முத்துமுதலிகே புஷ்பகுமார குவைத் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம்

217

குவைத் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்துமுதலிகே புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.  

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான 37 வயதான முத்துமுதலிகே, 1990 களின் பிற்பகுதியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய சகலதுறை வீரராவார்.  

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ……

அதன்பிறகு தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிக் கொண்டிருந்த போது இலங்கை அணிக்காக ஒருநாள் வரத்தைப் பெற்றுக்கொண்ட முத்துமுதலிகே, மூன்று ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியிருந்தார்.

2009ஆம் ஆண்டு இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் தேசிய அணிக்கான அறிமுகத்தைப் பெற்றக்கொண்ட அவர், அதே தொடரில் இடம்பெற்ற ஒரேயொரு டி-20 போட்டியிலும் விளையாடியிருந்தார்.

இதேநேரம், கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளராக கடந்த 6 வருடங்களாக பணியாற்றிய அவர், அந்த கழகத்துக்காக ஒருநாள் சம்பியன் பட்டத்தை ஒரு தடவையும், இரண்டு தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.

அத்துடன், அவரது பயிற்றுவிப்பின் கீழ் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் தொடரிலும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டு தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால் …..

இதேவேளை, உலக சட்டத்தரணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் முத்துமுதலிகே புஷ்பகுமார செயற்பட்டிருந்தார்.

இதேநேரம், 1998ஆம் ஆண்டு முதல் .சி.சியின் இணை உறுப்பு நாடாக இணைந்துகொண்ட குவைத் அணி, 2005ஆம் ஆண்டு முதல் .சி.சியின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக விளையாடி வருகின்றது.

கடந்த 1979ஆம் ஆண்டு பஹ்ரைன் அணியுடன் தமது முதலாவது சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்த குவைத் அணி, 2020இல் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்துக்காக .சி.சியின் முழு உறுப்புரிமை பெற்றுக்கொண்ட நாடாக கடந்த ஜனவரி மாதம் மாலைதீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற தகுதிகாண் சர்வதேச டி-20 போட்டியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு கடந்த 2018ஆம் ஆண்டு குவைத் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஹேர்செல் கிப்ஸ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<