர்), அபிமன்யு ஈஸ்வரன், அன்மொல்பிரீட் சிங், ரிக்கி புயி, சித்தேஷ் லாட், ரிங்கு சிங், சிவம் துபே, சிறிகார் பரத் (விக்கெட் காப்பாளர்), ராஹூல் சஹார், ஜயன்த் யாதவ், அதிட்யா சர்வேட், சன்டீப் வாரியர், அன்கிட் ராஜ்பூட், இஸ்ஹான் போரெல்

ஒருநாள் குழாம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்முறை .பி.எல் தொடரில் பிரகாசித்த 20 வயது இளம் வீரரான இஷான் கிஷான் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் விக்கெட் காப்பாளராகவும் இஷான் கிஷானே பெயரிடப்பட்டுள்ளார்.  

டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ள ஐந்து வீரர்கள் ஒருநாள் தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளனர். இந்திய தேசிய அணிக்காக இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதுடள் இம்முறை .பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காவும் பிரகாசித்திருந்த 19 வயதுடைய இளம் வீரர் சுப்மன் கில், ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள 19 வயதுடைய தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மற்றும் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள மயங்க் மார்கண்டே ஆகியோரும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ………..

ஒருநாள் குழாமிற்காக இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைஸஸ் ஹைதராபாத், ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளிலிருந்து தலா இரண்டு வீரர்கள் வீதம் மொத்தமாக 10 வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் காப்பாளர் உள்ளடங்களாக ஆறு துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சகலதுறை வீரர்களை உள்ளடக்கியதாக குறித்த குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

14 பேர் அடங்கிய ஒருநாள் குழாம்

இஷான் கிஷான் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அன்மொல்பிரீட் சிங், ரிதுராஜ் கைக்வாட், தீபக் ஹோடா, ரிக்கி புயி, சுப்மன் கில், சிவம் துபே, சிரேயஸ் கோபால், வொஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, துஷார் தேஸ்பாண்டே, சன்டீப் வாரியர், இஸ்ஹான் போரெல், பிரசாந்த் சோப்ரா

போட்டி அட்டவணை

  • மே 25 – 28 – முதலாவது டெஸ்ட் போட்டிபெல்காம்
  • மே 31 – ஜூன் 03 – இரண்டாவது டெஸ்ட் போட்டிஹூப்லி
  • ஜூன் 6 – முதலாவது ஒருநாள் போட்டிஹூப்லி
  • ஜூன் 8 – இரண்டாவது ஒருநாள் போட்டிஹூப்லி
  • ஜூன் 10 – மூன்றாவது ஒருநாள் போட்டிஹூப்லி
  • ஜூன் 13 – நான்காவது ஒருநாள் போட்டிபெல்காம்
  • ஜூன் 15 – ஐந்தாவது ஒருநாள் போட்டிபெல்கம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<