சமநிலையடைந்த புனித செர்வதியஸ், புனித தோமையார் கல்லூரிகள் இடையிலான சமர்

182

மாத்தறையின் புனித செர்வதியஸ் கல்லூரி மற்றும் புனித தோமையர் கல்லூரி ஆகியவை இடையே 119ஆவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும், நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் பெரும் போட்டிகளில் ஒன்றான இந்த நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (24) மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் ஆரம்பமானது.

றிச்மன்ட் கல்லூரிக்கு எதிரான ஒரு நாள் சமரில் மஹிந்த கல்லூரி வெற்றி

கிரிக்கெட் விளையாட்டின்…

மூன்று நாட்கள் கொண்ட போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித செர்வதியஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாடி, தமது முதல் இன்னிங்ஸினை 351 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டிருந்த போது இடைநிறுத்திக் கொண்டது. புனித செர்வதியஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் ருசிரு லக்வின் (128*) மற்றும் சிஹான் கலிந்து (114) ஆகியோர் சதங்கள் விளாசியிருந்தனர்.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித தோமையார் கல்லூரி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 428 ஓட்டங்களுடன் இமாலய மொத்த ஓட்டங்களை பதிவு செய்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

புனித தோமையார் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் ஹரிந்து ஜயசேகர சதமொன்றுடன் 105 ஓட்டங்களை குவிக்க, கிசாந்திக்க ஜயவீர (85), ஹிரந்த லக்ஷான் (74), மற்றும் மிஹிசால் அமோத (58) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், புனித செர்வதியஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் செத்க தெனுவன் மற்றும்  சரித் ஹர்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர். இதன் பின்னர் 77 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த புனித செர்வதியஸ் கல்லூரி அணி 151 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

சுராஜ் ரன்திவின் மிரட்டும் பந்துவீச்சில் தப்பிய புளூம்பீல்ட்

இலங்கை கிரிக்கெட் சபையின்…

புனித செர்வதியஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் செத்க தெனுவான் 44 ஓட்டங்களையும், சஷிக்க துல்ஷான் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித செர்வதியஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 75 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித தோமையார் கல்லூரி அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைந்ததது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்த மாலிங்க

இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள…

இந்த ஆண்டுக்கான நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருப்பதால் அதன் வெற்றிக் கிண்ணத்தை தொடர்ந்து மாத்தறை தோமையார் கல்லூரி அணியே தக்கவைத்துக் கொள்கின்றது.

  • போட்டி முடிவு ஆட்டம் சமநிலை அடைந்தது

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 351/6d (79) நுசிரு லக்வின் 128*, சிஹான் கலிந்து 114, சஷிக்க துல்ஷான் 45, ஹிரன்த லக்ஷான் 2/17, சச்சிர ரஷ்மிக்க 2/78

புனித தோமையர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 428/8d (147.1) ஹரிந்து ஜயசேகர 105, கிசாந்திக ஜயவீர 85, ஹிரன்த லக்ஷான் 74, மிஹிசால் அமோத 58, செத்க தெனுவன் 2/41

புனித செர்வதியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 151/4d (36.5) செத்க தெனுவான் 44, சஷிக்க துல்ஷான் 40

புனித தோமையர் கல்லூரி – 10/0 (2)