பார்சிலோனாவுக்கு இலகு வெற்றி: ஜுவண்டஸ் – ஏஜெக்ஸ் மோதல் சமநிலையில்

259

ஐரோப்பியாவில் மிகவும் பிரபலமான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றின் முதல் கட்ட ஆட்டமொன்றில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடட் கழகத்தை ஸ்பெய்னின் பார்சிலோனா கழகம் வெற்றிகொண்டது.

இதேவேளை, இத்தாலியின் ஜுவண்டஸ் மற்றும் நெதர்லாந்தின் ஏஜெக்ஸ் கழகங்களுக்கு இடையிலான மற்றுமொரு காலிறுதிச் சுற்றின் முதல் கட்ட ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

பார்சிலோனா எதிர் மென்செஸ்டர் யுனைடட்

பார்சிலோனா மற்றும் மென்செஸ்டர் யுனைடட் கழகங்களுக்கு இடையிலான போட்டி இங்கிலாந்தின் ஒல்ட் ட்பேர்ட் மைதானத்தில் நேற்று (10) நடைபெற்றது.

இந்தப் போட்டி ஆரம்பித்து 12 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா கழகம் ஓன் கோல் மூலம் கோல் ஒன்றைப் பெற்றது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பக்கீர் அலி பதில்

பஹ்ரெய்னில் அண்மையில் நிறைவுக்கு…

இதன்பிரகாரம் 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியின் முதல் பாதியில் பார்சிலோனா கழகம் முன்னிலை பெற்றிருந்தது.

எனினும், மென்செஸ்டர் யுனைடட் கழகம் சார்பில் டியோகோ டலோட் தலையால் முட்டி, கோல் போடுவதற்கு முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

போட்டியின் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு முயற்சித்த போதிலும் இறுதி வரை அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

எனவே, போட்டியின் இறுதியில் முதல் பாதியில் பெற்ற கோலினால் 1 0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா கழகம் வெற்றியை தனதாக்கியது.

எனினும், இந்தப் போட்டியில் பார்சிலோனா கழகத்தின் நட்சத்திரமாகக் கருதப்படும் லியொனல் மெஸ்ஸி, தனது அதீத திறமையை வெளிப்படுத்த தவறியிருந்தார்.

அத்துடன் சம்பியன்ஸ் லீக் தொடரில் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக கோல் இலக்கிற்குள் (shot on target) பந்தை அடிப்பதற்கு மென்செஸ்டர் யுனைடட் கழகமும் தவறியிருந்தது.

இந்த நிலையில் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமாயின் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பார்சிலோனாவுக்கு எதிரான இரண்டாவது கட்ட ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு மென்செஸ்டர் யுனைடட் கழகம் தள்ளப்பட்டுள்ளது.

புரிந்துகொள்ளப்படாத ‘ஓப்-சைட்’ குறித்து அறிவோம்

அண்மையில் நிறைவுற்ற டயலொக்…

இறுதி 16 அணிகள் விளையாடிய சுற்றில் பிரான்ஸ்சின் பரிஸ் சென் ஜேர்மன் கழகத்திற்கு எதிரான இரண்டாவது கட்ட ஆட்டத்தில் விளையாடியதை போன்ற அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் மென்செஸ்டர் யுனைட்டட் கழகம் தள்ளப்பட்டுள்ளது.

பரிஸ் சென் ஜேர்மன் அணிக்கு எதிராக சொந்த மண்ணியில் 2 0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த மென்செஸ்டர் யுனைடட் கழகம், இரண்டாவது லெக் ஆட்டத்தில் 3 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது.


ஏஜெக்ஸ் எதிர் ஜுவண்டஸ்

இதேவேளை, நேற்று இடம்பெற்ற காலிறுதிச் சுற்றின் மற்றுமொரு முதலாவது கட்ட ஆட்டத்தில் நெதர்லாந்தின் ஏஜெக்ஸ் மற்றும் இத்தாலியின் ஜுவண்டஸ் கழக வீரர்கள் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர்.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவண்டஸ் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு அணியை முன்னிலை பெற வைத்தார்.

ஐந்து தடவைகள் சம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்த அவர், சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 125 ஆவது கோலைப் போட்டுள்ளார்.

மென்செஸ்டர் யுனைடட், ரியல் மெட்ரிட் மற்றும் ஜுவண்டஸ் கழகங்கள் சார்பில் அவர் இந்த 125 கோல்களையும் போட்டுள்ளார்.

எனினும், போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் கோலொன்றைப் போட்ட ஏஜெக்ஸ் கழகம் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

“வன்டேஜ் எப்.ஏ கிண்ணம் 2019” நாளை ஆரம்பம்

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த…

தொடர்ந்தும் இரண்டு அணிகளுக்கும் கோல் போடும் வாய்ப்புக்கள் கிட்டிய போதிலும் அவற்றை சரியான முறையில் கையாளுவதற்கு தவறியிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி இந்த இரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இரண்டாவது கட்ட ஆட்டம் இடம்பெறள்ளது.

2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டியில் ஏஜெக்ஸ் கழகம் விளையாடியுள்ளது.

தனது சொந்த மைதானத்தில்  இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் ஜுவண்டஸ் கழகம் மைதானத்தின் ஆதரவு இருக்கும் நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என கருதப்படுகின்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அல்லது டொட்டன்ஹேம் ஹொஸ்பர் கழகங்களில் ஒன்றுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  

ஏற்கனவே மென்செஸ்டர் சிட்டி கழகத்திற்கு எதிரான போட்டியில் டொட்டன்ஹம் ஹொஸ்பர் கழகம் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றுள்ளது.

தாம் எதிர்பார்த்த முடிவு இந்தப் போட்டியில் கிட்டவில்லை என ஏஜெக்ஸ் கழக முகாமையாளர் எரிக் டென் ஹக் கூறியுள்ளார். சிறந்த வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் ரொனால்டோ வேறுபட்ட திறமையுள்ளவர் என்பதை காண்பித்ததாக ஜுவண்டஸ் கழக முகாமையாளர் மசிமில்லினோ அலெக்றி கூறியுள்ளார்.

அவரது நகர்வு மற்றும் நேரக்கணிப்பு என்பன ஏனைய வீரர்களில் இருந்து வேறுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<