இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

730

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கான தென்னாபிரிக்க குழாத்தில் ஹசிம் அம்லா, எய்டன் மர்க்ரம் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மழையின் பின்னர் போட்டியின் திசை மாறிவிட்டது: லசித் மாலிங்க

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் …

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் உலகக் கிண்ண தொடருக்கான குழாத்தை உறுதிசெய்யும் வகையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்குமான குழாத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த குழாத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் ஓய்வளிக்கப்பட்டிருந்த, அனுபவ துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்குமான குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவருடன் மற்றுமொரு அனுபவ துடுப்பாட்ட வீரரான ஜேபி டுமினி நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். தோற்பட்டை உபாதை காரணமாக, கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இவர், உள்ளூர் ஒருநாள் தொடரில் (மொமெண்டம் ஒருநாள் தொடர்) கோப் கோப்ராஸ் அணிக்காக இரண்டு அரைச்சதங்களை விளாசி உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

ஜேபி டுமினியின் அழைப்பு குறித்து தேர்வுக்குழுவின் அமைப்பாளர் லிண்டா ஷொண்டி குறிப்பிடுகையில், “உலகக் கிண்ணம் போன்ற தொடருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் அவசியம். டுமினியின் வருகை அணிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேநேரம், அவர் எவ்வாறு இந்தப் போட்டிகளில் பிரகாசிப்பார் என்பதை எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

Photos: Sri Lanka vs South Africa – 3rd ODI

ThePapare.com | 10/03/2019 | Editing and re-using images without …

அனுபவ வீரர்கள் இருவர் அணிக்கு திரும்பியுள்ள அதேநேரம், கடந்த சில மாதங்களாக ஓட்டங்களை குவிக்க தவறிவந்த எய்டன் மர்க்ரம், உள்ளூர் தொடரான மொமெண்டம் ஒருநாள் கிண்ணத் தொடரில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். மர்க்ரம் மொமெண்டம் கிண்ணத் தொடரில் 85, 139 மற்றும் 169 என ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதுதொடர்பில் லிண்டா ஷொண்டி குறிப்பிடுகையில், “எய்டன் மர்க்கரம், டுமினி மற்றும் ப்ரிட்டோரியஸ் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்து வருகின்றனர். இவர்களுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சர்வதேச மட்ட போட்டிகளில் பிரகாசிக்க வேண்டும். அதேநேரம், அடுத்த இரண்டு போட்டிகளிலும் உலகக் கிண்ண குழாத்தை தெரிவுசெய்வற்கான வீரர்கள் மாற்றங்களை ஏற்படுத்துவோம்” என்றார்.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் பிரகாசிக்க தவறிய வியாம் முல்டர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரீஷா ஹென்ரிக்ஸ் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க குழாம்

பாப் டு ப்ளெசிஸ் (தலைவர்), ஹசிம் அம்லா, குயிண்டன் டி கொக், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நொர்டிஜே, எண்டில் பெஹெலுக்வாயோ, டவைன் ப்ரிட்டோரியஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் செம்ஷி, டேல் ஸ்டெய்ன், ரஸ்ஸி வென் டெர் டசன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…