இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மாகாண மட்ட ‘சுப்பர் 4 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் பல்லேகலயில் நடைபெற்ற கொழும் மற்றும் காலி அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை குவித்தது. பின்வரிசையில் வந்த வனிந்து ஹசரங்க 56 ஓட்டங்களை பெற்றார்.
அதேபோன்று அதிரடியாக துடுப்பாடிய லஹிரு மதுஷங்க 33 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை விளாசினார்.
திசர, திமுத்தின் சிறப்பாட்டங்களினால் கண்டி அணிக்கு ஆறுதல் வெற்றி
மினோத் பானுக்க மற்றும் தனஞ்சய டி சில்வா இருவரும் மத்திய வரிசையில் முறையே 37, 34 ஓட்டங்களை பெற்றனர். தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகில தனஞ்சய காலி அணியின் வலுவான துடுப்பாட்ட வரிசையை ஆட்டங்காணச் செய்தார்.
அகில தனஞ்சய 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
மற்றொரு உலகக் கிண்ண எதிர்பார்ப்பு வீரரான அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை பெற்றார்.
இந்த இரு அணிகளும் ஏற்கனவே மாகாண மட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (11) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sandun Weerakkody | c Avisha Fernando b Asitha Fernando | 17 | 22 | 4 | 0 | 77.27 |
Lahiru Thirimanne | lbw b Shehan Jayasuriya | 6 | 15 | 1 | 0 | 40.00 |
Dhanajaya de silva | c Suranga Lakmal b Akila Dananjaya | 34 | 42 | 3 | 0 | 80.95 |
Kusal Mendis | c Avisha Fernando b Chamika Karunaratne | 11 | 28 | 1 | 0 | 39.29 |
Milinda Siriwardana | c & b Akila Dananjaya | 8 | 14 | 1 | 0 | 57.14 |
Minod Bhanuka | c Dinesh Chamdimal b Akila Dananjaya | 37 | 57 | 1 | 1 | 64.91 |
Wanindu Hasaranga | lbw b Akila Dananjaya | 56 | 60 | 6 | 0 | 93.33 |
Lahiru Madushanka | not out | 42 | 33 | 2 | 2 | 127.27 |
Dhammika Prasad | lbw b Akila Dananjaya | 6 | 10 | 1 | 0 | 60.00 |
Dushmantha Chameera | c Angelo Perera b Chamika Karunaratne | 23 | 20 | 3 | 1 | 115.00 |
Nishan Pieris | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 18 (b 0 , lb 6 , nb 1, w 11, pen 0) |
Total | 258/9 (50 Overs, RR: 5.16) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 10 | 0 | 56 | 1 | 5.60 | |
Mohammad Shiraz | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Shehan Jayasuriya | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Chamika Karunaratne | 9 | 0 | 48 | 2 | 5.33 | |
Akila Dananjaya | 10 | 0 | 53 | 5 | 5.30 | |
Seekkuge Prasanna | 10 | 0 | 39 | 0 | 3.90 | |
Kamindu Mendis | 1 | 0 | 8 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avisha Fernando | not out | 27 | 24 | 5 | 0 | 112.50 |
Upul Tharanga | not out | 15 | 19 | 2 | 0 | 78.95 |
Extras | 13 (b 0 , lb 1 , nb 0, w 12, pen 0) |
Total | 55/0 (7.1 Overs, RR: 7.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 4 | 0 | 27 | 0 | 6.75 | |
Dhammika Prasad | 3.1 | 0 | 27 | 0 | 8.71 |