மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்

398

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கும், SSC அணி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

முன்னதாக இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் SSC அணி சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தினை டக்வத் லூவிஸ் முறையில் 36 ஓட்டங்களால் தோற்கடித்திருந்ததோடு, கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றைய அரையிறுதிப் போட்டியில் சோனகர் கிரிக்கெட் கழகத்தினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்தது.

திமுத் கருணாரத்னவின் சதத்தால் CCC உடனான இறுதிப் போட்டிக்கு SSC தகுதி

இலங்கை பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் ….

இதன் பின்னர் இன்று (18) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழக அணித்தலைவர் அஷான் பிரியஞ்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த டில்ஷான் முனவீர சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார். மொத்தமாக, 49 பந்துகளை எதிர்கொண்ட முனவீர 4 பெளண்டரிகள் உடன் 40 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் மத்திய வரிசையில் களம் வந்த மினோத் பானுக்க மற்றும் மலிந்த வர்ணபுர ஆகியோரும் தமது துடுப்பாட்டம் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்கு பெறுமதி சேர்த்தனர்.

Photos: SSC vs CCC | Major Limited Over Tournament 2018/19 – Finals

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு கொழும்பு கிரிக்கெட் கழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டத்தில் மினோத் பானுக்க 58 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை குவிக்க, மலிந்த வர்ணபுர 39 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் SSC அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப்பந்து வீச்சாளரான ஹிமேஷ் ராமநாயக்க 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தான் சுபர் லீக் தொடரை பாகிஸ்தானில் நடாத்த திட்டம்

பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரின் நான்காவது பருவகாலப் போட்டிகள்….

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட  251 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய SSC அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகிய இருவரும் சதங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் சதத்தின் உதவிகளோடு SSC அணி போட்டியின் வெற்றி இலக்கினை 44.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 254 ஓட்டங்களுடன் அடைந்தது.

SSC அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு உதவிய தனுஷ்க குணத்திலக்க, உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் தனது 7ஆவது சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதேநேரம், சந்துன் வீரக்கொடி  உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் பெற்ற தனது கன்னி சதத்துடன் 97 பந்துகளில் 14 பெளண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றி SSC அணிக்கு அழுத்தம் தர முனைந்திருந்த போதிலும் அவரது முயற்சி வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்









Title





Full Scorecard

Colombo Cricket Club

250/8

(50 overs)

Result

Singhalese Sports Club

254/3

(44.2 overs)

SSC won by 7 wickets

Colombo Cricket Club’s Innings

Batting R B
Dilshan Munaweera b T Rathnayake 40 49
Ron Chandraguptha b D Prasad 19 30
Ashan Priyanjan b A Senarathne 11 22
Madawa Warnapura c S Weerakkody b S Senanayake 39 62
Minod Bhanuka (runout) D Gunathilaka 49 58
Wanindu Hasaranga b H Ramanayake 25 24
Lasith Abeyrathne c D Karunarathne b H Ramanayake 11 16
Lahiru Madushanka c D Karunarathne b N Pradeep 23 20
Sonal Dinusha not out 7 12
Malinda Pushpakumara not out 6 7
Extras
20 (b 2, lb 7, w 11)
Total
250/8 (50 overs)
Fall of Wickets:
1-46 (RK Chandraguptha, 9.3 ov), 2-74 (EMDY Munaweera, 16.2 ov), 3-78 (SMA Priyanjan, 17.5 ov), 4-162 (MS Warnapura, 34.5 ov), 5-172 (M Bhanuka, 38.5 ov), 6-200 (PWH de Silva, 42.2 ov), 7-212 (L Abeyratne, 44.1 ov), 8-240 (LD Madushanka, 47.5 ov)
Bowling O M R W E
Dhammika Prasad 9 0 51 1 5.67
Nuwan Pradeep 9 0 42 1 4.67
Tharindu Rathnayake 8 0 39 1 4.88
Akash Senarathne 7 0 41 1 5.86
Sachithra Senanayake 10 0 36 1 3.60
Himesh Ramanayake 6 0 26 2 4.33
Shammu Ashan 1 0 6 0 6.00

Singhalese Sports Club’s Innings

Batting R B
Danushka Gunathilaka lbw by M Pushpakumara 116 123
Sandun Weerakkody st M Bhanuka b A Priyanjan 101 97
Dimuth Karunarathne not out 20 21
Sachithra Senanayake c L Madushanka b W Hasaranga 3 11
Kaushal Silva not out 8 14
Extras
6 (lb 2, w 4)
Total
254/3 (44.2 overs)
Fall of Wickets:
1-212 (MD Gunathilaka, 35.4 ov), 2-228 (DS Weerakkody, 38.4 ov), 3-233 (SMSM Senanayake, 40.4 ov)
Bowling O M R W E
Lahiru Gamage 6 0 40 0 6.67
Ashan Priyanjan 10 0 42 1 4.20
Dilshan Munaweera 6 0 37 0 6.17
Malinda Pushpakumara 9 0 59 1 6.56
Wanindu Hasaranga 8 0 27 1 3.38
Lahiru Madushanka 3 0 20 0 6.67
Madawa Warnapura 1 0 11 0 11.00
Sonal Dinusha 1 0 12 0 12.00
Lasith Abeyrathne 0.2 0 4 0 20.00







>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<