மட்டக்களப்பு சிவானந்தா அணியினை வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ்

428
Eastern Province Division II

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) அனுமதியோடு, கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கம் (EPCA) பிரிவு 2 (டிவிஷன் – II) கழக அணிகள் இடையே ஒழுங்கு செய்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினை 75 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கின்றது.  

துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனத்தால் தொடரை முழுமையாக இழந்த இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவதும்…

கிழக்கு மாகாணத்தின் ஆறு கழக அணிகள் பங்குபெறுகின்ற இத்தொடரில், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டு கழக அணியும், மட்டக்களப்பு சிவானந்தா கழக அணியும் மோதிய போட்டி ஞாயிற்றுக்கிழமை (24) வந்தாறுமூலை பல்கலைக்கழக  மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் தலைவர் MS. நளீம் தனது தரப்பிற்காக முதல் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டு கழகம், 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த AGM. பாஸில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை குவிக்க, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் வந்த MS. நவ்சாத் 39 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சிவானந்தா விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சு சார்பாக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான S. தவகீசன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், M. துஷியதிரன் 3 விக்கெட்டுகளையும், R. சஞ்சீவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

Photo Album – EPCA Division – II Tournament – Eravur YHSC vs Batticaloa Sivananda SC

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 212 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சிவானந்தா விளையாட்டுக் கழக அணி, 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 141 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

சிவானந்தா விளையாட்டு கழக அணியின் துடுப்பாட்டத்தில் கனிஷ்டன் 29 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சில் அதிரடியான முறையில் செயற்பட்ட AAM. இஹ்கான் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்,    MS. நவ்சாத் மற்றும் இஹ்சான்  ருகைம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும்  சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 216 (45.1) AGM. பாஸில் 62, MS. நவ்சாத் 39, MI. ஸ்லாசா 33, S. தவகீசன் 30/4, S. துஷியதிரன் 41/3, R. சஞ்சீவ் 67/2

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகம் – 141 (41.1) M. கனிஷ்டன் 29, AAM. இஹ்கான் 27/3,  MS.  நவ்சாத் 28/2,  இஹ்சான் ருஹைம் 29/2

முடிவு – ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டு விளையாட்டுக் கழகம் 75 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<