ருசிரு, சிஹான் ஆகியோரின் சதத்தினால் வலுப்பெற்றிருக்கும் புனித செர்வதியஸ் கல்லூரி

162

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் பாடசாலை அணிகள் இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டிகள் மூன்று இன்றைய நாளில் ஆரம்பமாகின.

மாத்தறை புனித தோமியர் கல்லூரி எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி

மாத்தறை மாவட்டத்தின் பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளான புனித தோமையார் கல்லூரி மற்றும் புனித செர்வதியஸ் கல்லூரி அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட இந்த 119ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (22) உயன்வத்தை மைதானத்தில் ஆரம்பமாகியது.

சகோதரர்களின் சமர் டி-20 போட்டியிலும் தர்ஸ்டன் கல்லூரிக்கு வெற்றி

தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த டி20 கிரிக்கெட்…

நீலங்களின் சமர் என அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய புனித செர்வதியஸ் கல்லூரி அணிக்கு ருசிரு லக்வின் மற்றும் சிஹான் கலிந்து ஆகியோர் சதம் கடந்து உதவினர். இந்த இரண்டு வீரர்களினதும் சத உதவிகளோடு மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி அணி 351 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வலுவாக காணப்பட்டிருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

புனித செர்வதியஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் ருசிரு லக்வின் 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, சிஹான் கலிந்து 114 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், புனித தோமையார் கல்லூரி அணியின் பந்துவீச்சில் ஹிரன்த லக்ஷன் மற்றும் சச்சிர ரஷ்மிக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித தோமையார் கல்லூரி அணி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 351/6d (79) ருசிரு லக்வின் 128*, சிஹான் கலிந்து 114 சஷிக்க துல்ஷான் 45, ஹிரந்த லக்ஷான் 2/17, சச்சிர ரஷ்மிக்க 2/78

புனித தோமையார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 28/2 (9)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மலியதேவ கல்லூரி எதிர் புனித ஏன்ஸ் கல்லூரி

குருநாகல் பாடசாலைகளான மலியதேவ கல்லூரி மற்றும் புனித ஏன்ஸ் கல்லூரி இடையிலான இந்த கிரிக்கெட் பெரும் போட்டி, குருநாகல் வெலகதர மைதானத்தில் 36ஆவது தடவையாக ஆரம்பமானது.

இங்கிலாந்து பிராந்திய கழகத்தில் திமுத் கருணாரத்ன விளையாடுவதில் சிக்கல்

இங்கிலாந்தின் உள்ளூர் கழகமான ஹெம்ஷையர் அணியுடன்…

குன்றுகளின் சமர் என அழைக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித ஏன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மலியதேவ அணிக்காக வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மலியதேவ அணியினர் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். மலியதேவ அணியின் துடுப்பாட்டத்தில் சாலுக்க அத்தபத்து 48 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய புனித ஏன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் றிசித பெரேரா 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

Photos: Maliyadeva College vs St. Annes College | 36th Battle of The Rocks | Day 1

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித ஏன்ஸ் கல்லூரி அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 140 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது. துடுப்பாட்டத்தில் கவிந்து ரணசிங்க அரைச்சதம் ஒன்றுடன் 64 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 172 (53) சாலுக்க அத்தபத்து 48, விதாத் படபொல 32, றிசித பெரேரா 4/15, பசிந்து தென்னக்கோன் 3/53

புனித ஏன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 139/4 (40) கவிந்து ரணசிங்க 64

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

ஸ்ரீ சுமங்கல கல்லூரி எதிர் மொரட்டுவ மகா வித்தியாலயம்

பாணந்துறை ஸ்ரீ் சுமங்கல கல்லூரி மற்றும் மொரட்டுவ மகா வித்தியாலயம் ஆகியவை இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டி இன்று 67ஆவது தடவையாக மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் ஆரம்பமானது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் இந்தியன் ப்ரீமியர் லீக்

சர்வதேச போட்டிகளுக்கு நிகரான கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும்…

தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 192 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தரன டி சில்வா 71 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஜனிது இந்துவர 51 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், மொரட்டுவ மகா வித்தியாலய பந்துவீச்சில் சமால்ஷ பெர்னாந்து 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: 67th Battle of the Gold | Sri Sumangala College vs Moratu Maha Vidyalaya – Day 1

இதன் பின்னர் தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த மொரட்டுவ மகா வித்தியாலயம் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.

மொரட்டுவ வித்தியாலய அணிக்கு ஏற்கனவே பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சமால்ஷ பெர்னாந்து 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று நம்பிக்கை தர, ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அனுக் ஜயசிங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஸ்ரீ சுமங்கல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 192 (67.4) தரன டி சில்வா 71, ஜனிது இந்துவர 51, சமால்ஷ பெர்னாந்து 10/2

மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 75/6 (28) சமால்ஷ பெர்னாந்து 23*, அனுக் ஜயசிங்க 3/26

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்