16 வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகிய பிரயாஸ் ராய் பர்மன்

307
Image Courtesy - RCB Twiiter

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) வரலாற்றில் மிகவும் இளம் வயதிலேயே அறிமுகமாகிய வீரர் என்ற சாதனையை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பிரயாஸ் பர்மன் படைத்துள்ளார்.

12ஆவது .பி.எல் டி-20 தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 11ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று (31) நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.  

பல சாதனைகளைப் பதிந்த வோர்னர் – பெயார்ஸ்டோவின் இணைப்பு

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிக்கு எதிரான…

இந்தப் போட்டியில் டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பரிஸ்டோவ்வின் அதிரடி சதங்கள் மற்றும் சாதனை இணைப்பாட்டம் என்பவற்றின் மூலம் சன்ரைசஸ் அணி 118 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.  

இந்த நிலையில், ரோயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் மூலம் .பி.எல் தொடருக்கு அறிமுகமாகிய பிரயாஸ் ராய் பர்மன் மைதானத்திற்குள் கால் வைப்பதற்கு முன்பாகவே புதிய சாதனை ஒன்றை படைத்தார்.  

முதன்முறையாக .பி.எல் போட்டிகளில் விளையாடிய 16 வயது, 157 நாட்களே ஆன பிரயாஸ், .பி.எல் தொடரில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 17 வயது, 11 நாட்களில் அறிமுகமானது சாதனையாக இருந்தது. சப்ராஸ் கான் 17 வயது 177 நாட்களிலும், பிரதீப் சங்வான் 17 வயது 179 நாட்களிலும், வொஷிங்டன் சுந்தர் 17 வயது 199 நாட்களிலும் இத்தொடரில் அறிமுகமாகியுள்ளனர்.  

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற பெங்காலைச் சேர்ந்த பிரயாஸ், லெக்ஸ்பின் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கும் திறமை கொண்டவர். இதன்காரணமாக இம்முறை .பி.எல் ஏலத்தில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணி, அவரை 1.5 கோடிகளுக்கு வாங்கியது.  

ரிஷப் பாண்டிடம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட ஒலிம்பிக் நாயகன்

இந்தியாவுக்கு முதற்தடவையாக அண்மையில் வருகை தந்திருந்த …

இந்தியாவின் பெங்கால் மாநிலம், துர்காபூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரயாஸ், தனது குடும்பத்துடன் டெல்லியில் வசிந்து வருகின்றார். அவருடைய அப்பா ஒரு பொது வைத்திய நிபுணர் ஆவார். சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் அதீத திறமைமிக்கவராக இருந்த அவர், டெல்லியின் தென் பகுதியில் உள்ள கார்ஜி கல்லூரியின் கிரிக்கெட் அகெடமியில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு தனது சொந்த ஊரான துர்காபூரில் உள்ள கிரிக்கெட் மத்திய நிலையத்தில் இணைந்துகொண்ட அவர், 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்தார். இதனையடுத்து 16 வயதுக்குட்பட்ட பெங்கால் அணிக்காக விளையாடிய அவர், தனது அறிமுக போட்டித் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இடம்பிடித்தார்.

இதில் ஜம்முகாஷ்மீர் அணியுடனான தனது அறிமுகப் போட்டியில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரயாஸ், 9 போட்டிகளில் விளையாடி 4.45 என்ற சராசரியுடன் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதேநேரம், 6’1 அடி உயரத்தைக் கொண்ட பிரயாஸ், நேற்று (31) நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அவர் துடுப்பாட்டத்தில் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, கொல்கத்தாவில் உள்ள கல்யாணி பொதுப் பள்ளியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றுவரும் பிரயாஸ், ஒருசில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொருளியல் பாட பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

150kmph வேகத்தில் பந்து வீசும் இளம் இந்திய வீரர்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும்…

இந்த நிலையில், .பி.எல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட வீரராக புதிய சாதனை படைத்த பிரயாஸ், நாளை (02) நடைபெறவுள்ள ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழில்முனைவோர் பாடத்துக்கான பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்காக மீண்டும் கொல்கத்தா பயணமாகவுள்ள அவர், மறுநாள் மாலை (05) கொல்கத்தா அணியுடன் நடைபெறவுள்ள போட்டியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக பிரயாஸின் தந்தையான கௌசிக் ராய் பர்மன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மிக குறைந்த வயதில் .பி.எல் தொடரில் கால் பதித்த வீரர்கள்

பிரயாஸ் ராய் பர்மன் – 16 வயது 157 நாட்கள்

முஜிப் உர் ரஹ்மான் – 17 வயது, 11 நாட்கள்

சப்ராஸ் கான் – 17 வயது 177 நாட்கள்

பிரதீப் சங்வான் – 17 வயது 179 நாட்கள்

வொசிங்டன் சுந்தர் – 17 வயது – 199 நாட்கள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க