Home Tamil புனித அந்தோனியாரை வீழ்த்தி டிவிஷன் II சம்பியனாகிய றோயல் கல்லூரி

புனித அந்தோனியாரை வீழ்த்தி டிவிஷன் II சம்பியனாகிய றோயல் கல்லூரி

251

அஹான் சன்சித்த, பி.எஸ் திஸாநாயக்க மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியால் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிக்கு எதிராக இன்று நிறைவுக்கு வந்த இறுதிப் போட்டியில் றோயல் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து 19 வயதின் கீழ் பிரிவு இரண்டுக்கான (டிவிஷன் II) சம்பியனாகத் தெரிவாகியது.

Photos: Royal College vs St. Anthony’s College | U19 Div II Cricket Tournament 2018/19 – Final – Day 2

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற 2018/2019 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு இரண்டுக்கான (டிவிஷன் II) பாடசாலைகளுக்கு இடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கண்டி புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி அணிகளுக்கு இடையில் நேற்று (10) ஆரம்பமாகியது.

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

Photos: Royal College vs St. Anthony’s College | U19 Div II Cricket Tournament 2018/19 – Final – Day 1

அவ்வணி சார்பாக கல்ஹார சேனாரத்ன ஆட்டமிழக்காது சதம் கடந்து 102 ஓட்டங்களைப் பெற்று இருந்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதில் 173 பந்துகளுக்கு முகங்கொடுத்த கல்ஹார சேனாரத்ன, 13 பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

றோயல் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் மனுல பெரேரா மற்றும் கமில் மிஷார ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த றோயல் கல்லூரி அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டி போட்டியின் முழு ஆதிக்கத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

இதன்படி, 84.3 ஓவர்களுக்கு முகங்கொடுத்த அந்த அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

றோயல் கல்லூரி அணிக்காக அஹான் சன்சித்த சதம் கடந்து 116 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பி.எஸ் திஸாநாயக்க (91) மற்றும் பசிந்து சூரியபண்டார (52) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்திருந்தனர்.

பந்துவீச்சில் புனித அந்தோனியார் கல்லூரியின் என். ஜயதிலக்க 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, இம்முறை 2018/2019 பருவகாலத்திற்கான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு இரண்டுக்கான பாடசாலைகளுக்ம் இடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட றோயல் கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவாகியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result

Match drawn

Royal College
314/10 (84.3)

St. Anthony’s College
266/10 (88.5)

Batsmen R B 4s 6s SR
C Wickramasinghe c Kavindu Madarasinghe b Kavindu Pathirathne 8 13 2 0 61.54
A Wanninayake c Bagya Dissanayake b Kaushan Kulasooriya 32 63 5 0 50.79
Prabath Sachin c Kavindu Pathirathne b Kamil Mishara 15 39 2 0 38.46
T Gunasinghe c Isiwara Dissanayake b Manula Perera 3 25 0 0 12.00
T Abeykoon run out (G Dissanayake) 31 53 4 0 58.49
K Senarathna not out 102 173 13 0 58.96
L Werellagama c Isiwara Dissanayake b Kamil Mishara 6 16 0 0 37.50
M Kamil lbw b Kamil Mishara 27 76 3 0 35.53
G Ebert c Kavindu Madarasinghe b Manula Perera 6 29 1 0 20.69
S Hirudika c Ahan Sanchitha b Manula Perera 0 1 0 0 0.00
N Jayathilaka c Kaushan Kulasooriya b Kavindu Pathirathne 14 52 3 0 26.92


Extras 22 (b 10 , lb 7 , nb 3, w 2, pen 0)
Total 266/10 (88.5 Overs, RR: 2.99)
Bowling O M R W Econ
Kavindu Pathirathne 10.5 3 33 2 3.14
Lahiru Madushanka 12 2 44 0 3.67
Kamil Mishara 28 6 73 3 2.61
Manula Perera 21 7 50 3 2.38
Kaushan Kulasooriya 8 1 24 1 3.00
Gishan Balasuriya 9 1 32 0 3.56


Batsmen R B 4s 6s SR
Isiwara Dissanayake c M Kamil b N Jayathilaka 13 31 1 0 41.94
Kamil Mishara b S Hirudika 4 2 0 0 200.00
Ahan Sanchitha c T Gunasinghe b N Jayathilaka 116 148 11 0 78.38
Kavindu Madarasinghe run out () 0 10 0 0 0.00
Pasindu Sooriyabandara c M Kamil b T Abeykoon 52 49 6 2 106.12
Bagya Dissanayake c T Abeykoon b N Jayathilaka 91 153 11 0 59.48
Lahiru Madushanka c K Senarathna b T Abeykoon 1 6 0 0 16.67
Kavindu Pathirathne c K Senarathna b N Jayathilaka 10 28 2 0 35.71
Kaushan Kulasooriya b N Jayathilaka 3 8 0 0 37.50
Manula Perera c T Gunasinghe b C Wickramasinghe 5 64 0 0 7.81
Gishan Balasuriya not out 4 10 1 0 40.00


Extras 15 (b 12 , lb 0 , nb 2, w 1, pen 0)
Total 314/10 (84.3 Overs, RR: 3.72)
Bowling O M R W Econ
S Hirudika 5 0 33 1 6.60
C Wickramasinghe 6 2 17 1 2.83
N Jayathilaka 36.3 5 119 5 3.28
K Senarathna 19 2 57 0 3.00
A Wanninayake 7 1 29 0 4.14
G Ebert 3 0 28 0 9.33
T Abeykoon 8 1 20 2 2.50