சச்சிந்த சேனநாயக்கவின் துடுப்பாட்டத்தோடு வலுப்பெற்றுள்ள தர்மராஜ கல்லூரி

166

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தினை அலங்கரிக்கும் இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளுக்கு இடையிலான மூன்று மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இன்று (15) ஆரம்பமாகியது.

மஹிந்த கல்லூரி எதிர் றிச்மன்ட் கல்லூரி

காலியின் பிரல்யமிக்க பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்கவை தென்னாபிரிக்க…

“காதலர்களின் வாக்குவாதம்” (Lover’s Quarrel) என அழைக்கப்படும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி 114ஆவது தடவையாக இந்த ஆண்டு இடம்பெறுகின்றது. இந்த கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற றிச்மன்ட் கல்லூரி அணி முதலில் மஹிந்த கல்லூரி வீரர்களை துடுப்பாட அழைத்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி அணியினர் 63.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 197 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் பெற்றுக் கொண்டனர். மஹிந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக நிப்புன் மாலிங்க 44 ஓட்டங்களை குவித்து தனிநபர் அதிக ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். அதேநேரம் மஹிந்த கல்லூரி அணிக்காக கௌஷித கொடித்துவக்கு 37 ஓட்டங்களுடன் சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் றிச்மன்ட் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக திலும் சுதீர 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற, சந்துன் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

Photos: Richmond College vs Mahinda College – 114th Lovers’ Quarrel | Day 1

அதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய றிச்மன்ட் கல்லூரி அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. றிச்மன்ட் கல்லூரி அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் சந்துன் மெண்டிஸ் 20 ஓட்டங்களுடன் நம்பிக்கை தருகின்றார்.

அதேவேளை, மஹிந்த கல்லூரி அணிக்காக கெளஷான் மதுஷ 3 விக்கெட்டுக்களையும், அஷேன் கந்தம்பி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 197 (63.3)நிப்புன் மாலிங்க 44, கௌஷித கொடித்துவக்கு 37, திலும் சுதீர 5/49, சந்துன் மெண்டிஸ் 3/53, திமுத் சந்தருவன் 2/33

றிச்மன்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 99/6 (33)சந்துன் மெண்டிஸ் 20*, கெளஷான் மதுஷ 3/15, அஷேன கந்தம்பி 2/08

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்


கிங்ஸ்வூட் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

கண்டியின் பாடசாலைகளான தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (15) பல்லேகல சர்வதேச மைதானத்தில் 113ஆவது தடவையாக ஆரம்பமானது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை…

இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியில் நாணய சுழற்சி வென்ற கண்டி தர்மராஜ கல்லூரி அணி, கிங்ஸ்வூட் வீரர்களை முதலில் துடுப்பாட பணித்தது.

இதன் அடிப்படையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ்வூட் கல்லூரி அணி, 142 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறைவு செய்து கொண்டது. கிங்ஸ்வூட் அணியின் துடுப்பாட்டத்தில் வீணுக்க புஷ்பபிட்டிய 30 ஓட்டங்களுடன் தனிநபர் அதிக ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, துஷான் ஹேரத், யாசிஹ் அம்ரரான்க மற்றும் உபேந்திர வர்ணகுலசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் தர்மராஜ கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கைப்பற்றினர்.

Photos: Dharmaraja College vs Kingswood College – 113th Battle of the Maroons | Day 1

இதன் பின்னர் போட்டியில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 125 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் சசிந்த சேனநாயக்க 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, துலாஜ் பண்டார தர்மராஜ கல்லூரி அணிக்கு 37 ஓட்டங்களுடன் வலுச் சேர்த்திருந்தார்.

முதல் நாள் சுருக்கம்

கிங்ஸ்வூட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 142 (50.3) – வீணுக்க புஷ்பபிட்டிய 30, துஷான் ஹேரத் 3/24, யாசிஹ் அம்ராரன்க 3/27, உபேந்திர வர்ணகுலசூரிய 3/44

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 125/2 (41.5)சசிந்த சேனநாயக்க 71*, துலாஜ் பண்டார 37

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி மொரட்டுவ சொய்ஸா மைதானத்தில் இன்று 69ஆவது தடவையாக ஆரம்பமாகியது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் சுவாத் மெண்டிஸ் அரைச்சதம் ஒன்றுடன் 78 ஓட்டங்களை குவிக்க தினுர பெர்னாந்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேநேரம் புனித செபஸ்டியன் கல்லூரி அணியின் பந்துவீச்சில் நுவனிது பெர்னாந்து 4 விக்கெட்டுக்களை சாய்க்க, விஹாங்க மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் மற்றும் செபஸ்டியன் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து காணப்பட்டது.

முதல் நாள் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 194 (78.5) – சுவாத் மெண்டிஸ் 78, தினுர பெர்னாந்து 44, விஹாங்க மெண்டிஸ் 2/21, ப்ரவீன் கூரே 2/32

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 43/1 (17)

போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க