ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஸ்கொட்லாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு

237
cricketscotland.com

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான ஸ்கொட்லாந்து அணியின் குழாம் ஒரு அறிமுக வீரரின் உள்வாங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைமையில் அதிரடி மாற்றங்கள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ……..

ஸ்கொட்லாந்து அணியானது ஆப்கானிஸ்தான் அணியை தங்களது சொந்த நாட்டுக்கு அழைத்து இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.  

இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை ஸ்கொட்லாந்து அணி இழந்திருந்த போதிலும் மற்றைய அணியான ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அணி என்ற ரீதியில் அவ்வணிக்கு குறித்த தொடர் பயிற்சிக்கான சிறந்த களமாக காணப்படுகின்றது.

இந்த அடிப்படையில் குறித்த ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான ஸ்கொட்லாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் நேற்று (05) வெளியிடப்பட்டிருந்தது.

வெளியிடப்பட்ட குழாமின் அடிப்படையில் அணியின் தலைவராக கெயில் கொட்ஸர் தொடர்ந்து செயற்படும் வகையில் பெயரிடப்பட்டுள்ளார். 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுழற் பந்துவீச்சாளரான டொம் ஸோல், 11 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வேகப் பந்துவீச்சாளரான ப்ரெட் வீல் மற்றும் துடுப்பாட்ட வீரரான மிச்செல் ஜோன்ஸ் ஆகியோர் உள்ளூர் லீக் தொடரில் தங்களது திறமைகளை வெளிக்காட்டியதன் காரணமாக ஒரு வருட இடைவெளியின் பின்னர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

மாலிங்கவின் அபார பந்து வீச்சின் மூலம் மும்பை அணிக்கு வெற்றி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (05) நடைபெற்ற இறுதி …….

கடந்த 2015ஆம் ஆண்டு அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியின் போது முதல்முறை சர்வதேச அறிமுகம் பெற்ற 24 வயதுடைய வேகப் பந்துவீச்சாளரான கெவின் மெயின் 3 ஆண்டுகளின் பின்னர் கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவுள்ளார். கெவின் மெயின் உள்ளூர் கழகமான துர்ஹம் அணியில் பிரகாசித்ததன் காரணமாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இறுதியாக 2016 மே மாதமே சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்டுள்ள குழாமில் ஏழு துடுப்பாட்ட வீரர்கள், ஆறு பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சகலதுறை வீரர் அடங்கலாக 14 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இரண்டு விக்கெட் காப்பாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்டுவாட்ர் விட்டிங்ஹம், அட்ரியன் நெய்ல் மற்றும் ரௌத்ரி ஸ்மித் ஆகியோர் உபாதையிலிருந்து மீளாததன் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், கெயில் கொட்ஸர், ரிச்சி பெரிங்டென், மெத்யூ க்ரொஸ், கெலும் மெக்லிஅட் மற்றும் சப்யான் சரிப் ஆகிய ஐந்து அனுபவ வீரர்கள் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளமை அணிக்கு பலமாக அமைந்துள்ளது.

365 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த மேற்கிந்திய தொடக்க ஜோடி

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ……

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள ஒருநாள் அணிகளின் தரவரிசைப்படி ஆப்கானிஸ்தான் அணி 64 தரவரிசை புள்ளிகளுடன் பத்தாமிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி 40 தரவரிசை புள்ளிகளுடன் பதின்மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன.

மேலும், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியும் ஸ்கொட்லாந்து அணியுடன் இம்மாதம் 18, 21ஆம் திகதிகள் இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் அடங்கிய குழாம்

கெயில் கொட்ஸர் (அணித்தலைவர்), ரிச்சி பெரிங்டென், மெத்யூ க்ரொஸ் (விக்கெட் காப்பாளர்), அலஸ்டெய்ர் இவன்ஸ், மிச்செல் ஜோன்ஸ், மிச்செல் லீசக், கெலும் மெக்லிஅட், கெவின் மெயின், ஜோர்ஜ் முன்ஸி, சப்யான் சரிப், டொம் ஸோல், கிரேக் வல்லேஸ் (விக்கெட் காப்பாளர்), மார்க் வாட், ப்ரெட் வீல்   

போட்டி அட்டவணை

  • மே 8 – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிஎடின்பேர்க்
  • மே 10 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டிஎடின்பேர்க்   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<