தொடர் தோல்விகளிலிருந்து மீண்ட பெங்களூர் அணிக்கு பாரிய இழப்பு

214
Iplt20.com

தோள்பட்டை வீக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான தென்னாபிரிக்க வீரர் டெல் ஸ்டைன் தொடரிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 12ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்குகின்ற நிலையில் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக அமைகின்ற நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றன.

உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இரத்துச் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை

இந்நிலையில் உபாதை என்கின்ற ஒன்றானது ஒவ்வொரு வீரர்களுக்கும் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கின்றது. ஒரு வீரரினுடைய உபாதை ஒரு அணியினுடைய வெற்றி, தோல்வியில் செல்வாக்கு செலுத்துகின்றது என்ற கருத்தை யாரும் நிராகரிக்க முடியாது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணத்திற்காக விளையாடி வருகின்ற குறித்த இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) தொடரிலும், இவ்வாறு தொடர் உபாதைகள் வீரர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற நிலையில், அது இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவர் அவரது அணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

இவ்வாறான நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றியில் முக்கிய வீரராக காணப்படும் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டைன் தோள்பட்டை உபாதை காரணமாக குறித்த .பி.எல் தொடரிலிருந்து வெளியாகவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

.பி.எல் தொடர் ஆரம்பத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 31 வயதுடைய ஆஸி. அணியின் வேகப்பந்துவீச்சாளரான நதன் கோல்டர் நைல் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் முழுமையாக தொடரிலிருந்து வெளியாகியிருந்தார்.

பெங்களூர் அணி தொடர் தோல்விகளை சந்தித்துவந்த நிலையில் நதன் கோல்டர் நைலுக்கு மாற்று வீரராக தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டைன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதன் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாடிய ஸ்டைன் இரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி தொடர் தோல்விகளை சந்தித்துவந்த பெங்களூர் அணிக்கு பந்துவீச்சில் முக்கிய பங்குவகித்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன் தோள்பட்டை உபாதை காரணமாக கடந்த 2016 நம்பர் 10ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டிந்தார். அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். பின்னர் மீண்டும் வழமையாக போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

இந்நிலையில் மீண்டும் தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவருக்கு தொடர்ந்தும் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அவர் .பி.எல் தொடரிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டேல் ஸ்டைனின் குறித்த உபாதை தொடர்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முகாமையாளரான சஞ்ஜீவ் சுரிவாலா கருத்து வெளியிடுகையில், ”டேல் ஸ்டைனுக்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டை உபாதை காரணமாக அவரால் தொடந்தும் உரிய வேகத்தில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு ஓய்வு தேவை என்பதால் அணியிலிருந்து அவரை முழுமையாக விடுவிக்கின்றோம்.”

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்ஸ்டைன் பங்கேற்றிருந்த இரண்டு போட்டிகளிலும் எமது வெற்றிக்கு முக்கிய பங்காளராக அமைந்திருந்தார். ஸ்டைன் எங்கள் அணியில் விளையாடியமை எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. மேலும் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கின்றோம்” என தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் டேல் ஸ்டைன் உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்க அணி குழாமில் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். இவர் இவ்வாறு மீண்டும் உபாதைக்குள்ளாகியமை தென்னாபிரிக்க அணிக்கு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூலமாக தென்னாபிரிக்க அணியில் சர்வதேச அறிமுகம் பெற்ற 35 வயதான டேல் ஸ்டைன் 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 44 டி20 சர்வதேச போட்டிகள் என்பவற்றில் விளையாடி மொத்தமாக 696 சர்வதேச கிரிக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 439 விக்கெட்டுக்களை வீழ்த்தி அவ்வணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<