கிரான்ட்ஸ்லாம் கெரமில் சஹீட், ரொஷிட்டாவுக்குத் தோல்வி

177

இலங்கையின் கெரம் விளையாட்டில் முன்னணி வீரர்களுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற கிராண்ட்ஸ்லாம் கெரம் வல்லவர் போட்டிகள் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தன. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டங்களை இலங்கை விமானப்படை அணி வெற்றிகொண்டது.

ஐந்து தடவைகள் தேசிய கெரம் சம்பியனாகிய ரொஷிட்டா

இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு மத்தியில் எடுத்துச்…..

தெஹிவளைகளுபோவில கெரம் சம்மேளனத்தில் நடைபெற்ற இம்முறை கிராண்ட்ஸ்லாம் கெரம் வல்லவர் போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் 8 இடங்களில் உள்ள வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதன்படி, விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்களும், ஒரு வீராங்கனையும், இராணுவப்படையைச் சேர்ந்த 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் போட்டியிட்டனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு தேசிய சம்பியனான சஹீட் ஹில்மியை 2-1 என்ற ஆட்டங்கள் கணக்கில் வெற்றிகொண்ட விமானப்படை வீரர் உதேஷ் சந்திம பெரேரா முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவானார். இப்போட்டியில் சஹீட் ஹில்மியை 25-7, 15-25, 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் உதேஷ் சந்திம வெற்றிகொண்டார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தேசிய கெரம் சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றவரும், நடப்பு உலக கெரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை 2-1 என்ற ஆட்டங்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, கெரம் கிராண்ட்ஸ்லாம் வல்லவர் போட்டிகளின் நடப்புச் சம்பியனான கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி, கடந்த மாதம் நடைபெற்ற தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதல்தடவையாக சம்பியனாகத் தெரிவாகியதுடன், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார்.

கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியை திறந்து வைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் உள்ளடங்களாக……

இதேரேம், பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் கடற்படையைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டாவை 2-0 என்ற நேர் ஆட்டங்கள் கணக்கில் விமானப்படையச் சேர்ந்த சலனி லக்மாலி வெற்றிகொண்டார். குறித்த போட்டியில் 25-0, 25-24 என்ற புள்ளிகள் அடிப்படையில் சலனி வெற்றிகொண்டு சம்பியனாகத் தெரிவானார்.

இதில் அண்மைக்காலமாக தேசிய, சர்வதேச மட்டப் கெரம் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் பேசும் வீராங்கனையான ஜோசப் ரொஷிட்டா, அண்மையில் நிறைவுக்குவந்த சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் சம்பின் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டித் தொடருக்குப் பிறகு இலங்கை கெரம் சம்மேளனத்தினால் கெரம் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலும் உள்ள வீர வீராங்கனைகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆண்கள் பிரிவு

1.உதேஷ் சந்திம பெரேரா (விமானப்படை), 2. சுஹீட் ஹில்மி (கொழும்பு றோயல் கல்லூரி), 3. தினெத் துலக்ஷன (விமானப்படை), 4. ஹசித அநுருத்த (விமானப்படை), 5. நிஷாந்த பெர்னாண்டோ (கடற்படை), 6. அனஸ் அஹமட் (இராணுவப்படை), 7. எவோன் விக்ரமசிங்க (விமானப்படை), 8. எம். ஷெரிப்டீன் (இராணுவப்படை)  

பெண்கள் பிரிவு

1.சலனி ல்கமாலி லியனகே (விமானப்படை), 2. ஜோசப் ரொஷிட்டா (கடற்படை), 3. எம். சித்ராதேவி (இராணுவப்படை), 4. மதுவன்தி குணதாச (இராணுவப்படை), 5. ரெபேகா டெல்ரின் (இராணுவப்படை), 6. மதுகா தில்ஹானி (இராணுவப்படை), 7. தஸ்மிலா காவின்தி (நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரி), 8. சசிக்கா சந்தமாலி (இராணுவப்படை)

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<