இந்திய கிரிக்கெட் அணி அனுமதி பெற்றுக்கொண்டு தான் போட்டியின்போது இராணுவ தொப்பியை அணிந்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ராஞ்சியில் நடைபெற்றது.
இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய அவுஸ்திரேலியா
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (13) நடைபெற்ற தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும்
இந்தப் போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்பு படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இராணுவ தொப்பியை அணிந்து விளையாடினார்கள். இந்தப் போட்டிக்கான ஊதியத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் முடிவு செய்தனர்.
எனினும், குறித்த தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆரம்பமாகியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டி அணிந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதுஇவ்வறிருக்க, ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், அந்நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் தகவல்துறை அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல்–ஹக் கூறுகையில், ”நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணி. இது அரசியல் விவகாரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசியலையும் ஒன்றாக கலக்கக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, அவஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறையிட்டது.
சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியுடன் மஹேந்திர சிங் டோனிக்கு திடீர் ஓய்வு
அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டிகளுக்கான குழாமிலிருந்து
முன்னதாக, இங்கிலாந்து வீரர் மொயின் அலி, தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் கிரிக்கெட்டில் அரசியல் மற்றும் ஆன்மீக விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் மைதானத்தில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்டதைக் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் சபை இவ்வாறு ஐசிசியிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில் க்ரிக் இன்போ இணையத்தளத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் இஷான் மனி கூறியதாவது,
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை நாங்கள் ஐசிசி கூட்டத்தில் கடுமையாக எழுப்புவோம். எங்கள் நிலைப்பாடு குறித்து ஐசிசிக்கு எந்தவிதமான தவறான புரிதலும் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பது அரசியலோடு கலக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். கிரிக்கெட் உலகில் பிசிசிஐயின் நம்பகத்தன்மை மிகவும் மோசமாக இருக்கிறது.
கிரிக்கெட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்கு, அவ்வாறு செயல்பட்ட சிலர் மீதும் ஏற்கனவே ஐசிசி நடவடிக்கை எடுத்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
உதாரணமாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து, காசாவை பாதுகாப்போம் என்ற பெயரில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கையில் கறுப்பு பேண்ட் ஒன்று அணிந்து விளையாடினார். இதனையடுத்து அருக்கு ஐ.சி.சியினால் தடைவிதிக்கப்பட்டது.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 68
டி கொக்கின் அபார சதத்தின் உதவியுடன் இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, டேவிட்வில்லியின் அதிரடி
அதேபோல, தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், பாகிஸ்தானின் பொப் பாடகர் ஜுனைட் ஜம்சீத் ஆதரவாக ஜேர்சிக்கு உள்ளே மற்றுமொரு ஜேர்சி அணிந்துகொண்டு கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டியில் விளையாடியதால் அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது.
எனவே, மொயின் அலி, இம்ரான் தாஹிர் மீது ஐசிசி அப்போது எவ்வாறான நடவடிக்கை எடுத்ததோ அதே நடவடிக்கையை இப்போது இந்திய கிரிக்கெட் அணி மீதும் எடுக்க வேண்டும். இந்தப் போட்டிக்கு ஐசிசியிடம் அனுமதி பெற்றாலும், நடத்தப்பட்ட நோக்கமும், நடந்து கொண்ட விதமும் வேறானது.
ஏற்கனவே ஐசிசிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம். எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசியலுக்காக கிரிக்கெட்டை பயன்படுத்தவும் இல்லை”. இவ்வாறு இஷர்ன் மனி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குறித்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கருத்து வெளியிடுகையில், ”புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவவே அந்த போட்டியில் நாங்கள் இராணுவ தொப்பி அணிந்தோம். அந்தப் போட்டியில் கிடைத்த ஊதியத்தையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க அனைத்து வீரர்களும் முடிவு செய்தோம். அதனால்தான் இராணுவ தொப்பி அணிந்து, வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விளையாடினோம்” என தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, இராணுவ தொப்பி அணிந்து விளையாடிய விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) கடந்த திங்கட்கிழமை (11) விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஐ.சி.சி. பொதுமேலாளர் கிளைர் புர்லாங் விடுத்துள்ள அறிக்கையில், ”புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும், நிதி திரட்டும் நோக்கிலும் இராணுவ தொப்பியை அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் சபை சார்பில் ஐ.சி.சி.யிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது” என்று தெரிக்கப்பட்டுள்ளது.
BCCI புதிய ஒப்பந்தத்தில் பும்ராஹ், ரிஷப் பான்ட் ஆகியோருக்கு அதிக சம்பளம்
இந்திய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா
முன்னதாக இது குறித்து புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. எனினும், ஐ.சி.சி பதிலளித்த பின்பும் இது ஏற்புடையதாக இல்லை. அனுமதி வாங்கியது ஒரு விடயத்துக்கு, செயல்படுத்தியது வேறொரு விடயம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இஸான் மனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் புல்வாமா தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளை ஆதரிக்கக்கூடாது என்றும், உலகக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானை புறக்கணிக்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் சபை ஐசிசியிடம் வலியுறுத்தியிருந்தது.
எனினும், இம்மாத முற்பகுதியில் டுபாயில் நடைபெற்ற ஐ.சி.சியின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஏற்க ஐ.சி.சி மறுத்துவிட்டது.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விடயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெறும் உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க