FFSL தலைவர் மற்றும் சகாக்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

291

கடந்த வார இறுதியில் முக்கிய திருப்பமாக இலங்கை கால்பந்து சம்மேளனத் (FFSL) தலைவர் அநுர டி சில்வா மற்றும் சகாக்களுக்கு பதவி விலகும்படி, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆர். புவேந்திரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

“வன்டேஜ் எப்.ஏ கிண்ணம் 2019” நாளை ஆரம்பம்

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்து தொடரான எப்.ஏ கிண்ணத்தின் 2019ஆம்…

மேலும், அடுத்த நிறைவேற்று சபைக் கூட்டத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை பங்கேற்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை கால்பந்து சம்மேளனம் வன்டேஜ் FA கிண்ணத் தொடரை ஆரம்பித்துவைத்த அடுத்த தினத்தில், பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிட்டி கால்பந்து லீக் தலைவருமான ஆர். புவேந்திரன், விளையாட்டு அமைச்சரிடம் FFSL தலைவர் அனுர டி சில்வா மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

நிறைவேற்றுக் குழுவின் முடிவுகளை FFSL தலைவர் மதிப்பதில்லை என்றும் குழுவின் மூன்று உறுப்பினர்களின் ஊடாக எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் கால்பந்து விளையாட்டை பலவீனப்படுத்துவதாகவும் அவரது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

போட்டியை கட்டியெழுப்புவதற்காக FIFA மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மூலம் வழங்கப்படும் பல மில்லியன் டொலர்கள் நிதியை கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள FFSL தவறியிருப்பதாகவும் 23 வயதுக்கு உட்பட்ட AFC தகுதிகாண் போட்டிகளில் இலங்கை மூன்று போட்டிகளில் 20 கோல்களை விட்டுக்கொடுத்தது இதற்கு உதாரணம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Photos: Vantage FA Cup 2019 | Press Conference

ThePapare.com | Viraj Kothalawala | 29/03/2019 Editing and re-using images without permission…

இரண்டு ஆண்டுகளில் பிராந்திய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு FFSL தலைவர் தவறி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இந்த விளையாட்டு அபிவிருத்திக்காக சுமார் 2.5 மில்லியன் அவரது தனிப்பட்ட நிதிகள் தனது சொந்த நலனுக்காக மோசமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், FFSL தலைவரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தான் கடுமையாக அதிருப்தி அடைந்திருப்பதாகவும் புவேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆர். புவேந்திரன், விளையாட்டுத்துறை அமைச்சரிடம் விடுத்த பரிந்துரைகள்,

  • FFSL தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மூவர் இரகசியமாக கூட்டுச் சேர்ந்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதோடு அவர்கள் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும்.
  • FFSL இன் அடுத்த சபைக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்று விபரங்களை கண்டறிய வேண்டும்.

குற்றச்சாட்டுகளில் உள்ளடங்குவன,

    • கொரியா மற்றும் ஜப்பானிடம் இருந்து வழங்கப்பட்ட பல லட்சம் பெறுமதியான கால்பந்து உபகரணங்கள் உரிய தரப்பினருக்கு வழங்கப்படவில்லை.
    • அணி முகாமை தொடர்பில் SAFF தொடரின்போது வீரர்கள் செய்த முறைப்பாடு விசாரிக்கப்படவில்லை மற்றும் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • FFSL இல் இடம்பெற்ற 5 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் FFSL தலைவர் மௌனம் காக்கிறார்.
    • FIFA நிதி அங்கீகாரம் அளித்தபோதும் 6 உள்ளக புட்சால் அரங்குகள் மற்றும் முழுமையான கால்பந்து வளாகம் ஒன்றை நிர்மாணிக்க தவறியுள்ளது.
    • கடற்கரை கால்பந்து அபிவிருத்திக் குழு இயங்குவதில்லை.
    • பருவத்தை ஆரம்பிப்பதற்கு 400,000 ரூபாய் வாக்குருதி அளிக்கப்பட்ட நிலையில் சம்பியன்ஸ் லீக் அணிகளுக்கு 200,000 ரூபாவே வழங்கப்பட்டது.
    • சில அதிகாரிகளின் தேவைக்காக தொடர் மாற்றப்பட்டது.
    • கொழும்பு லீக்கின் 5 அதிகாரிகள் FFSL இல் பதவி வகிப்பது ஊழலுக்கான உதாரணமாக உள்ளது.

பங்களாதேஷிடம் போராடித் தோற்றது இலங்கை

பஹ்ரைனில் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்ட “2020 AFC கால்பந்து சம்பியன்ஷிப்” தொடருக்கான தகுதிகாண்…

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ThePapare.com இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வாவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது,

“இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். ஊடகம் காட்டுவதில் இருந்து இந்த விவாதம் வேறுபட்டது. இது பற்றி நாம் எமது அடுத்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம். கால்பந்துக்கு சிறந்ததை செய்யவும், பேச்சுவார்த்தைக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது நிறைவேற்றுக் குழு கூட்டம் திறந்தே உள்ளது.

நாம் தவறு செய்திருக்கக் கூடும். ஆனால் விளையாட்டுக்கு சேதத்தையோ திட்டமிட்ட சேதங்களையோ, விளையாட்டுக்கு எந்த பாதகத்தையும்  நிர்வாகம் செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்ளக பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாம் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம்” என்று குறிப்பிட்டார்.