FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதிகாண் முதல் சுற்று போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணி முதல் சுற்றின் முதல் போட்டியாக மெகாவு அணியுடன் போட்டியிடவுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளின் முதல் கட்ட போட்டி ஜூன் மாதம் 06ஆம் திகதி மெகாவுவில் நடைபெறவுள்ளது. அதன் இரண்டாவது கட்டப் போட்டி அதற்கு ஐந்து நாட்களுக்குப் பின் கொழும்பில் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்
இலங்கை இந்த தகுதிகாண் போட்டியில் B குழுவில் போட்டியிடுகிறது. ஆசிய தரப்படுத்தலில் கடைசி இடத்தைப் பொற்றுக்கொண்டுள்ள இலங்கை, உலகத் தரப்படுத்தலில் 201 ஆவது இடத்தில் உள்ளது. முதல் சுற்றில் இலங்கை அணியின் எதிரணியான மெகாவு, உலகத் தரப்படுத்தலில் 183ஆவது இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் உலகத் தரப்படுத்தலில் 209ஆவது இடத்தில் இருந்த பூட்டான் அணியிடம் அப்போது உலகத் தரப்படுத்தலில் 172 ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. அதன் முதல் சுற்றுப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றதோடு இரண்டாவது சுற்றில் பூட்டான் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற முடிந்தது.
இந்தக் காலப்பகுதி இலங்கை கால்பந்து வரலாற்றின் இருண்ட காலமாக கருதப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு நிர்வாக மற்றும் உள்ளக மாற்றங்கள் பலதையும் மேற்கொள்வதற்கு கால்பந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும் கால்பந்து விளையாட்டை கட்டியெழுப்ப அது போதுமாக இருக்கவில்லை. தற்போது இலங்கை கால்பந்து அணி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தரப்படுத்தலில் கடைசி இடங்களுக்கு சரிந்திருக்கும் இலங்கை அணி 201 ஆவது இடத்தில் உள்ளது.
2015 ஆம் ஆண்டில் செர்பியாவின் நிகொலா காவாசொவிக் இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அது பூட்டானுடனான போட்டிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஜனவரி மாதத்திலாகும். இரண்டு போட்டிகளில் மாத்திரம் பயிற்சியாளராக சேவையாற்றிய அவரை அந்த பதவியில் இருந்து அகற்றியது பூட்டானிடம் சந்தித்த கசப்பான தோல்வியாலாகும். அது 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக 1995 ஆம் ஆண்டு SAARC Gold Cup போட்டியில் வெற்றிக்காக இலங்கை அணியை வழிநடத்திய சம்பத் பெரேரா பொறுப்பை ஏற்றது நிரந்தர பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்யும்வரை பணியாற்றுவதற்காகவாகும். 2016 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் டட்லி ஸ்டெயின்வோல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதோடு அவரின் கீழ் இலங்கை அணி அந்த அண்டில் AFC Solidarity Cup போட்டியில் பங்கேற்றது. அந்தத் தொடரில் இலங்கை அணி முகம்கொடுத்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைந்தது. அது லாவோசிடம் 2-1 என்ற கோல்கள் கணக்கிலும், மொங்கோலியாவிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கிலும் தோல்வியை சந்தித்தது. மெகாவு உடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வி இன்றி இலங்கை கால்பந்து அணி முடித்துக் கொண்டது.
இந்த தொடருக்கு முன்னர் இலங்கை கம்போடிய அணியுடன் நட்புறவுப் போட்டிக்காக இணைந்ததோடு அதில் கம்போடிய அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. அதன்படி 2018 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி மெகாவு உடன் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் இலங்கை அணி இன்னும் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடியதில்லை.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக நிசாம் பக்கீர் அலி நியமிக்கப்பட்டார். அவர் சர்வதேச தரத்தில் அனுபவம் கொண்ட பயிற்சியாளராக பெயர்பெற்றவர் என்பதோடு தனது தாய் நாட்டுக்கு சேவை ஆற்றுவதற்கு ஆர்வம் காட்டுவது சந்தேகமில்லை. அதன்படி இலங்கை கால்பந்து விளையாட்டை உயர்த்துவது அவரது முக்கிய சவாலாகும்.
மத்தியஸ்தரை அவமதித்த நெய்மாருக்கு 3 ஐரோப்பிய போட்டிகளில் தடை
நிசாம் அலியின் பயிற்சியில் இலங்கை அணி முகம்கொடுத்த முதல் போட்டியாக ஐரோப்பிய கால்பந்து அணி ஒன்றான லித்துவேனியாவுடன் நடைபெற்ற போட்டி பதிவானது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடருக்கு லித்துவேனிய அணி உலகத் தரப்படுத்தலில் 126 ஆவது இடத்தில் இருக்கும் அணியாகவே கலந்துகொண்டது. அந்த தொடரின் முதல் போட்டி 0-0 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிப்பதற்கு இலங்கை அணியால் முடிந்தது கால்பந்து ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளானது. இரண்டாவது போட்டியில் இலங்கை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தபோதும் எதிர்பார்ப்பை வைத்திருக்க முடியுமான ஒன்றாக இருந்தது.
