கொல்கத்தா அணியில் களமிறங்க காத்திருக்கும் 24 வயதான மெட் கெல்லி

245
Getty Image

கொல்கத்தா அணியில் காயம் காரணமாக வெளியேறிய தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜேக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளர் மெட் கெல்லி அவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்யை இம்முறை .பி.எல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒப்பந்தம் செய்தது. இளம் வீரரான இவர் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் .பி.எல் தொடரில் இருந்து விலகினார்.

அவருக்கு மாற்று வீரரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெட் கெல்லியை ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட வலதுகை வேகப்பந்து வீச்சாளாரான கெல்லி, இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியது கிடையாது. எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த பிக் பேஷ் டி-20 தொடரில் பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

இதுவரை 12 முதல்தர டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7.43 என்ற சராசரியுடன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இம்முறை பிக்பேஷ் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியிருந்த கெல்லி, 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தெரிவுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான மார்க் வோஹ், இம்முறை உலகக் கிண்ணத்தில் மெட் கெல்லியும் இடம்பெறவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தார்.

தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து…

இதுஇவ்வாறிருக்க, இன்று (12) டில்லி அணிக்கு எதிரான போட்டியில் மெட் கெல்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இம்முறை .பி.எல் தொடர் தொடங்கும் முன்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காயம் காரணமாக  முக்கிய வீரர்களை இழந்தது. தென்னாப்பிரிக்க வீரர் அன்ரிச் நோர்ட்ஜே தோள்பட்டை காயத்தால் வெளியேறினார். கொல்கத்தா அணியின் இளம் வீரர்களான ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இருவரும் .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக காயத்தினால் விலகிக் கொண்டனர். அதன் பின்னர், கொல்கத்தா அணி கே.சி. காரியப்பா மற்றும் சந்தீப் வார்ரியர் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்தது.   

மாவிக்கு முதுகில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இம்முறை .பி.எல் தொடரில் விளையாட முடியாமல் போனது. இதனால் அவர் குணமடைய குறைந்தபட்சம் ஆறு மாத காலம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான மாவி, தனது .பி.எல் தொடரில் கடைசியாக 9 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2018ஆம் ஆண்டு பருவகாலத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்த நாகர்கோட்டி, இந்த முறையும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.  

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான…

.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய காரியப்பா, இதுவரை 10 .பி.எல் போட்டிகளில் விளையாடி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அண்மையில் நிறைவுக்கு வந்த சையத் முஸ்தாக் அலி தொடரில், கர்நாடகா அணிக்காக 20.60 எனும் சராசரியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சுழல் பந்துவீச்சாளராக முக்கிய பங்கு வகித்தார்.  

மறுபுறத்தில் சந்தீப் வார்ரியர் கேரளாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் கடைசி பருவத்தை முடித்து மொத்தம் 44 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஞ்சி போட்டியில் முதல் தடவையாக அரையிறுதிக்கு கேரளா அணி செல்லவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.

அதன்பிறகு நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப், ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஹெட்ரிக் உட்பட, முதல் ஆறு போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எனினும், இவர்கள் இருவருக்கும் கொல்கத்தா அணியின் முதல் 6 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<