கெப்டன் சோமசுந்தரம் வெற்றிக்கிண்ணத்திற்கு ஏபி – திருநெல்வேலி அணிகள் பலப்பரீட்சை

301

கெப்டன் சோமசுந்தரம் வெற்றிக்கிண்ணத்திற்காக ஜொலி ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திவரும் T20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகமும், ஏபி விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

முதலாவது தகுதிப் போட்டி

முதலாவது தகுதிப் போட்டியில்,  குழு “A” இல்  முதலாவது இடத்தினை தமதாக்கிய திருநெல்வேலி அணியும், குழு “B” இன் சம்பியன்களான ஜொலி ஸ்டார்ஸ் அணியும் போட்டியிட்டிருந்தன.

Photos: AB vs Grasshoppers | Play offs | Captain Somasundaram Trophy 2019

ThePapare.com | Saravanan Murugaiah | 18/03/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be..

அதன் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்டார்ஸ் அணிக்கு மணிவண்ணன், சந்தோஷ் இணை 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து வலுவானதொரு அடித்தளமிட்டனர்.

எனினும், தொடர்ந்துவந்த வீரர்கள் தீபநந்தன், தர்சிகன் இருவரது பந்து வீச்சுக்கும் வேகமாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க அவ்வணியினர் 163 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர். மத்திய வரிசையில் சஜிகன் மாத்திரம் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் அசத்திய தீபநந்தன் 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர் பதிலுற்கு துடுப்பெடுத்தாட களம்நுழைந்த திருநெல்வேலி அணியின் முதல் 3 விக்கெட்டுகளும் வெறுமனே 22 ஓட்டங்களிற்கு சாய்க்கப்பட்டபோதும், நான்காவது விக்கெட்டிற்காக சிவராஜ், பிரபவன் இணை 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து துடுப்பெடுத்தாடுக்கொண்டிருக்கையில் 81 ஓட்டங்களுடன் ரண் அவுட்  முறையில் சிவராஜ் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து சுரேந்திரன் ஓட்டங்களேதுமின்றியும் பிரபவன் 36 ஓட்டங்களுடனும் பிரசன்னாவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது.

தொடர்ந்தும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட 19 ஓவர்கள் நிறைவில் திருநெல்வேலி அணி 149 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அனுரதன் 3 பந்துகளில் 11 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க  திருநெல்வேலி அணி இறுதிப் போட்டிக்கான முதலாவது அணியாக தமது பெயரினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜொலி ஸ்டார்ஸ் 183/9 (20) – மணிவண்ணன் 59,சந்தோஷ் 23, சஜிகன் 24, தீபநந்தன் 4/23, தர்சிகன் 2/19, சுரேந்திரன் 2/30

திருநெல்வேலி 164/8 (19.3) – சிவராஜ் 81, பிரபவன் 36, அனுரதன் 11, ஜனார்த்தனா 2/23, கோபிராம் 2/28, பிரசன்னா 2/44

போட்டி முடிவு – 2 விக்கெட்டுகளால் திருநெல்வேலி அணி வெற்றி

ஆட்டநாயகன்சிவராஜ் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்)

விலகல் போட்டி

தத்தமது குழுக்களில் இரண்டாவது இடத்தினை பிடித்த கிறாஸ்ஹொப்பேர்ஸ், ஏபி அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்ற, அவர்கள் 11 ஓவர்களில் 54 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். பின்வரிசையில் ஜனந்தனின் ஆட்டமிழக்காத 43 ஓட்டங்களின் உதவியுடன் 127 என்ற வெற்றியிலக்கினை நிர்ணயித்தனர் கிறாஸ்ஹொப்பேர்ஸ்.

பந்துவீச்சில் லிங்கநாதன் 3 விக்கெட்டுகளையும், ராகுல், சிலோஜன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

பதிலிற்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஏபி அணியினரின் முதல் 5 விக்கெட்டுகளையும் வெறுமனே ஒரு ஓட்டத்திற்கு சாய்த்தனர் ஜனந்தன், மதுசன் இணை. ஆறாம் இலக்கத்தில் களமிறங்கிய உத்தமகுமரன் அரைச்சதமொன்றினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, தொடந்துவந்த லிங்கநாதன், சிலோஜனின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க 5 பந்துகள் மீதமாக இருக்கையில் ஏபி அணியினர் வெற்றியிலக்கினை அடைந்தனர்.

பந்துவீச்சில் மதுசன் 4 விக்கெட்டுகளையும், ஜனந்தன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கிறாஸ்ஹொப்பேர்ஸ் 126/8 (20 ) – ஜனந்தன் 43*,லிங்கநாதன்  22/ 3, ராகுலன் 2/7,சிலோஜன் 2/20,

ஏபி 127/9 (19.1) – உத்தமகுமரன் 56, லிங்கநாதன் 18,மதுசன் 4/16, ஜனந்தன் 3/28, டிலோசன் 2/20

போட்டி முடிவு – 1 விக்கெட்டால் ஏபி அணி வெற்றி

ஆட்டநாயகன்உத்தமகுமரன் (ஏபி விளையாட்டுக் கழகம்)

இரண்டாவது தகுதிப்போட்டி

முதலாவது தகுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்த ஜொலிஸ்டார்ஸ் அணியும் விலகல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த ஏபி அணியும் இரண்டாவது தகுதிப் போட்டியில் மோதின.

Photos : Thirunelvely CC vs AB SC | Captain Somasuntharam Trophy 2019

ThePapare.com | Murugaiah Saravanan | 27/02/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be…

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று  ஜொலிஸ்டார்ஸ் அணி 28 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கையில், ஐந்தாவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த அருண்குமார், டிலக்சன் இணை 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருக்கையில் டிலக்சன் 45 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்திலிருந்த அருண்குமாரின் 97 ஓட்டங்களுடன் ஜொலிஸ்டார்ஸ் அணி 168 என்ற வெற்றியிலக்கினை நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய ஏபி அணிக்கு ஒரு முனையில் ஞானா நிலைத்திருக்க, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட வண்ணம் இருந்தது.

ஞானாவின் 43 ஓட்டங்கள் விஷ்ணுவின் 24 ஓட்டங்களினதும் துணையுடன் வெற்றியிலக்கினை நோக்கி நகர்ந்த ஏபி இறுதியில் பார்த்தீபனது பெறுமதியான 11 ஓட்டங்களுடன் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுளைந்தனர் ஏபி அணியினர்.

பந்துவீச்சில் பிரசன்னா 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

ஜொலிஸ்ரார்ஸ் 167/5(20) – அருண்குமார் 97*, டிலக்சன் 43, லிங்கநாதன் 4/15

ஏபி 165/9 (20) – ஞானா 45, விஷ்ணு 24, ஆதி 16, பிரசன்னா 3/39, கோபிராம் 2/34

போட்டி முடிவு ஒரு விக்கெட்டால் ஏபி அணி வெற்றி

ஆட்டநாயகன்அருண்குமார் (ஜொலிஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்)

எனவே, நாளை சனிக்கிழமை(23) மாலை ஒரு மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள கெப்டன் சோமசுந்தரம் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் ஏபி, திருநெல்வேலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

போட்டி அறிக்கை மற்றும் புகைப்படங்களிற்கு thepapare.com உடன் இணைந்திருங்கள்.