SAFF கால்பந்து போட்டித் தொடருக்கு முன்னர் தயார்படுத்தலாக இலங்கை அணி ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் ஒன்றுக்காக இணைந்ததோடு எட்டு போட்டிகளைக் கொண்டதாக அந்த சுற்றுப்பயணம் அமைந்தது. எவ்வாறாயினும் அந்த தொடரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
SAFF தொடரை நடத்திய பங்களாதேஷ், இலங்கை அணியின் அடுத்த போட்டியாளரானது. SAFF தொடருக்கு சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தத் தொடரில் போட்டியை நடத்திய பங்களாதேஷை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்துவதற்கு இலங்கை அணியால் முடிந்தது. அதன் பின்னர் இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. மாலைதீவுகளுக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்ய இலங்கையால் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மாலைதீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அது 2013 ஆம் ஆண்டிலாகும்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மலேசியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியே இலங்கை அணி முகம்கொடுத்த கடைசி சர்வதேச போட்டி என்பதோடு முதல் 60 நிமிடங்களில் 0-0 என்ற கணக்கில் சமநிலை பெற இலங்கை அணியால் முடிந்தது. எனினும் போட்டியின் கடைசி சில நிமிடங்களில் பலவீனமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய இலங்கை அணி, மலேசியாவுக்கு 4 கோல்களை விட்டுக்கொடுத்தது. அதன்படி 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. மலேசியாவும் இம்முறை தகுதிகாண் தேர்வு போட்டியில் விளையாடுவதோடு இலங்கைக்கு அது ஒரு வகையில் ஆறுதலாகும்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் ஜெஸ்பர் உமர் இந்த தகுதிகாண் போட்டிகள் குறித்து கருத்து கூறும்போது,
“நாம் இந்த தொடருக்கு முந்திய சந்தர்ப்பங்களை விட மாறுபட்டு, முறையாக மற்றும் சிறந்த வகையில் ஒருங்கிணைந்து முகம்கொடுப்போம். அர்ப்பணிப்புடன் செயற்படும் பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் எம்மிடம் உள்ளனர். இலங்கை கால்பந்து ரசிகர்கள் கூட தேசிய அணிக்கு அதிகம் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதுதான் எமது பலமாக உள்ளது. மெகாவு போட்டிக்கு முன்னர் பல பயிற்சி போட்டிகளையும் நடத்தி மெகாவு போட்டிக்கு சிறந்த முறையில் முகம்கொடுப்பதற்கு எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தடங்கல்களை தாண்டி வந்த ஒரு கால்பந்து வீரரின் கதை
மெகாவு போட்டிக்கு முன்னர் பயிற்சிப் போட்டி நடைபெறாமல் போனால் மெகாவு உடனான போட்டி, இலங்கை 8 மாதங்களுக்கு பின்னர் முகம்கொடுக்கும் முதல் சர்வதேச போட்டியாக அமையும். இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களில் அதிகமானவர்கள் 23 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெற்ற வீரர்களாவர். இந்த 23 வயதுக்கு உட்பட்ட அணி கடந்த 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலஸ்தீன் மற்றும் பஹ்ரைனிடம் 9-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது பேசுபொருளாக மாறியது. அந்தத் தொடர் முடிவுறும்போது 3 போட்டிகளில் 20 கோல்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்திருந்தது இந்நாட்டு கால்பந்து துறையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. எவ்வாறாயினும் இந்த தேசிய அணி பயிற்சிக்காக அழைக்கப்பட்டது ஏப்ரல் மாதத்திலாகும். அதாவது ஜுன் 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மெகாவு அணியுடனான போட்டிக்கு இரண்டு மாதங்கள் அளவு எஞ்சி இருக்கும் நிலையிலாகும். ஆனால் கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் கூறியதுபோல் போட்டிகளில் படிப்படியாக முகம்கொடுப்பதற்கு என்றால் இவ்வாறான குறுகிய காலம் பயிற்சிக்கு போதுமானதாக இருக்காது.
மெகாவு உடனான இரண்டாவம் கட்டப் போட்டி கொழும்பில் நடைபெறுவது இலங்கைக்கு சாதகமாக இருக்கும். மெகாவுவில் நடைபெறும் முதல் கட்டப் போட்டியில் சாதகமான பெறுபேறு ஒன்றுடன் போட்டியை முடித்துக் கொண்டால் போட்டியின் அடுத்த சுற்றில் எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். மெகாவு அணியும் முதல் கட்டத்தில் சிறந்த பெறுபேறுடன் வெற்றியை பெற முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் இரண்டாம் கட்டப் போட்டியில் மிக இலகுவாக சவால் ஒன்றை கொடுப்பதற்கு முடியுமாக அமையும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<