பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதிப்பு

461
Image - ICC

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பந்துவீசுவதற்கு தாமதமாகிய காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ICC) அவ்வணிக்கும் அதன் தலைவருக்கும் அபராதம் விதித்துள்ளது. மேலும் .சி.சி யினால் அதன் அணித்தலைவர் இமாட் வஸீமுக்கு  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆபித், ரிஸ்வானின் சதங்கள் வீண்; 6 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா த்ரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள்…

உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு இன்னும் ஒருசில மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதற்கான அணிகளை தெரிவு செய்யும் முக்கிய ஒருநாள் தொடராக பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்று தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது.

தொடரின் முதல் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி 4-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் முழுமையாக பாகிஸ்தான் அணியை வைட் வொஷ் செய்யும் முனைப்புடன் அவுஸ்திரேலிய அணியும், வைட் வொஷ்ஷிலிருந்து தப்பித்து ஆறுதல் வெற்றிபெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணியும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இன்று (31) மோதுகின்றன.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரின் நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று முன்தினம் (29) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 6 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. குறித்த ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக சுகைப் மலிக் நியமிக்கப்பட்டிருந்தாலும், அன்று நடைபெற்ற போட்டியில் சுகைப் மலிக் விளையாடாததன் காரணமாக பாக். அணியின் தலைவராக சகலதுறை வீரர் இமாட் வஸீம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு நிலையில் குறித்த போட்டியின் போது அவுஸ்திரேலிய அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடுகின்ற போது பாகிஸ்தான் அணியினர் பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிகளின் பிரகாரம் குறித்த நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களையும் வீச தவறிய காரணத்தினால் குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்ட இமாட் வஸீம் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் .சி.சி யினால்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித்தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின் படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர்கள் வீசுவதற்காக ஒரு அணிக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் அணியால் 49 ஓவர்கள் மாத்திரமே வீச முடிந்தது. இதன் காரணமாக மீதியாக காணப்பட்ட ஒரு ஓவரையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும், குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

உலகக் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் தொடரில் ஆர்ச்சரை ஒத்திகை பார்க்கவுள்ள இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட…

 

அதன் படி பாக்கிஸ்தான் அணியின் தலைவரான இமாட் வஸீமுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீத அபராத தொகையும்இ ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும் .சி.சி யினால் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாக். அணி சார்பாக இரண்டு வீரர்கள் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை குறித்த போட்டியின் கள நடுவர்களான குமார் தர்மசேன, ராஷிட் ரியாஸ், மூன்றாம் நடுவர் மிச்செல் கோஹ் மற்றும் நான்காம் நடுவர் அஹ்ஸன் ராஸா ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான ஜெப் க்ரோவ் மூலமாக .சி.சி யினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் பாகிஸ்தான் அணித்தலைவவர் இமாட் வஸீம் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக  மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் .சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், அணித்தலைவர் என்ற ரீதியில் இமாட் வஸீமினால் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இவ்வாறான குறைந்த பந்துவீச்சுப் பிரதி பதிவு செய்யப்படுமானால் அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவார் என்பதையும் .சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<