பாகிஸ்தானின் இமாலய ஓட்டங்களை அபாரமாக துரத்திய இங்கிலாந்து

199

ஜொன்னி பெஸ்டோ பெற்ற அபார சதத்தின் உதவியோடு பாகிஸ்தான் நிர்ணயித்த 359 என்ற ஓட்ட வெற்றி இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்​ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பகிஸ்தானின் போராட்டம் வீணாக இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி

பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச ……….

பிரிஸ்டல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட சாதகமான சூழல் இருந்தபோதும் உலகக் கிண்ணம் நெருங்கி இருப்பதால் ஓர் ஒத்திகையாக பதிலெடுத்தாட திர்மானித்து.  

இந்நிலையில் பாகிஸ்தான் இமாலய இலக்கை நிர்ணயித்தபோதும் பெஸ்டோ 93 பந்துகளில் 128 ஓட்டங்களை விளாசியதோடு, அவருக்கு உதவியாக ஜேசன் ரோய் 76 ஓட்டங்களையும் ஜோ ரூட் 43 ஓட்டங்களையும் பெற்றதோடு மொயீன் அலி ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தி வென்றதோடு, தனது சொந்த மண்ணில் இதுவே சிறந்த பதிவாகவும் பதிவானது. இந்த ஓட்டங்களை இங்கிலாந்து ஐந்து ஓவர்கள் மீதம் வைத்தே எட்டியமை குறிப்பிடத்தக்கது.

குறுகிய பௌண்டரி எல்லை, வேகமாக பந்து செல்லும் மைதானம் மற்றும் மந்தமான ஆடுகளத்தை பயன்படுத்தி இரு அணிகளும் ஓட்ட மழை பொழிந்ததை பார்க்க முடிந்தது.

கேள்விக்குறியான மொஹமட் ஆமீரின் உலகக் கிண்ண வாய்ப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ………

முதலில் துடுப்பெடுத்தாட வந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாமுல் ஹக் அதிரடி காட்டினார். 131 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 151 ஓட்டங்களை விளாசி ஒருநாள் போட்டிகளில் தனது அதிக ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் இன்ஸமாமுல் ஹக்கின் மருமகனான இமாமுல் ஹக் 27 ஒருநாள் போட்டிகளில் பெறும் 9 ஆவது சதமாக இது பதிவாகியது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது.

கடந்த போட்டியில் சதம் பெற்ற ஜோஸ் பட்லர், ஆதில் ரஷீத் மற்றும் ஜப்ரா ஆர்சர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜொன்னி பெஸ்டோவை தடுக்க முடியாததால் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

பாக். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமீருக்கு சின்னம்மை தொற்றி இருப்பதால் இந்தப் போட்டியிலும் அவர் ஆடவில்லை. உலகக் கிண்ண அணியில் இடம்பெறாத அவர் தனது திறமையை நிரூபித்து அணிக்கு திரும்ப இந்தத் தொடரே கடைசி வாய்ப்பாக உள்ளது.

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மே 17ஆம் திகதி நொட்டின்ஹாமில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 358/9 (50) – இமாமுல் ஹக் 151, ஆசிப் அலி 52, கிறிஸ் வோக்ஸ் 4/67

இங்கிலாந்து – 359/4 (44.5) – ஜொன்னி பெஸ்டோ 128, ஜேசன் ரோய் 76, மொயீன் அலி 46*  

முடிவு – இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<