உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்

374
dailynews.lk

கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கான முதல் சுற்று தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியுடன் விளையாட மகாவு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை இன்று (ஏப்ரல் 17) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் AFC இல்லத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையுடனான தகுதிகாண் சுற்றில் விளையாடுவதற்கு மலேசியா, கம்போடியா, மகாவு, லாவோஸ், பூட்டான் மற்றும் மொங்கோலிய அணிகளுக்கு வாய்ப்பு இருந்தன.

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையுடன் மோதும் அணி நாளை தேர்வு

2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் ஆசிய கால்பந்து ………

கடந்த தொடரில் டிமோர்லெஸ்டேவுடன் மோதி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய மொங்கோலியா இம்முறை புரூனை தாருஸ்ஸலாம் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முன்னர் அந்த அணி 3-1 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் சீன தைபே அணியிடம் தோற்றது.

மகாவு மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி 2016 AFC ஒருமைப்பாட்டு கிண்ணத்திற்காக இரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும். அந்தப் போட்டி 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை பெற்றது. எனினும் அந்த தொடரில் தனது குழுவில் மகாவு, நேபாளத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

அணிகளை தேர்வு செய்யும் இந்தக் குலுக்கலுக்குப் பின் கருத்து வெளியிட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் கூறியதாவது,

கடந்த முறை நாம் பூட்டானுக்கு எதிராக ஆடியபோது அந்தப் போட்டியில் எமக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் இருந்து இலங்கை தேசிய அணி நல்ல முன்னேற்றம் கண்டு சிறந்த முறையில் செயற்படுகிறது. மகாவு அணியும் வலுவாக உள்ளது. எல்லா போட்டிகளும் எமக்கு முக்கியமானது. சிறந்த முறையில் செயற்பட்டு இலங்கையிடம் இன்னும் கால்பந்து விளையாட்டு எஞ்சியுள்ளது என்பதை உலகத்திற்கு காட்டுவோம்.

சமநிலையான போட்டி முடிவுடன் ஒற்றுமைக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ……

முன்னர் இல்லாத வகையில் நாம் திட்டமிட்டு மற்றும் ஏற்பாடுகளை மேற்கொண்டு தயார்படுத்தலுடன் செல்வோம். எல்லா அம்சங்களும் கொண்ட அர்ப்பணிப்புடைய பயிற்சி பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் எம்மிடம் உள்ளனர். இலங்கை கால்பந்து ரசிகர்கள் கூட தேசிய அணிக்கு மிகப்பெரிய ஆதரவு வழங்கி எமக்கு வலுச் சேர்ப்பார்கள். மகாவு அணியை எதிர்கொள்வதற்கு முன்னர் நாம் சில நட்புறவு போட்டிகளில் ஆட முயற்சிக்கிறோம், இம்முறை நாம் சிறப்பாக செயற்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

வெற்றி என்பது எமக்கு மிகப்பெரியது. இலங்கை கால்பந்தின் தலையெழுத்து, இலங்கையின் கால்பந்து எந்த வகையில் இருக்கும் என்பது இதில் தங்கியுள்ளது. நாம் அடுத்த தலைமுறையை கட்டியெழுப்பி, பெரிய அளவில் இளைஞர்களை மேம்படுத்துவோம். தேசிய அணி மற்றும் அவர்களின் வெற்றி இளம் கால்பந்து வீரர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்.  

இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் சில குழுநிலை போட்டிகளுக்கு இட்டுச் செல்லும். வெற்றி அல்லது தோல்வி எப்படும். இருந்தபோதும் மீக நீண்ட காலத்திற்குப் பின் இலங்கை மண்ணில் அதிக கால்பந்து போட்டிகள் வரவிருக்கின்றன. இந்த வெற்றி தெற்காசிய கால்பந்தில் மற்றொரு கட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கும்.”  என்றார்.

லாவோஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இரண்டாவது சுற்றுக்காக ஆடுவது சற்று கடினமாக இருக்கும். இரு அணிகளும் பொதுவாக 2ஆவது சுற்றில் இருந்தே தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் நிலையில் முதல் முறை முதல் சுற்றில் இருந்து போட்டியை ஆரம்பிக்கவுள்ளன.

“வன்டேஜ் எப்.ஏ கிண்ணம் 2019” நாளை ஆரம்பம்

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்து தொடரான எப்.ஏ ……

மலேசியா தனக்கு அதிகம் பரீட்சயமான டிமோர்லெஸ்டேவை எதிர்கொள்ளவுள்ளது. முந்தைய தொடரில் அந்த அணியை மலேசியா இரண்டாவது சுற்றின் குழுநிலை போட்டியில் தோற்கடித்தது.  

முந்தைய தொடரில் மகாவு அணியினால் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட கம்போடியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 2018 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின்போது பாகிஸ்தான் அணி யெமனிடம் முதல் சுற்றில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்றது.  

பூட்டான் பலம் கொண்ட குவாம் அணியை எதிர்கொள்கிறது. குவாம் தனது சொந்த மண்ணில் இந்தியா மற்றும் துர்க்மானிஸ்தானிடம் வெற்றியை பதிவு செய்துள்ளது.  

முதல் கட்ட பூர்வாங்க தகுதிகாண் முதல் சுற்று போட்டிகள் வரும் ஜூன் 6 இல் ஆரம்பமாகி அடுத்த கட்டப் போட்டி ஜூன் 11இல் நடைபெறும். இதன் ஆறு வெற்றியாளர்கள் ஆசியாவின் முன்னணி 34 அணிகளுடன் 2ஆம் சுற்று தகுதிகாண் போட்டியில் இணையும். இந்த சுற்று வரும் செப்டெம்பரில் ஆரம்பமாகும்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க  <<