ஐ.பி.எல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, 2 வருடங்களுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கவுள்ள டேல் ஸ்டெயின், 9 வருடங்களுக்குப் பிறகு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க
இலங்கையில் நடைபெற்ற சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில்…
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதன் புள்ளிகள் பட்டியலில் சென்னை சுபர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், தார்மீகரீதியான நம்பிக்கை இழந்திருக்கும் அந்த அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில், டேல் ஸ்டெயினின் வருகை இருக்கும். எனினும், அந்த அணியில் ஏற்கெனவே உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, கொலின் டி கிராண்ட்ஹோம், மார்கஸ் ஸ்டோனிஸ் இருந்தபோதிலும் பந்துவீச்சில் சிறப்பாக பங்களிப்பு ஏதும் இல்லை.
இந்த நிலையில், அந்த அணி அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான நெதன் கோல்டர்-நைல் ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியதால் ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டியில் அவர் விளையாடவில்லை.
இதன்பின்னர் அணியில் இணைய இருந்த அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான 35 வயதுடைய டேல் ஸ்டெயினை ஒப்பந்தம் செய்வதற்கு அந்த அணி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஸ்டெயின் 2 வருடங்களுக்குப் பிறகு ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கவுள்ளார். அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி பெங்களூர் அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. எனவே டேல் ஸ்டெயினின் வருகை ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சற்று வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் டேல் ஸ்டெயின் கடந்த 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணியில் விளையாடியுள்ளார். அதன்பின் 2011 ஆம் ஆண்டு டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் ஸ்டெயின் இடம்பெற்றார். அதன்பின் சன்ரைசர்ஸ் அணியிலும், குஜராத் லயன்ஸ் அணியிலும் இடம்பெற்று விளையாடிய ஸ்டெயினை கடந்த இரண்டு வருடங்களாக எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியில் களமிறங்க காத்திருக்கும் 24 வயதான மெட் கெல்லி
கொல்கத்தா அணியில் காயம் காரணமாக வெளியேறிய தென்னாபிரிக்கா அணியின்…
டேல் ஸ்டெயின் நீண்ட காலமாக காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்துவிட்டு, கடந்த வருடம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அவரது முந்தைய மிரட்டல் பந்துவீச்சு இப்போது இல்லை என்றாலும், கடைசி ஓவர்களில் எதிரணிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதற்காகவே, பெங்களூர் அணி ஸ்டெயினை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<